பீஸ்ட் (ஆங்கில மொழி: Beast) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரத்தை எழுத்தாளர் ஸ்டான் லீ மற்றும் கலைஞர் ஜாக் கிர்பி ஆகியோர் உருவாக்கினர். இவரின் முதல் தோற்றம் செப்டம்பர் 1963 இல் அன்கேனி எக்ஸ் மென் #1 இல் இருந்து தோற்றுவிக்கப்பட்டது. இவர் எக்ஸ்-மென் அணியின் முக்கியமான உறுப்பினர் மற்றும் அவென்ஜர்ஸ், டிபெண்டெர்ஸ் அணி உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

பீஸ்ட்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுஅன்கேனி எக்ஸ் மென் #1 (செப்டம்பர் 1963)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ (எழுத்தாளர்)
ஜாக் கிர்பி (கலைஞர்)
கதை தகவல்கள்
இனங்கள்மனித விகாரி
குழு இணைப்புஎக்ஸ்-மென்
அவென்ஜர்ஸ்
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்நீல கொரில்லா
திறன்கள்
  • அதி புத்திசாலி
  • மிருகம் போன்ற உடல் பண்புகள், கூர்மையான நகங்கள் மற்றும் பற்கள்.

பீஸ்ட் இன் பாத்திரம் மனிதன் மற்றும் மிருக தோற்றமும் இருந்தபோதிலும் அவர் கலை மற்றும் அறிவியலில் ஒரு புத்திசாலித்தனமாகவும் மற்றும் போர் யுக்திகளில் சிறந்தவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த பாத்திரம் இயங்குபட தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் உள்ளிட்ட ஊடகத் தழுவல்களிலும் தோன்றியுள்ளது. நடிகர் ஸ்டீவ் பேசிக் என்பவர் சிறப்பு தோற்றமாக எக்ஸ்-மென் 2 (2003) என்ற திரைப்படத்திலும் நடிகர் கெல்சி கிராமர் என்பவர் எக்ஸ்-மென் 3 (2006), எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று (2014) திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவரின் இளம் வயது காதாபாத்திரத்தில் நடிகர் நிக்கோலசு ஹோல்ட் என்பவர் எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் (2011),[1] எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று (2014),[2] எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் (2016),[3][4] சிறப்பு தோற்றமாக டெட்பூல் 2 (2018),[5] எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் (2019)[6] போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Beast and Banshee Cast for X-Men: First Class". Superhero Hype!. 2010-07-08. http://www.superherohype.com/news/articles/103601-beast-and-banshee-cast-for-x-men-first-class. பார்த்த நாள்: 2010-07-08. 
  2. Singer, Bryan (November 27, 2012). "I'd like to officially welcome back James McAvoy, Jennifer Lawrence, Michael Fassbender, & Nicholas Hoult to #XMEN for #DaysOfFuturePast". Twitter. Archived from the original on March 6, 2014. பார்க்கப்பட்ட நாள் March 12, 2013.
  3. "'X-Men: Apocalypse': Who will return? What new mutants may appear? Scoop on the next X-Men film -- Exclusive". Entertainment Weekly. April 11, 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-04-11.
  4. Malkin, Marc (March 14, 2015). "SXSW 2015: Nicholas Hoult Talks About His X-Men Future". E Online.
  5. Davis, Brandon (May 18, 2018). "Simon Kinberg Directed That Hilarious 'Deadpool 2' Scene". ComicBook.com. Archived from the original on May 19, 2018. பார்க்கப்பட்ட நாள் May 19, 2018.
  6. https://deadline.com/2017/06/x-men-dark-phoenix-jennifer-lawrence-michael-fassbender-james-mcavoy-simon-kinberg-1202113290/. {{cite web}}: Missing or empty |title= (help)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீஸ்ட்&oldid=3328304" இலிருந்து மீள்விக்கப்பட்டது