சாந்தி குமார் மொரார்ஜி
சாந்தி குமார் மொரார்ஜி (Shanti Kumar Morarjee) (1902 – 1982) இவர் ஓர் பிரபல தொழிலதிபரும், மகாத்மா காந்தியின் நெருங்கிய கூட்டாளியுமாவார்.
ஆரம்ப வரலாறு
தொகுஇவர் இந்தியாவின் ஆலை உரிமையாளரும் கப்பல் அதிபருமான நரோட்டம் மொரார்ஜியின் மகனாவார். இவர் இங்கிலாந்தின் இலண்டன், ஹாரோ பள்ளியில் கல்வி பயின்றார் . [1] இவர் இந்தியாவின் எஸ்.எஸ். லாயல்டி என்ற நீராவிக் கப்பலின் குழுவில் இருந்தார். இவரது தந்தை நரோத்தம் மொரார்ஜி, வால்சந்த் இராச்சந்த் மற்றும் பிற பிறமுகர்களுடன் இலண்டனுக்கு தனது முதல் பயணத்தில் இருந்தார். இவர் சுமதி மொரார்ஜி என்பவரை மணந்தார். [2] திருமணத்தின் மூலம் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
தொழில்
தொகு1929 ஆம் ஆண்டில் இவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, இவர் சிந்தியா கப்பல் நிறுவனத்தின் தலைவரானார். இது வால்சந்த் இராச்சந்த், கிலாச்சந்த் தேவ்சந்த் மற்றும் இவர்களது குடும்பத்தினருக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாக இருந்தது. ஆனால் இவர்களது குடும்ப நிறுவனமான நீராவி கப்பல் நிறுவனத்தின் முக்கிய பங்கு நிறுவனமான நரோத்தம் மொரார்ஜி & நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டது. [3]
மொரார்ஜி கோகுல்தாஸ் நெசவாலைகள் மற்றும் கப்பல் நிறுவனங்களின் நிர்வாக முகவர்களாக இருந்த குடும்ப நிறுவனமான நரோத்தம் மொரார்ஜி நிறுவனத்தின் மூத்த கூட்டாளராகவும் இருந்தார். இவரது மனைவி சுமதியும் குடும்ப நிறுவனத்தில் இணை பங்காளராக இருந்தார். மேலும், குடும்ப வணிகமான கப்பல் நிறுவனமான சிந்தியா நீராவிக் கப்பல் நிறுவனத்தை நிர்வகிப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். [4] ஈஸ்டர்ன் ஷிப்பிங் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனங்களிலும் இயக்குநராகவும் இருந்தார். [5] மொரார்ஜி கோகுல்தாஸ் ஆலை 1935 ஆம் ஆண்டில் பிரமல் சத்ருபூஜ் என்பவருக்கு விற்கப்பட்டது.[6] இருப்பினும், சாந்தி குமார் இறக்கும் வரை சிந்தியா கப்பல் நிறுவனம் இவருடன் இருந்தது.
காந்தியுடனான தொடர்பு
தொகுஇவர் தனது தந்தையின் மூலம் இளம் வயதிலேயே மகாத்மா காந்தியுடன் தொடர்பு கொண்டார். மிகச் சிறிய வயதிலேயே காதி அணியத் தொடங்கினார். [7] இவரும் இவரது மனைவியும் தங்களது வாழ்நாள் முழுவதும் மகாத்மா காந்தியின் நெருங்கிய கூட்டாளியாகவும் நம்பிக்கையுடனும் இருந்தனர். [8] [9] சிறையில் கஸ்தூரிபாய் இறந்தபோது, சிறைக்குள் அனுமதிக்கப்பட்ட சில நெருங்கிய உதவியாளர்களில் சாந்தி குமாரும் இருந்தார். மகாத்மா காந்தி ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த போது பிரேம்லீலா தாக்கர்சே, கனு காந்தி, கமல்நயன் பஜாஜ் போன்றவர்களுடன் இவர் இருந்தார். [10] [11] 1944 ஆம் ஆண்டில், கஸ்தூரிபாயின் மறைவுக்குப் பிறகு, புனேவில் உள்ள ஆகா கான் அரண்மனையிலிருந்து காந்திஜி விடுவிக்கப்பட்டபோது உடல்நிலை சரியில்லாததால், காந்தி இவரது ஜுஹு மாளிகையில் பல மாதங்கள் தங்கியிருந்தார். இந்த காலங்களில் சரோஜினி நாயுடு மற்றும் விஜய லட்சுமி பண்டிட் ஆகியோரும் இவரது வீட்டில் தங்கினர். [12]
சுதந்திர நடவடிக்கைகள்
தொகுமேலும், இவர் இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவர்களான வல்லபாய் படேல், ஜவகர்லால்நேரு, வைகுந்த் மேத்தா, ஜி.எல் மேத்தா, ஜெயபிரகாஷ் நாராயண், மௌலானா ஆசாத், ராஜேந்திர பிரசாத் மற்றும் பலருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். இவர் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் சுதந்திரத்திற்கு முந்தைய சகாப்தத்தின் முக்கியமான தகவல்தொடர்புகளில் நெருக்கமாக ஈடுபட்டார். இவரும் இவரது மனைவியும், வெள்ளையனே வெளியேறு மற்றும் இந்தியாவின் சுதந்திரத்திற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். [13] [14] [15] [16] [17] [18] [19]
கஸ்தூரிபாய் அறக்கட்டளை
தொகுகஸ்தூரிபாய் காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் தலைமை ஆதரவாளர்களான தக்கர் பாப்பா, நாரந்தாஸ் காந்தி, தேவதாஸ் காந்தி, ஜி.டி. பிர்லா, வி. எல். மேத்தா போன்ற பலருடன் இவரும் ஒருவராக இருந்தார். [20]
பணிகள்
தொகுஇந்தியப் பிரிவினையின் போது மகாத்மா காந்தியின் அழைப்பின் பேரில், இவரும் ஷூர்ஜி வல்லபதாஸ் என்பவரும் அங்கு சிக்கித் தவிக்கும் தலித்துகளை இலவசமாக மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவர தங்கள் கப்பல்களை கராச்சிக்கு அனுப்பினர்.
