முத்தூத் பாப்பச்சன் குழுமம்

முத்தூத் பாப்பச்சன் குழுமம் (Muthoot Pappachan Group) என்பது இந்தியாவின் கேரளாவின் திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய வணிக நிறுவனமாகும். நிறுவனம் முழக்கம், 'நீலம் என்பது நம்பிக்கை' என்பதாகும். [1] இநிறுவனத்தில் நிதி சேவைகள், தானுந்துத் தொழிற்றுறை முகவர்கள், தானுந்து வாகனக் கடன், விருந்தோம்பல், அசையா சொத்து வணிகம் மற்றும் உட்கட்டமைப்பு, சுகாதாரம் பேணுதல், தகவல் தொழில்நுட்பம், விலைமதிப்பற்ற உலோகங்கள், பயணம் மற்றும் ஓய்வு, வெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை, பண பரிமாற்றம் மற்றும் மாற்று எரிசக்தி ஆகியவை உட்பட பல தொழில்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த வணிகத்தை 1887 ஆம் ஆண்டில் முத்தூத் நினான் மத்தாய் என்பவர் தொடங்கினார். [2] [3] [4] [5] [6] [7] [8] [9]

முத்தூத் பாப்பச்சன் குழுமம்
வகைபொது
நிறுவுகை1887
தலைமையகம்திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்
  • நினான் மத்தாய் முத்தூத்
  • தாமஸ் ஜான் முத்தூத்(தலைவர் & நிர்வாக இயக்குநர்)
  • தாமஸ் ஜியார்ஜ் முத்தூட்(இயக்குநர்)
    தாமஸ் முத்தூத் (இயக்குநர்)
தொழில்துறைநிதி சேவைகள், அசையா சொத்து வணிகம் மற்றும் உட்கட்டமைப்பு, தானுந்துத் தொழிற்றுறை, IT services, அரிய உலோகங்கள், மாற்று எரிசக்தி, பாதுகாப்புச் சேவைகள், காப்பீடு, பயணம் & பொழுதுபோக்கு, வெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை, பணப் பரிமாற்றம், தங்கநகைக் கடன் திட்டம், தானுந்து வாகனக் கடன்
பணியாளர்20000
இணையத்தளம்www.muthoot.com

முத்தூத் நிதி நிறுவனம் என்பது முத்தூட் பாப்பச்சன் குழுமத்தின் முதன்மை நிறுவனமாகும். இது தங்கக் கடன்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன கடன்கள் மற்றும் பிற கடன் சேவைகளை கையாள்கிறது.

நிறுவன வரலாறு

தொகு

இந்நிறுவனம் 130 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், நிறுவனம் முக்கியமாக பிராந்தியத்தில் சொந்தமான தோட்டங்களுக்கு மொத்த பொருட்களை வழங்கியது.

தற்போது இந்த குழுவில் 3,800 கிளைகளில் 20,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். [10] [11] [12] [3] [13] [14]

நிதி சேவைகள்

தொகு

முத்தூத் நிதி நிறுவனம் [15] [16] [17] [18]

முத்தூத் பப்பச்சன் சிட்ஸ்: முத்தூட் பாப்பச்சன் சிட்ஸ் என்பது இந்தியாவின் சிட் ஃபண்ட் சட்டம் 1982 இன் படி குழுவால் உருவாக்கப்பட்ட ஒரு தனி நிறுவனம் ஆகும்.

முத்தூத் மூலதன சேவைகள் நிறுவனம்:மூலதன சேவைகள் நிறுவனம் (எம்.சி.எஸ்.எல்) என்பது முத்தூத் பாப்பச்சன் குழுமத்தின் முதல் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) மற்றும் தேசியப் பங்குச் சந்தை (என்.எஸ்.இ) இரண்டிலும் பட்டியலிடப்பட்ட ஒரு வங்கி சாரா நிதி நிறுவனம் (என்.பி.எஃப்.சி), மூலதன சேவைகள் நிறுவன வாகன கடன்கள் (இரு சக்கர கடன்கள்) உள்ளிட்ட நிதி தீர்வுகளை வழங்குகிறது. சலுகை அடிப்படையில் இரு சக்கர வாகனங்களை வாங்குவதற்காக பெண்களுக்கு நிதியளிப்பதற்கான “பெண்கள் மட்டும்” திட்டம் உட்பட பல புதுமையான திட்டங்களுக்கு நிறுவனம் பெருமை சேர்த்துள்ளது. [19] [20] [21]

