கட்டப்பனை
கட்டப்பனை (கட்டப்பன) என்னும் சிறு பட்டணம் கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. மூணார், தேக்கடி ஆகிய முக்கிய ஊர்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
ஞள்ளானி ஏலம் எனும் உயர்தர ஏலக்காய் வகையை உருவாக்கி உலகப்புகழ் பெற்ற செபாஸ்டியன் ஜோசப் ஞள்ளானி இங்கே வாழ்ந்தவர்.
பிரபல தமிழ், மலையாள எழுத்தாளரும் தமிழ் திரை நடிகருமான ஷாஜி சென் கட்டப்பனையில் பிறந்து வளர்ந்தவர். தமிழிலும் மலையாளத்திலும் அவர் எழுதிய 'சினிமா வெறியின் 40 ஆண்டுகள்' எனும் புத்தகத்தில் திரைப்படம் மற்றும் இசை சார்ந்த கட்டப்பனையில் வரலாற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்.
பொருளாதாரம்
தொகுஇங்கு மிளகு, ஏலக்காய், காபி, கொக்கோ முதலியவற்றை பயிரிடுகின்றனர்.
போக்குவரத்து
தொகு- கோட்டயத்தில் இருந்து கட்டப்பனைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோட்டயத்தில் இருந்து கட்டப்பனைக்கு, பாலை – தொடுபுழா இடுக்கி வழியும், பாலை - ஈராற்றுபேட்டை, வாகமண் வழியும், காஞ்ஞிரப்பள்ளி – முண்டக்கயம் – குட்டிக்கானம் – ஏலப்பாறை வழியும் உண்டு. எறணாகுளத்தில் இருந்து தொடுபுழா வழியாகவும், கோதமங்கலம், கரிம்பன், தங்கமணி, நாலுமுக்கு, இரட்டையாறு வழியாகவும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- அருகில் உள்ள விமான நிலையம்: கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம், கொச்சி
- அருகில் உள்ள ரயில் நிலையம்: கோட்டயம், ஆலுவா, மதுரை, தேனி ரயில் நிலையங்கள்
சான்றுகள்
தொகு
இணைப்புகள்
தொகு- இடுக்கி மாவட்ட தளம் பரணிடப்பட்டது 2013-07-24 at the வந்தவழி இயந்திரம்