ஷாஜி சென் (ஷாஜி / ஷாஜி சென்னை என்றும் அழைக்கப்படுகிறார்) ஓர் இந்திய எழுத்தாளர் மற்றும் நடிகர். ஷாஜியின் முக்கிய எழுத்துப் பகுதி இசை மற்றும் சினிமா தொடர்பானது. தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதும் ஷாஜி, தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப் படங்களில் நடிக்கிறார்.

Shaji Chen
பிறப்புகட்டப்பனை, இடுக்கி மாவட்டம், கேரளம், இந்தியா
பணிWriter, actor

எழுத்து தொகு

இசை மற்றும் திரைப்படம் தொடர்பான எழுத்துக்கும் அனுபவக் குறிப்பு சார்ந்த கட்டுரைகளுக்காகப் பெயர்பெற்றவர். தி இந்து,[1] டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டுடே, ஏவி மேக்ஸ், ஆனந்த விகடன், தி இந்து தமிழ், உயிர்மை,[2] காலச்சுவடு,[3] தீராநதி, விகடன் தடம், ஆகிய இதழ்களில் இவரது பல்வேறு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. காலம், குங்குமம், புதிய தலைமுறை, சண்டே இந்தியன், அந்திமழை, படச்சுருள், பாஷாபோஷிணி, மாத்ருபூமி, மாத்யமம், சந்திரிகா, கலகௌமுதி, மலையாளம் வாரிகா [4] மங்களம் ஆகிய இதழ்களில் இவரது பல்வேறு கட்டுரைகள் வெளியாகியுள்ளன [5].

Music Beyond Words என்ற தொடரில் இவர் எழுதிய கட்டுரைகளை தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்லில் அடங்காத இசை என்ற பெயரில் தமிழுக்கு மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கிய இதழான உயிர்மையில் வெளியிடப்பட்ட இது தமிழ் தீவிர இலக்கியத்தில் பிரபலமான ஒரு தொடராகும். கட்டுரையாகும். தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் ஷாஜியின் பல கட்டுரைகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பின் முதல் சில வருடங்களுக்குப் பிறகு ஷாஜி நேரடியாக தமிழில் எழுதத் தொடங்கினார். 2016இல் இவரது இசை தொடர்பான கட்டுரைகளின் முழுத் தொகுப்பை விகடன் பிரசுரம் வெளியிட்டது.[6][7] 2023 சென்னை புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக்ஸ் வெளியிட்ட இவரது இசை தொடர்பான கட்டுரைகளின் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட தொகுப்பை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மணி ரத்னம், மிஷ்கின், சீனு ராமசாமி, வசந்தபாலன் மற்றும் நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் அறிமுகம் செய்து ஒப்புதல் அளித்தனர்.

மலையாள வார இதழான சந்திரிகாவில் பாட்டினப்புறம் (பாடலுக்கு அப்பால்) என்ற இவரது கட்டுரைத் தொடர் வெளியானது. மலையாளத்தில் இவரது முதல் புத்தகம், 'பாட்டல்லா சங்கீதம்', கிரீன் புக்ஸ் [8] வெளியிட்டது.[9] இவரது பல மலையாளக் கட்டுரைகள் மலையாளத்தின் பாரம்பரியம் மிக்க இலக்கிய இதழான பாஷாபோஷிணி தான் வெளியிட்டது.[10][11][12] இவரது கட்டுரைத் தொடரான சினிமா பிராந்தின்டே நால்பது வர்ஷங்கள் (சினிமா வெறியின் 40 ஆண்டுகள்) 2017இல் இரண்டு ஆண்டு காலம் பாஷாபோஷிணி வெளியிட்டது. இந்தத் தொடரின் சில பகுதிகள் மலையாள மனோரமா ஆன்லைனிலும் வெளியிடப்பட்டன.[13] 2019 அக்டோபரில், மாத்ருபூமி புக்ஸ் இந்தத் தொடரை புத்தகமாக வெளியிட்டது.[14] வெளியான முதல் வாரத்திலேயே இது அதிகம் விற்பனையான புத்தகமாக [15] மாறியது.

