நரோத்தம் மொரார்ஜி

இந்தியத் தொழிலதிபர்

நரோத்தம் மொரார்ஜி (Narottam Morarjee) (1877-1929) ஒரு சிறந்த இந்திய தொழிலதிபர் ஆவார். [1][2]

1977இல் இந்திய அரசால் வெளியிடப்பட்ட ஒரு அஞ்சல் முத்திரையில் நரோத்தம் மொரார்ஜி

சுயசரிதை

தொகு

இவர் 1877 ஏப்ரல் 2 அன்று போர்பந்தரில் பிறந்தார். இவரது தந்தை சேத் மொரார்ஜி கோகுல்தாசு ஒரு முன்னோடி நெசவாலை அதிபராவார். இவர் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்தார். இவர் படிக்கும்போதே மும்பையின் மொரார்ஜி கோகுல்தாசு ஆலையையும், சோலாப்பூர் ஆலையையும் நிர்வகிக்கத் தொடங்கினார்.[3]

பின்னர் மகாத்மா காந்தி, அன்னி பெசண்ட், தாதாபாய் நௌரோஜி, இரவீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு, மோதிலால் நேரு ஆகியோருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார்.

கப்பல் நிறுவனம்

தொகு

இவர் மற்ற குசராத்தி தொழிலதிபர்களான வால்சந்த் இராச்சந்த் மற்றும் கிலாச்சந்த் தேவ்சந்த் ஆகியோருடன் கைகோர்த்து தி சிந்தியா ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி லிமிடெட் எனற நிறுவனத்தை நிதியுதவி செய்து நிறுவினார், இது 1919 மார்ச் 27இல் நிறுவப்பட்டது. 1919 ஏப்ரல் 5 அன்று, சிந்தியாவின் முதல் கப்பலான எஸ். எஸ். லாயல்டி மும்பையிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு பயணம் செய்து சர்வதேச கடலில் இந்திய கப்பல் கொடியை பறக்கவிட்டது.

தொழில்

தொகு

இவர் 1929 நவம்பர் 5 அன்று இறந்தார். வால்ச்சந்த் இராச்சந்த், 1953இல் தான் இறப்பதற்கு ஒரு வருடம் வரை தனது சில முயற்சிகளால் நிறுவனத்தை நடத்தி வந்தார். பின்னர், நரோத்தம் மொரார்ஜியின் மகன் சாந்தி குமார் மொரார்ஜி தனது தந்தையின் இடத்தை நிரப்பினார்.[4] ஆனால் நிறுவனம் கடனில் தள்ளப்பட்டது. இறுதியில், மொரார்ஜி கோகுல்தாசு ஆலை, பிரமல் குடும்பத்தின் தலைவரான சேத் பிரமல் சதுர்புஜா என்பவரால் கைப்பற்றப்பட்டது. 1953ஆம் ஆண்டில் வால்சந்தின் மரணத்திற்குப் பிறகு, சிந்தியா கப்பல் நிறுவனம் நரோத்தம் மொராஜி குழுவால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் கப்பல் வணிகம், மாற்றங்களைத் தக்கவைக்க முடியவில்லை. இது 1980களில் வணிகம் செய்வதை நிறுத்தியது. சிந்தியா கப்பலின் துணை நிறுவனமான சிந்தியா ஷிப்யார்ட்டில் நரோத்தம் மொராஜியும், வால்சந்த்தும், கிலாசந்தும் பங்குகளை வைத்திருந்தனர். ஆனால் 1961 இல் அரசாங்கத்தால் தேசியமயமாக்கப்பட்டது.

நினைவு

தொகு

இந்திய அரசும் மும்பையில் உள்ள இந்திய கப்பல் துறையும் கப்பல் நிர்வாகத்தில் சான்றிதழ் படிப்புகளை நிறுவின. அதற்கு நரோத்தம் மொரார்ஜி கப்பல் தொழில் நிறுவனம் என்று பெயரிடப்பட்டது.[5]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரோத்தம்_மொரார்ஜி&oldid=3207485" இலிருந்து மீள்விக்கப்பட்டது