நல்லாடை அக்னீசுவரர் கோயில்
அக்னீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தின் நல்லாடை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயில் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, பரிகாரத் தலமாக விளங்குகிறது.[1] இக்கோயிலின் மூலவர் அக்னீசுவரர் மற்றும் தாயார் சுந்தரநாயகி ஆவர். இக்கோயில் சுமார் 900 வருடங்கள் பழமையானது ஆகும்.[2]
நல்லாடை அக்னீசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°00′50″N 79°44′41″E / 11.0138°N 79.7448°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | பரணி நட்சத்திர பரிகாரத் தலம் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
அமைவிடம்: | நல்லாடை |
சட்டமன்றத் தொகுதி: | பூம்புகார் |
மக்களவைத் தொகுதி: | மயிலாடுதுறை |
ஏற்றம்: | 17.58 m (58 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | அக்னீசுவரர் |
தாயார்: | சுந்தரநாயகி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 17.58 மீட்டர்கள் (57.7 அடி) உயரத்தில், (11°00′50″N 79°44′41″E / 11.0138°N 79.7448°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
புதுப்பித்தல்
தொகு900 வருடங்களுக்கு முன்பு இரண்டாம் இராஜராஜ சோழன் காலத்தில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டது. இக்கோயிலில் கும்பாபிசேகம் 2023 மே மாதம் நடைபெற்றது.[3]
பராமரிப்பு
தொகுதமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பு பெற்று அதன் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயில் இயங்குகிறது.[4]
இதர தெய்வங்கள்
தொகுவிட்டுணு, மகாலட்சுமி, கைலாசநாதர், தட்சிணாமூர்த்தி, புவனேசுவரி, சண்டிகேசுவரர், துர்க்கை, துவார விநாயகர், செல்வ விநாயகர், சோமாஸ்கந்தர், பாலமுருகன், கல்யாணி, சூரியன், சனி, வீரபத்திரர் மற்றும் பைரவர் ஆகியோர் இக்கோயிலில் வீற்றிருக்கும் மற்ற தெய்வங்கள் ஆவர்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை (2023-07-13). "நல்லாடை சுந்தர நாயகி சமேத அக்னீஸ்வரர் கோயில் மண்டல அபிஷேக பூர்த்தி விழா". tamil.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-23.
- ↑ மாலை மலர் (2022-08-11). "900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தர நாயகி சமேத அக்னீஸ்வரர் கோவில்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-23.
- ↑ Prasanna Venkatesh B (2023-07-15). "குழந்தை வரம் தரும் நல்லாடை அக்னீஸ்வரர் கோயில் மண்டல அபிஷேகப் பூர்த்தி விழா!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2024-09-23.
- ↑ "Arulmigu Agneeswarar Temple, Nalladai - 609306, Mayiladuthurai District [TM018227].,Barani Temple,Agneeswarar,Sundaranayaki". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-09-23.
- ↑ "Agneeswarar Temple : Agneeswarar Agneeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-23.