முத்தூத் வீட்டுவசதி நிதி நிறுவனம்: 2014 ஆம் ஆண்டில், இந்த குழு முத்தூத் வீட்டுவசதி நிதி நிறுவனம் (எம்.எச்.எஃப்.எல்) என்ற துணை நிறுவனம் மூலம் மலிவு வீட்டு நிதி அரங்கில் நுழைந்தது. வீட்டுவசதி நிதி நிறுவனம் முக்கியமாக நடுத்தர மற்றும் குறைந்த வருமான பிரிவில் உள்ள வாடிக்கையாளர்களின் வீட்டு நிதி தேவைகளை பூர்த்தி செய்கிறது. [22]

முத்தூத் சிறுதொழில் நிதி நிறுவனம்: முத்தூட் சிறுதொழில் நிதி நிறுவனம் என்பது 2010 இல் நிறுவப்பட்ட முத்தூத் பாப்பச்சன் குழுமத்தின் (எம்.பி.ஜி) சிறு நிறுவனத்தின் அங்கமாகும். முத்தூத் சிறுதொழில் நிறுவனம் 2015 இல் ரிசர்வ் வங்கியால் ஒரு வங்கி சாரா நிதி நிறுவனம் மற்றும் சிறுதொழில் நிதி நிறுவனம் ஆகியவற்றின் உரிமத்தை வழங்கியது. [23] [14] [24] [25] [26]

முத்தூத் இடர் காப்பீட்டு தரகு சேவைகள் நிறுவனம்: குழுவின் இந்த பிரிவு காப்பீட்டு தீர்வுகளுடன் தொடர்புடையது. [27]

விலைமதிப்பற்ற உலோகங்கள்

தொகு

முத்தூத் விலைமதிப்பற்ற உலோகங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பிரிவு என்பது விலைமதிப்பற்ற உலோக பொருட்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் நிபுணத்துவம் பெற்றது. [23] [14]

'சுவர்ணவர்சம்' என்றத் திட்டம் தங்க நகைகள் வாடிக்கையாளர்களுக்கு 'ஹால்மார்க்' செய்யப்பட்ட தங்க நகைகளை (2 முதல் 8 கிராம்) தவணைகளில் வைத்திருக்க அனுமதிக்கின்றன. [26]

'சுவேதவர்சம்' வெள்ளிப் பொருட்கள் மற்றும் நகைகள் ஹால்மார்க் செய்யப்பட்ட வெள்ளி நாணயங்கள், கட்டிகள் மற்றும் பொருட்களை விற்கின்றன. [24]

முத்தூத் தங்க மதிப்பு, இது சிறிய துண்டு நகைகள், பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட தங்கப் பொருட்களை இறுதி வாடிக்கையாளர்களிடமிருந்து நேரடியாக வாங்குகிறது. [25]

தகவல் தொழில்நுட்பம்

தொகு

திருவனந்தபுரத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் தொடங்கப்பட்ட முத்தூத் பாப்பச்சன் தொழில்நுட்ப நிருவனம், குழுவில் உள்ள பிற நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது. [28]

தானியங்கி வாகனம்

தொகு

முத்தூத் பாப்பச்சன் குழுமத்தில் ஃபோர்டு தானுந்துகள், சியாகுவார் தானுந்துகள், லேண்ட் ரோவர் தானுந்துகள், ரேஞ்ச் ரோவர், ஹோண்டா தானுந்துகள் ஆகியவ்ற்றின் விற்பனை மையங்களையும் மற்றும் கேரளாவின் கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்களில் யமஹா மற்றும் ஹோண்டா போன்ற இரு சக்கர வாகன விற்பனை மையங்களையும் கொண்டுள்ளது. [29]

விடுதிகள்

தொகு

இந்த குழு தாஜ் மற்றும் ஹில்டன் குழுக்கள், வில்லா மாயா, உணவகம் மற்றும் ஸ்கை செஃப் ஆகியவற்றால் நடத்தப்படும் நட்சத்திர விடுதிகளை அமைத்துள்ளது. தற்போது ஏர் இந்தியா மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்ற விமான சேவைகளுக்கும் சேவை செய்கிறது. [30] [31]