தேசிய நாளிதழ்களான டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்து, டெக்கான் குரோனிக்கிள், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் [16][17] ஆகியவற்றில் ஓர் இசை விமர்சகராக ஷாஜி பலமுறை தோன்றியுள்ளார். தமிழில் அவரது கட்டுரைத் தொடரான 'சினிமா வெறியின் 40 ஆண்டுகள்' [18] விகடன் தடம் இதழில் வெளியானது. இதன் கடைசி 2 அத்தியாயங்கள் அந்திமழை இதழிலும் வெளியானது. அந்திமழை மாத இதழில் முள்ளரும்பு மரங்கள், உயிர்மை மாத இதழில் இசையெழுத்து ஆகிய பத்திகளையும் எழுதியுள்ளார். மலையாளத்தில் Truecopythink என்ற இணைய இதழ்தான் 2020இல் இருந்து இவரது பெரும்பாலான எழுத்துக்களை வெளியிடுகிறது.

நூல் பட்டியல் தொகு

தலைப்பு மொழி
சொல்லில் அடங்காத இசை [19] தமிழ்
இசையின் தனிமை [20] தமிழ்
இசையின் ஒளியில் [21] தமிழ்
இசை திரை வாழ்கை [22] தமிழ்
ஷாஜி இசைக்கட்டுரைகள் [23] தமிழ்
பாட்டல்ல சங்கீதம் [24] மலையாளம்
சினிமா பிரந்தின்டே 40 வர்ஷங்கள் மலையாளம்
சினிமா வெறியின் 40 ஆண்டுகள் தமிழ்
திரும்பிப் பார்க்கையில் தமிழ்
ஷாஜி இசைக்கட்டுரைகள் முழுத்தொகுப்பு தமிழ்

திரை நடிப்பு தொகு

2013 இல், ஷாஜி சென், மிஷ்கின் இயக்கிய [25] ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தமிழ்த் திரைப்படத்தில் சி பி சி ஐ டி லால் எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் இவர் மான் கராத்தே என்ற தமிழ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த கதாநாயகப் பாத்திரத்தின் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்தார்.[26] ஆரண்யம் [27][28] இவரது அடுத்த தமிழ்த் திரைப்படமாகும். வினீத் ஸ்ரீனிவாசன் நடித்த 'எபி' மூலம் மலையாளத் திரையில் அறிமுகமானார்.[29] மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் [30] (தமிழ்) / டிடெக்டிவ் (தெலுங்கு / டாஷிங் டிடெக்டிவ் (இந்தி), ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் ( தெலுங்கு & தமிழ்) [31], மிஷ்கின் எழுதி தயாரித்த சவரக்கத்தி ஆகியவற்றில் நடித்தார். துப்பறிவாளனில் ஏ சி பி விஜயகுமார் என்ற முக்கிய கேரக்டரில் நடித்தார். ஸ்பைடர் திரைப்படத்தில் உளவுத்துறையின் தலைவரான மேத்யூஸ் கதாபாத்திரத்தில் நடித்தார். சவரகத்தியில் மனநலம் பாதிக்கப்பட்டு தெருவில் அலையும் ஒருவராக நடித்தார். சீனு ராமசாமி இயக்கிய கண்ணே கலைமானே படத்தில் வங்கி மேலாளர் மாத்ருபூதம் வேடத்தில் நடித்தார். VZ துரை இயக்கிய இருட்டு படத்தில் காட்டு மயானத்தில் வாழும் முஸ்லீம் முனிவராக நடித்தார். மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் அதிதி ராவ் ஹைதாரி நடித்த கதாநாயகியின் தந்தையாக வந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் இல் துன்பத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் ஓட்டுநராக நடித்தார்[32]. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் சூழ்ச்சி செய்யும் உள்துறை அமைச்சராக நடித்தார்[32]. சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் படத்தில் ரியல் எஸ்டேட் மோசடி மோசடி செய்யும் மாதவன் பாத்திரமாக ஷாஜி நடித்தார். ஆர். அஜய் ஞானமுத்து இயக்கிய கோப்ராவில் (2022) மிர்னாளினி ரவி நடித்த கதாநாயகியின் தந்தையாக வந்தார். விக்ரம் சுகுமாரன் இயக்கிய இராவண கோட்டம் படத்தில் நேர்மையான மாவட்ட ஆட்சியராக ஷாஜி நடித்தார். லிஜின் ஜோஸ் இயக்கும் சேர (மலையாளம்), வசந்தபாலன் இயக்கும் தலமைச் செயலகம், மு.மாறன் இயக்கும் பிளாக் மெயில், சூரி-கார்த்திக் இயக்கும் ஹிட்லிஸ்ட், டி ஜெ ஞானவேல் இயக்கும் ரஜினிகாந்த் படமான வேட்டையன், மிஷ்கின் இயக்கும் ட்ரைன் ஆகியவை இவருடைய வெளிவரவிருக்கும் படங்கள்.

