நளபானா பறவைகள் சரணாலயம்

(நளபனா பறவைகள் சரணாலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நளபானா பறவைகள் சரணாலயம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்த சில்கா ஏரியின் மையத்தில் அமைந்த நளபனா தீவுப் பகுதியில் அமைந்துள்ளது. இது சுமார் 16 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 1987-ஆம் ஆண்டு முதல் இது பறவைகள் சரணாலயம் எனும் தகுதி பெற்றது. ஆண்டுதோறும் குளிர்காலத்தில் இங்கு வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளுக்கு இத்தீவு முக்கிய புகலிடமாகும். மழைக் காலத்தில் நளபானா தீவு ஓரளவு நீரில் மூழ்கும். குளிர்காலத்தில் பருவமழை குறையும்போது, நீர் நிலைகள் குறைந்து தீவு படிப்படியாக வெளிப்படும். இத்தீவுப் பகுதிகளில் சைபீரியா, சீனா, ஜப்பான் மற்றும் வட துருவத்தில் உள்ள இயற்கை வாழ்விடங்களில் நிலவும் உறைபனி காலத்தின் போது, அங்குள்ள பறவைகள் சில்கா ஏரியின் நளபானா தீவிற்கு வரத் தொடங்கும். இங்கு வலசை வரும் பறவைகள்: பெரிய பூநாரைகள், வரித்தலை வாத்துகள், கருவால் மூக்கன்கள், ஊசிவால் வாத்துகள், அன்றில்கள்,கார்வெண் மீன்கொத்திகள், தட்டைவாயன்கள் தெரக்கு உள்ளான்கள் கோலியத் ஹெரான்கள் மற்றும் கிழக்கத்திய கர்லுவ் ஆகும். மேலும் இத்தீவுப் பகுதியில் தோணியாமை, ஆவுளியா, காலற்ற கடற்பல்லிகள், மீன்பிடிப் பூனை போன்ற கடல் விலங்குகளும் உள்ளது. [1] [2]

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நளபானா_பறவைகள்_சரணாலயம்&oldid=3296401" இலிருந்து மீள்விக்கப்பட்டது