அசையாச் சொத்து

தொகு

முத்தூத் அசையா சொத்து வணிகத்தின் முதல் திட்டங்களில் ஒன்றான முத்தூத் டெக்னோபோலிஸ் என்பது கொச்சி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ளது. [32]

சுகாதாரப் பாதுகாப்பு

தொகு

முத்தூத் பாப்பச்சன் குழுமம் கேரளாவின் கோட்டயத்தில் உள்ள முத்தூட் லைஃப் பிரிகேட் சிறப்பு மருத்துவமனை மற்றும் எலும்பியல் மையத்துடன் சுகாதார அரங்கில் நுழைந்தது. [33]

மாற்று எரிசக்தி வளங்கள்

தொகு

முத்தூத் மாற்று எரிசக்தி வளங்கள் 1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் முப்பந்தல் கிராமத்தில் அமைந்துள்ள காற்றாலை பண்ணைகளுடன் காற்றாலை ஆற்றல் திட்டத்தைத் தொடங்கின. [34]

பாதுகாப்பு சேவைகள்

தொகு

எம்.பி.ஜி பாதுகாப்பு நிறுவனம் என்பது திருவனந்தபுரத்தில் அதன் தலைமை அலுவலகத்துடன் ஒரு நிறுவனமாகும். இது 15 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. அதன் வாடிக்கையாளர்களுக்கு அவசரகால பதிலளிப்பு குழுக்களை வழங்குகிறது. [4]

உலகளாவிய செயல்பாடுகள்

தொகு

முத்தூத் பாப்பச்சன் அறக்கட்டளை என்பது முத்தூத் பாப்பச்சன் குழுமத்தின் இலாப நோக்கற்ற பிரிவாகும். முத்தூத் பாப்பச்சன் அறக்கட்டளை "மாயப் பேருந்து" என்றத் திட்டத்துடன் இணைந்து கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் அதன் விளையாட்டு மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது. [35] [36] [37]

கேரள பிளாஸ்டர்ஸ் கால்பந்து சங்கத்தின் ஆதரவாளர்

தொகு

முத்தூத் பாப்பச்சன் குழுமம் 29 செப்டம்பர் 2014 முதல் இன்று வரை கேரள பிளாஸ்டர்ஸ் கால்பந்து சங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆதரவாளராகும். சங்கம் இந்திய கால்பந்தின் முதல் அடுக்கான இந்தியன் சூப்பர் லீக்கில் போட்டியிடுகிறது. கேரள பிளாஸ்டர்ஸ் கால்பந்து சங்கம் 'பி' என்ற பிளாஸ்டர்களின் ரிசர்வ் அணியின் ஆதரவாளர்கள் ஆவார்கள். [38] [39]

