நல்துர்க்
நல்துர்க் (Naldurg), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் கிழக்கில் மரத்வாடா பிரதேசத்தில், தாராசிவா மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். இவ்வூரில் தாராசிவா குகைகள், நல்துர்க் கோட்டை, அரண்மனை, நல்துர்க் ஆறு, அணை மற்றும் அருவிகள் உள்ளது.[3]
நல்துர்க் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தாராசிவா மாவட்டத்தில் நல்துர்க் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 17°49′N 76°18′E / 17.82°N 76.3°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | தாராசிவா மாவட்டம்[1] |
ஏற்றம் | 566 m (1,857 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 18,341[2] |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 413602 |
வாகனப் பதிவு | எம் எச் 25 |
பாலின விகிதம் | ஆண்கள் 52% |
இது மும்பை மாநகரத்திற்கு தென்கிழக்கே 447 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாவட்டத் தலைமையிடமான உஸ்மனாபாத்திற்கு தென்கிழக்கே 55 கிலோ மீட்டர் தொலைவிலும்; சோலாப்பூர்க்கு வடகிழக்கே 46 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
புவியியல்
தொகுநல்துர்க் நகரம் கடல் மட்டத்திலிருந்து 566 மீட்டர் (1856 அடி) உயரத்தில் உள்ளது. இதன் அதிகபட்ச வெப்பம் 46° செல்சியஸ் மற்றும் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 760 மிமீ ஆக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நல்துர்க் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 18,341 ஆகும். அதில் ஆண்கள் 52% மற்றும் பெண்கள் 48% ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.10% மற்றும் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்டவர்கள் 15% ஆக உள்ளனர். மராத்தி மொழி பேசப்படுகிறது. பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 11.61% மற்றும் 0.95% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 52.21%, இசுலாமியர்கள் 42.36%, பௌத்தர்கள் 3.65%, சமணர்கள் 0.94% மற்றும் பிற சமயத்தவர்கள் 0.76% ஆகவுள்ளனர்.[4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dharashiv District
- ↑ "Naldurg City Population". census 2011. பார்க்கப்பட்ட நாள் 19 July 2015.
- ↑ நலாதுர்க்: ஆறு, அணை, அரண்மனை, நீர்வீழ்ச்சிகள் கொண்ட பிரமாண்ட கோட்டடை
- ↑ Naldurg Town Population Census 2011