திரைப்படவியல் தொகு

 

இசை துறையில் தொகு

ஷாஜி சென் இந்திய மற்றும் சர்வதேச இசை நிறுவனங்களான Magnasound Records, Saregama HMV போன்றவற்றில் கலைஞர்கள் மற்றும் திறமை மேலாளர், இசைப் பதிவு மேலாளர், சந்தைப்படுத்தல் மேலாளர், இசை ஆலோசகர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார்.

விளம்பரத் துறையில் தொகு

பல ஆண்டுகள் விளம்பரத் துறையில் கதைக்கரு, வசனங்கள், ஜிங்கிள் பாடல்கள் மற்றும் மொழிபெயர்ப்புகளை எழுதுபாவராக பணியாற்றியுள்ளார். பல விளம்பரத் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப் பிரச்சாரங்களை எழுதியுள்ளார். ஃபோர்டு, ஸெயின்ட்-கோபைன் கிளாஸ், சவுத் இந்தியன் வங்கி,[34] முத்தூட் ஃபின்கார்ப், நிப்போ [35] நிப்பான், ஏசியன் பெயின்ட்ஸ், வோடஃபோன் போன்ற நிறுவனங்களுக்காகப் பணியாற்றினார். சில விளம்பரப் படங்களில் நடித்துமிருக்கிறார்.

தன்னார்வ தொண்டு தொகு

பிரபல இந்திய இசை மேதை சலில் சௌதரியின் பெயரில் அமைக்கப்பட்ட சலில் சௌத்ரி இசை அறக்கட்டளையின் தென்னிந்திய அறங்காவலராக உள்ளார் ஷாஜி சென். ரித்விக் கட்டக் மெமோரியல் [36] டிரஸ்ட்டின் தென்னிந்தியப் பிரதிநிதியாகவும் இருக்கிறார்.[37][38] தமிழ் எழுத்தாளர் சுஜாதாவின் பெயரில் நிறுவப்பட்ட சுஜாதா இலக்கிய விருதின் நடுவராக இருந்துள்ளார்.[39] குழந்தைகளுக்கான முறைசாராக் கல்வி மற்றும் சிறப்புக் குழந்தைகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர். நிலையான இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தின் ஆதரவாளராகவும் உள்ளார்.[40][41]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

ஷாஜி சென், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் தமிழக எல்லையில் உள்ள கட்டப்பனாவில் பிறந்தார். மனைவி மற்றும் மகளுடன் சென்னையில் வசிக்கிறார்.[சான்று தேவை]