1969 ஆம் ஆண்டில் காந்தி பிறந்த நூற்றாண்டு நினை அஞ்சல் தலைகளை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டபோது, மகாத்மா காந்தியின் முத்திரைகளை வடிவமைப்பதில் இவர் அளித்த உதவியை அஞ்சல்துறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டது. [21]
இறப்பு
தொகுஇவர் 1982 இல் இறந்தார். [22] இவர் இறந்த நேரத்தில், இவரது மனைவி சுமதி கவனித்து வந்த நிறுவனங்கள் ஏற்கனவே பெரிய கடன்களிலும் சிக்கல்களிலும் இருந்தன. 1987 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் கட்டுப்பாட்டை இந்திய அரசு கையகப்படுத்தியது.
குறிப்புகள்
தொகு- ↑ Penguin Books India (15 May 2015). The Portfolio Book of Great Indian Business Stories: Riveting Tales of Famous Business Leaders and Their Times. Penguin Books Limited. p. 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5214-021-3. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ International Shipping & Shipbuilding Directory. Benn Brothers Limited. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ International Shipping & Shipbuilding Directory. Benn Brothers Limited. 1958. pp. 195, 525, 529. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ Indian Armed Forces Year Book. 1961. p. 761. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ International Shipping & Shipbuilding Directory. 1958. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ "Morarjee Textiles -journey". Archived from the original on 2017-01-10. பார்க்கப்பட்ட நாள் 2020-08-25.
- ↑ Gandhi (Mahatma) (1952). To Ashram sisters: from 6-12-1926 to 3-12-1929. Navajivan Pub. House. p. 18. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ Jayaprakash Narayan (2000). Jayaprakash Narayan: 1954-1960. Manohar. p. 65. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ The Illustrated Weekly of India. p. 47. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ Mahatma Gandhi. The Gandhi Reader: A Sourcebook of His Life and Writings. Grove Press. p. 414. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ Ramachandra Krishna Prabhu (1944). Sati Kasturba. Hind Kitabs. p. 47. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ Sankar Ghose (1991). Mahatma Gandhi. Allied Publishers. p. 298. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ Verinder Grover. Constitutional Schemes and Political Development in India: Towards Transfer of Power. Deep & Deep Publications. p. 706. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ Aparna Basu. G.L. Mehta, a Many Splendoured Man. Concept Publishing Company. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ Rajendra Prasad (1946). India Divided. Penguin Books India. p. 12. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ Collected works, Volume 58 Gandhi (Mahatma) Publications Division, Ministry of Information and Broadcasting, Govt. of India, 1974
- ↑ Collected Works, Volume 89 Mahatma Gandhi Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India, 1983
- ↑ Rajendra Prasad (1984). Dr. Rajendra Prasad, correspondence and select documents: Volume seventeen. Presidency period January 1954 to december 1955. Allied.
- ↑ Krishnan Bhaskaran (1999). Quit India movement: a people's revolt in Maharashtra. Himalaya Pub. House. p. 152. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ Kasturba Gandhi National Memorial Trust, Indore, India (1962). Kasturba memorial. s.n. pp. 229, 237, 242. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Gandhi Birth Centenary Postage Stamps, 1969. Mani Bhavan Gandhi Sangrahalaya. 1972. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ Oceanite. 1982. p. 6. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.