குறிப்புகள்

தொகு
  1. "Muthoot Pappachan Group banks on 'trust', says 'Believe in Blue' ". Campaignindia.in. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  2. "muthoot pappachan group: Latest News & Videos, Photos about muthoot pappachan group". Economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  3. 3.0 3.1 "Muthoot Pappachan Group goes back to roots with planned microfinance unit". Livemint.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  4. 4.0 4.1 V. Sajeev Kumar (2015-08-27). "Muthoot Pappachan Group expands security services | Business Line". Thehindubusinessline.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  5. "Muthoot Pappachan Group: Latest News, Photos, Videos on Muthoot Pappachan Group". Ndtv.Com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  6. "Muthoot Pappachan Group ready to invest in solar energy sector". News18.com. 2012-09-28. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  7. "Muthoot Pappachan Group News, Latest Breaking News on Muthoot Pappachan Group | Daily News & Analysis". Dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  8. "Believe in the brighter side, says Muthoot Pappachan Group's latest ad". Firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  9. "Muthoot Pappachan Group: Private Company Information". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  10. "Muthoot Pappachan Group owned Villa Maya wins Trip Advisor Travellers' choice award". Economictimes.indiatimes.com. 2015-10-16. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  11. "Muthoot Pappachan Group rolls out innovative security solutions". Economictimes.indiatimes.com. 2016-01-12. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  12. "Muthoot Group opens gold recycling centre in Vijayawada". Economictimes.indiatimes.com. 2016-06-01. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  13. "Muthoot Fincorp promoters to expand real estate business | Business Standard News". Business-standard.com. 2015-07-11. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  14. 14.0 14.1 14.2 "Muthoot Microfin raises $20 mn from US-based PE firm Creation Investments". Vccircle.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  15. Madhav Mohan (2016-11-29). "CIO Case Study | Mobile Apps implementation in BFSI industry: How Muthoot Fincorp eased loan collection with QR Code system". CIO.in. Archived from the original on 2017-03-28. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  16. "Muthoot Fincorp: Muthoot Fincorp targets 27% growth in gold loan business". Economictimes.indiatimes.com. 2016-09-30. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  17. "As gold regains sheen, Muthoot Fincorp eyes 25% jump in volume". Economictimes.indiatimes.com. 2016-07-17. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  18. "Muthoot Fincorp Plans Gold Recycling Centres Across Country – NDTV Profit". Profit.ndtv.com. 2015-05-24. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  19. "Muthoot Capital Services Q3 net up 14% to Rs 6.06 cr". Business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  20. V Sajeev Kumar (2015-08-10). "Muthoot Capital rides high on 'ladies only' loan scheme | Business Line". Thehindubusinessline.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  21. "Muthoot Capital Services to enter car loan segment". Economictimes.indiatimes.com. 2016-07-14. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  22. "Muthoot enters housing finance". Business-standard.com. 2013-01-11. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  23. 23.0 23.1 "Muthoot Microfin to divest 15% stake for 150 crore". Economictimes.indiatimes.com. 2016-03-18. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  24. 24.0 24.1 "investments: Muthoot Microfin raises Rs 130 crore from US-based PE firm Creation Investments". Economictimes.indiatimes.com. 2017-01-24. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  25. 25.0 25.1 "Muthoot Microfin to raise Rs 130 cr from Chicago’s Creation Investments". 2017-01-25. http://www.financialexpress.com/industry/muthoot-microfin-to-raise-rs-130-cr-from-chicagos-creation-investments/521053/. பார்த்த நாள்: 2017-03-27. 
  26. 26.0 26.1 "Muthoot Microfin raises ₹130 crore from US-based Creation Investments". Thehindubusinessline.com. 2017-01-26. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  27. Rorke, Phoebe (2017-02-13). "BRIEF: India's Muthoot Raises $20m in Equity from Creation Investments Amidst Plans to Open 500 New Microfinance Branches - MicroCapital: On microfinance, mobile money, SMEs and other forms of impact Investing". MicroCapital.org. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  28. "Company details". Technopark.org. 2016-10-26. Archived from the original on 2017-03-22. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  29. "Why Kerala is increasingly housing some of Asia's largest car showrooms". 2015-02-01. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  30. "Villa Maya, where dining is more than a pleasure (Foodie Trail-Thiruvananthapuram)". Business-standard.com. 2014-10-25. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  31. "Muthoot Pappachan Group plans to invest in the hospitality sector in big way". Hospitality Biz India. 2014-01-03. Archived from the original on 2016-06-24. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  32. "Archived copy". Archived from the original on 15 August 2016. பார்க்கப்பட்ட நாள் 2017-03-28.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  33. "Muthoot Pappachan Group Grows on Diversification and Adaptability". Seasonal Magazine. 2012-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  34. "Cabinet clears policy for offshore wind farms". Livemint.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  35. "Muthoot Pappachan Foundation launches 'Smile Please'". Business-standard.com. 2014-10-18. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  36. "‘Sports for development project’ launched". 2016-02-01. http://www.thehindu.com/news/cities/Kochi/sports-for-development-project-launched/article8177670.ece. பார்த்த நாள்: 2017-03-27. 
  37. "Bringing smiles to faces of tiny tots". 2017-02-21. http://www.thehindu.com/news/cities/puducherry/bringing-smiles-to-faces-of-tiny-tots/article17336275.ece. பார்த்த நாள்: 2017-03-27. 
  38. "Muthoot Pappachan Group bags title sponsorship of Kerala Blasters FC". Economictimes.indiatimes.com. 2014-09-29. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  39. "Sachin Tendulkar terms Kerala Blasters FC as incredible team". 2015-09-16. http://indianexpress.com/article/sports/football/sachin-tendulkar-terms-kerala-blasters-fc-as-incredible-team/. பார்த்த நாள்: 2017-03-27.