நல்லா மார் (Nallah Mar) அல்லது மார் கால்வாய் (மார் கோல் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்திய ஒன்றிய பிரதேசமான சம்மு-காசுமீரில் உள்ள பழைய நகரம் சிறீநகர் வழியாகச் செல்லும் ஒரு வழிசெலுத்தல் கால்வாய் ஆகும். இது பிராரி நம்பல் ஏரியையும் குசால் சார் ஏரியையும் இணைத்தது. இதனால் தால் மற்றும் அன்சார் ஏரிகளுக்கு இடையே வழியினை ஏற்படுத்தியது. இந்தக் கால்வாய் 1970களில் நிரப்பப்பட்டு சாலையாக மாற்றப்பட்டது.[1]

நல்லா மார்
நல்லா மார் கால்வாய் சிறீநகரில்
சிவப்பு நிறத்தில் நல்லா மார்
அமைவிடம்சிறிநகர், சம்மு காசுமீர், இந்தியா
விவரக்குறிப்புகள்
நிலைநல்லா மார் கால்வாய் நல்லா மார் சாலையாக
வரலாறு
முதல் பயன்பாட்டின் தேதி15வது நூற்றாண்டு
மூடப்பட்ட நாள்1970
புவியியல்
ஆரம்ப புள்ளிபிராரி நம்பல்
முடிவுப் புள்ளிகவுசால் சார்
உடன் இணைகிறதுகவுசால் சார்

வரலாறு

தொகு

நல்லா மார் கால்வாய் சுல்தான் ஜெய்ன்-உல்-அபிதினின் ஆட்சியின் போது கட்டப்பட்டது (காசுமீரில் 'புட்ஷா' என்று பிரபலமாக அறியப்பட்டவர்). 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இது நகரத்தின் உயிர்நாடியாகக் கருதப்பட்டது. இருப்பினும், வாகனப் போக்குவரத்து வந்தவுடன், இது படிப்படியாகத் தன் மதிப்பினை இழந்தது. எனவே, பழைய நகரம் வழியாக ஒரு சாலை அமைப்பதற்காக இது கால்வாய் நிரப்பப்பட்டது. கால்வாயை நிரப்பியது சுற்றுச்சூழல் பேரழிவாகக் கருதப்படுகிறது. நகரின் முழு நீரமைப்பையும் பாதிக்கப்பட்டது.[1]

நிலப்படங்கள்

தொகு

மேற்கோகள்

தொகு
  1. 1.0 1.1 Irfan, Shams (14 March 2011). "A Stream Buried". Kashmir Life.

மேலும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லா_மார்&oldid=4060868" இலிருந்து மீள்விக்கப்பட்டது