வேட்டையன் (திரைப்படம்)

(வேட்டையன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேட்டையன் (Vettaiyan) என்பது 2024 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இந்த அதிரடி நாடகத் திரைப்படத்தை டி. ஜே. ஞானவேல் இயக்கினார்.[4] சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம் தயாரித்தது. இப்படத்தில் இரசினிகாந்து முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, அமிதாப் பச்சன் (இவரது தமிழ் அறிமுகம்) பகத் பாசில், இரானா தக்குபாடி, மஞ்சு வாரியர், இரித்திகா சிங், துசாரா விச்சயன், ரோகிணி, இராவ் இரமேசு, அபிராமி, இரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தனர்.

வேட்டையன் (திரைப்படம்)
Theatrical release poster
இயக்கம்த. செ. ஞானவேல்
தயாரிப்புசுபாஸ்கரன் அல்லிராஜா
கதைத. செ. ஞானவேல்
பி. கிருத்திகா
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். ஆர். கதிர்
படத்தொகுப்புபிலோமின் ராஜ்
கலையகம்லைக்கா தயாரிப்பகம்
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவீசு
வெளியீடு10 அக்டோபர் 2024 (2024-10-10)
ஓட்டம்163 நிமிடங்கள்[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு₹300 கோடி[2][3]

இத்திரைப்படம் மார்ச்சு 2023 இல் தலைவர் 170 என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டது. இது இரசினிகாந்துடன் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 170 வது படம் என்பதால், அதிகாரப்பூர்வ தலைப்பு 2023 திசம்பரில் அறிவிக்கப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி 2023 அக்டோபரில் தொடங்கி 2024 ஆகத்து மாதம் முடிவடைந்தது. திருவனந்தபுரம், திருநெல்வேலி, சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்தார். எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவை மேற்கொண்டார். பிலோமின் இராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். தயாரிப்பு வரவு செலவு ₹160 கோடியாக இருந்தது.

வேட்டையன் 2024 அக்டோபர் 10 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் ஆயுத பூசை, விஜயதசமி போன்ற விழாக்களுக்கு முந்தைய வெளியீடாக வந்தது.

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rajinikanth's 'Vettaiyan' censored U/A; final runtime revealed!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 October 2024. Archived from the original on 7 October 2024. பார்க்கப்பட்ட நாள் 4 October 2024.
  2. Menon, Akhila (8 October 2024). "Vettaiyan budget: Director TJ Gnanavel makes a big revelation about Rajinikanth's film". OTTPlay. Archived from the original on 9 October 2024. பார்க்கப்பட்ட நாள் 9 October 2024.
  3. "Vettaiyan box office collection: Rajinikanth-starrer crosses Indian 2's pre-booking collections before release, yet to overtake Jailer". The Indian Express (in ஆங்கிலம்). 2024-10-09. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  4. "வேட்டையன்: ரஜினிகாந்த், அமிதாப் உடனான அனுபவம் எப்படி இருந்தது? த.செ.ஞானவேல் பேட்டி". BBC News தமிழ். 2024-10-09. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  5. "Abhirami starts dubbing for Rajinikanth's Vettaiyan". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 28 July 2024. Archived from the original on 28 August 2024. பார்க்கப்பட்ட நாள் 29 August 2024.
  6. Thalaivar வந்து நிக்கும் போது ஒரு Magic நடக்கும் | Vettaiyan Exclusive Interview |Shaji Chen |Rajini. லைக்கா தயாரிப்பகம். 17 September 2024. Archived from the original on 4 October 2024. பார்க்கப்பட்ட நாள் 23 September 2024 – via யூடியூப்.
  7. "Vettaiyan Prevue: Superstar Rajinikanth shines as suave encounter specialist | Watch". Desimartini (in ஆங்கிலம்). 20 September 2024. Archived from the original on 23 September 2024. பார்க்கப்பட்ட நாள் 23 September 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேட்டையன்_(திரைப்படம்)&oldid=4161400" இலிருந்து மீள்விக்கப்பட்டது