வினீத் சீனிவாசன்

இந்திய நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர்

வினீத் சீனிவாசன் (Vineeth Sreenivasan)(பிறப்பு: அக்டோபர் 1, 1984) ஒரு இந்திய பின்னணி பாடகரும், நடிகரும், திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும், பாடலாசிரியரும், இசை அமைப்பாளரும், படைப்பு இயக்குரும், பின்னணிக் கலைஞருமாவார். இவர் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். மேலும், இவர் நடிகரும்,திரைக்கதை எழுத்தாளருமான சீனிவாசனின் மகனாவார்.

வினீத் சீனிவாசன்
2018இல் வினீத் சீனிவாசன்
பிறப்புவினீத் சீனிவாசன்
1 அக்டோபர் 1984 (1984-10-01) (அகவை 39)
கூத்துப்பறம்பு, கண்ணூர், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2002 – தற்போது வரை
பெற்றோர்
வாழ்க்கைத்
துணை
திவ்யா நாராயணன் (தி. 2012)
பிள்ளைகள்2
உறவினர்கள்தயான் சீனிவாசன் (சகோதரர்)
எம். மோகனன் (மாமா)

2003 ஆம் ஆண்டில் கிளிச்சுந்தன் மாம்பழம் படத்தில் "கசவிண்டே தட்டமிட்டு" என்ற பாடலைப் பாடி திரைப்படத்தில் அறிமுகமானார், பின்னர் இசைத் தொகுப்புகளிலும் பணியாற்றினார். சைக்கிள் (2008) திரைப்படத்தில் ஒரு நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 2010இல் வெளியான மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்ற படத்தின் மூலம் இவர் இயக்குநராக அறிமுகமானார். இவர் இப்படத்தின் கதையையும் எழுதியிருந்தார். இவரது தம்பி தயான் சீனிவாசன் ஒரு நடிகராக அறிமுகமான திரா [1] படத்தை 2013 இல் திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார்.

இவரது, இயக்கத்தில் வெளியான இரண்டாவது படமான தட்டத்தின் மரயத்து 2012ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகும். ஜி. பஜித் என்ற இயக்குனருக்காக ஒரு வடக்கன் செல்பி (2015) என்றப் படத்திற்கு திரைக்கதையையும் எழுதியிருந்தார். இவரது மிகச் சமீபத்திய இயக்கம் ஜேக்கபின்ட் ஸ்வர்கராஜ்ஜியம் (2016) என்ற படமாகும்.[2] இவர், ஹபிட் ஆஃப் லைஃப் என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி அதன் முதல் படமான ஆனந்தம் என்பதை 2017இல் தயாரித்தார். ஆசிப் அலியின் சமீபத்திய படமான குஞ்செல்தோ என்ற படத்தில் படைப்பு இயக்குநராக பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

வினீத் சீனிவாசன் மலையாள திரைக்கதை எழுத்தாளரும் நடிகருமான சீனிவாசன் மற்றும் விமலா ஆகியோரின் மூத்த மகனாவார்.[3] கூத்துப்பறம்பு இராணி ஜெய் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை தனது கல்வியை முடித்தார். சென்னை கே.சி.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்றார்.

தொழில் தொகு

ஜேக்ஸ் பெஜோய், ஷான் ரகுமான் மற்றும் அர்ஜுன் சசி ஆகியோருடன் மலையாளி என்ற இசைக்குழுவில் ஒரு பகுதியாக உள்ளார். திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற மலையாளத் திரைப்படமான சைக்கிள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.[4] மகன்டே அச்சன் படத்தில் தனது தந்தையுடன் தனது இரண்டாவது திரைப்பட பாத்திரத்தை செய்தார்.

சொந்த வாழ்க்கை தொகு

2004 மார்ச் 30 முதல் எட்டு வருடமாக காதலித்து வந்த திவ்யா நாராயணன் என்பவரை வினீத் 18 அக்டோபர் 2012 அன்று மணந்தார். இவரது மனைவி சென்னையில் கல்லூரியில் பயிலும்போது இவருக்கு இளையவராக படித்து வந்தார்.[5] இவர்களுக்கு விகான் திவ்யா வினீத் என்ற ஒரு மகனும், சனயா திவ்யா வினீத் என்ற ஒரு மகளும் இருக்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினீத்_சீனிவாசன்&oldid=3706955" இருந்து மீள்விக்கப்பட்டது