குறிப்புகள் தொகு

  1. thrki. "The Hindu : Magazine / People : Flawless harmony in his music". The Hindu.
  2. "உயிர்மை". uyirmmai.blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 8 September 2017.
  3. "Kalachuvadu | ஷாஜி, உனது ஜாதி?". www.kalachuvadu.com. Archived from the original on 22 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 8 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Michael Jackson-Malayalam-Shaji Chennai.pdf | Powered By Box". app.box.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2017.
  5. "Ellavarum Paadukayaanu by Shaji Chennai.pdf | Powered By Box". app.box.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2017.
  6. "ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத்தொகுப்பு " Buy Tamil book ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத்தொகுப்பு online". noolulagam.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2017.
  7. "Vikatan Store – Tamil eBooks – Arts, Spiritual, History, Science, Health, Medicine, Stories, Education, Competitive Exams, Finance, etc". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 8 September 2017.
  8. "Sreenivas performs at Shaji Chennai's book launch in Kochi". http://timesofindia.indiatimes.com/entertainment/events/kochi/Sreenivas-performs-at-Shaji-Chennais-book-launch-in-Kochi/articleshow/47222656.cms. 
  9. "Pattalla sangeetham – Study – Green Books India Pvt Ltd – Publishers of Quality Books in Kerala". greenbooksindia.com. Archived from the original on 22 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 8 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Shaji -BP ANNUAL 15 ARTICLE.pdf | Powered By Box". app.box.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2017.
  11. "BOB MAL BP FULL.pdf | Powered By Box". app.box.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2017.
  12. "Mahendrajaalam by Shaji Chennai from Bhasahposhini .pdf | Powered By Box". app.box.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2017.
  13. "CINEMAPIRANTHUKAL". manoramaonline.com. பார்க்கப்பட்ட நாள் 17 January 2018.
  14. "സിനിമാപ്രാന്തിന്റെ 40 വർഷങ്ങൾ". buybooks.mathrubhumi.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.
  15. "Best Sellers - Buy Malayalam Books Online | Mathrubhumi Books". buybooks.mathrubhumi.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.
  16. "Clipping of Express Publications – The New Indian Express-Kochi". http://epaper.newindianexpress.com/c/5275756. 
  17. "All Great Music Is Melancholy". shevlinsebastian.blogspot.in. 16 May 2015. பார்க்கப்பட்ட நாள் 6 September 2017.
  18. "சினிமா வெறியின் 40 ஆண்டுகள் – ஷாஜி | 40 years Cinema – Vikatan Thadam | விகடன் தடம்". 1 July 2018. https://www.vikatan.com/thadam/2018-jul-01/column/142169-40-years-cinema.html. 
  19. சொல்லில் அடங்காத இசை. 2007. https://books.google.com/books?id=9hE6QwAACAAJ. 
  20. "இசையின் தனிமை by ஷாஜி - Shaaji eBook for iPhone". booktrip.info. Archived from the original on 11 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  21. ஷாஜி, Śāji. "Icaiyin̲ oḷiyil / Śāji". nlb.gov.sg.
  22. "இசை திரை வாழ்க்கை". Panuval Book Store. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017.
  23. "ஷாஜி இசைக்கட்டுரைகள்". CommonFolks. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017.
  24. "Pattalla sangeetham – Study – Green Books India Pvt Ltd – Publishers of Quality Books in Kerala". greenbooksindia.com. Archived from the original on 22 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  25. "Onaayum Aattukkuttiyum: Wolf-whistle for Mysskin". http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/onaayum-aattukkuttiyum-wolfwhistle-for-mysskin/article5179238.ece. 
  26. NAME, YOUR. "Maan Karate – Karate Cost". Karate Choices. பார்க்கப்பட்ட நாள் 5 September 2017.
  27. "Aaranyam Movie Review, Trailer, & Show timings at Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 8 September 2017.
  28. "Aaranyam Movie Review | Nettv4u.com". http://www.nettv4u.com/movie-review/tamil/aaranyam. 
  29. "ABY Malayalam Movie DVD and VCD Released – Indian Entertainment Portal". indianentertainmentportal.com. 10 April 2017. பார்க்கப்பட்ட நாள் 8 September 2017.
  30. Naveen, Movie (22 May 2017). "Vishal's 'Thupparivalan' story revealed". mykollywood.com. Archived from the original on 5 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 5 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  31. "Spyder Movie Review {2/5}: The writing lets the movie down entirely after a point". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 27 September 2017.
  32. 32.0 32.1 "WATCH : "Beast" Actor Opened About The Question He Asked To Nelson!! - Chennai Memes" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-19.
  33. "Sivakarthikeyan-Nelson's Doctor will roll from Dec 6 - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-16.
  34. Thoughts naction (17 October 2013), fullfill your dreams, பார்க்கப்பட்ட நாள் 6 September 2017
  35. Nippo Power (7 February 2017), Nippo torch ad, பார்க்கப்பட்ட நாள் 6 September 2017
  36. "The Times Group". The Times of India. Archived from the original on 7 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 5 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  37. "90th Birth Anniversary of Ritwik Ghatak". facebook.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2017.
  38. "Bengal remembers Ritwik Ghatak on his 90th Birthday". uniindia.com.
  39. "தமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்". uyirmmai.com. Archived from the original on 26 ஏப்ரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 8 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  40. "Marina Books". www.-img1.marinabooks.com. Archived from the original on 8 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 6 July 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  41. "மூலிகை முன்றில் – மாற்று வாழ்வியலுக்கான ஒன்றுகூடல் (தருமபுரி – 28 பிப்ரவரி 2015)". பார்க்கப்பட்ட நாள் 8 September 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாஜி_சென்&oldid=3944682" இலிருந்து மீள்விக்கப்பட்டது