நரியம்பாறை புதியகாவு தேவி கோயில்
நரியம்பாறை புதியகாவு தேவி கோயில் இந்தியாவின் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பனாவிற்கு அருகில் நரியம்பாறையில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும்.[1] இக்கோயில் கட்டப்பனா - குட்டிக்கானம் மாநில நெடுஞ்சாலையில் கட்டப்பனாவில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
வரலாறு
தொகுஇக்கோயில் கல்லூரத் குடும்பத்தாரின் குடும்பக்கோயிலாகும். இது வைக்கம் மூத்தேடத்து தேவி கோயிலுடன் தொடர்புடையது. அது தொடர்பாக ஒரு கதை உள்ளது. கல்லூரத் குடும்பத்தாரின் மூத்த உறுப்பினரான கௌரி குட்டப்பனின் தாத்தா மூத்தேடத்து தேவியின் தீவிர விசுவாசி ஆவார். அத்துடன் அவர் மூத்தேடத்து தேவி கோயிலின் வெளிச்சப்பாடும் ஆவார். அவருக்குப் பின் அடுத்த தலைமுறையினர் வெளிச்சப்படு பதவியை ஏற்கவில்லை. அச்சூழலில் தாத்தா இறந்த பிறகு, கௌரி குட்டப்பன் தனது வாளைப் பெற்றார்.
குட்டப்பனுடன் திருமணமான பின்பு கௌரி கட்டப்பனாவில் குடியேறினார். இந்தக் காலக்கட்டத்தில்தான் கௌரி குட்டப்பன் தீபம் ஏற்றி வாளை வழிபட ஆரம்பித்தார். அப்போது அவர்கள் நோய், வறுமை போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டனர். ஆதலால் மறைந்த குட்டப்பன் தேவபிரசன்னம் நடத்தினார். அப்போது தேவி காட்சி தந்தார். தேவிக்கு வீட்டிற்கு வெளியில் தங்குமிடம் தேவைப்பட்டது. எனவே 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மறைந்த குட்டப்பன் ஒரு சிறிய கட்டிடத்தை கட்டினார். இருப்பினும் அவருக்கு முறையாக ஒரு கோயில் கட்டவேண்டும் என்ற விருப்பம் இருந்தது.
1989ஆம் ஆண்டு கே.கே.தங்கப்பன் தலைமையில் கல்லூரத் குடும்பத்தினர் புதிய கோயிலைக் கட்டினர். அக்குடும்பத்தின் உறுப்பினர்கள் கோயிலை நிர்வகிப்பதில் பொதுமக்களையும் ஈடுபடுத்தினர். 51 அண்டை வீட்டாரை நிர்வாகக் குழுவாகத் தேர்ந்தெடுத்தனர்.
திருவிழாக்கள்
தொகுஇக்கோயிலில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறுகின்ற கும்ப பரணி விழா மிகவும் குறிப்பிடத்தக்க திருவிழாவாகும்.