நவநகர் இராச்சியம்
நவநகர் இராச்சியம் அல்லது ஜாம்நகர் இராச்சியம் , துணைப்படைத் திட்டத்தினை ஏற்றுக்கொண்டு, பிரித்தானிய இந்தியாவுக்கு கீழ் இருந்த சுதேச சமஸ்தானம் ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் அமைந்த ஜாம்நகர் மாவட்டம் மற்றும் தேவபூமி துவாரகை மாவட்டம் ஆகியவைகளைக் கொண்டது. நவநகர் இராச்சியத்தின் தலைநகரம் ஜாம்நகர் ஆகும். கிபி 1540-ஆம் ஆண்டு முதல் ஜடேஜா இராஜபுத்திர குலத்தினர் இந்த இராச்சியத்தை ஆண்டனர். நவநகர் இராச்சியத்தின் பரப்பளவு 3791 சதுர கிலோ மீட்டர் ஆகும். 1901-இல் இதன் மக்கள் தொகை 3,36,779 ஆகும்.[1]இதன் கிளை துரோல் சமஸ்தானம் ஆகும்.
ஜாம்நகர் இராச்சியம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
1540–1948 | |||||||
]] | |||||||
தலைநகரம் | ஜாம்நகர் | ||||||
ஆட்சி மொழி(கள்) | குஜராத்தி | ||||||
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகள் | குஜராத்தி | ||||||
சமயம் | இந்து சமயம் சமணம் | ||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||
வரலாறு | |||||||
• தொடக்கம் | 1540 | ||||||
1948 | |||||||
பரப்பு | |||||||
• மொத்தம் | 9,820 km2 (3,790 sq mi) | ||||||
| |||||||
தற்போதைய பகுதிகள் | ஜாம்நகர் மாவட்டம்,தேவபூமி துவாரகை மாவட்டம், குஜராத், இந்தியா | ||||||
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இந்த நவநகர் இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் இந்தியாவின் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, நவநகர் இராச்சியம் குஜராத் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
நவநகர் இராச்சிய மன்னர் கே. எஸ். ரஞ்சித்சிங்ஜி ஒரு பன்னாட்டு துடுப்பாட்ட வீரர் ஆவார்.
ஆட்சியாளர்கள்
தொகுஆட்சிக்காலம் | ஆட்சியாளர் | பிறப்பு | இறப்பு |
---|---|---|---|
1540 – 1562 | ஜாம் ராவல்ஜி லகாஜி | 1562 | |
1562 – 1569 | விபாஜி ராவல்ஜி | 1569 | |
1569 – 1608 | சாதாஜி விபாஜி | 1608 | |
1608 – 1624 | ஜசாஜி சாதாஜி | 1624 | |
1624 – 1645 | லக்காஜி அஜாஜி | 1645 | |
1645 – 1661 | ரன்மல்ஜி லக்காஜி | 1661 | |
1661 – 1664 | ராய்சிங்ஜி ல்க்காஜி | ||
1664 – 1673 | Interregnum | ||
1673 – 1690 | தமாட்சி ராய்சிங் ஜி | ||
2 அக்டோபர் 1690 – 13 அக்டோபர் 1708 | லக்காஜி தமாட்சி | 1708 | |
13 அக்டோபர் 1708 – 13 ஆகஸ்டு 1711 | ராய்சிங்ஜி லக்காஜி | 1711 | |
13 ஆகஸ்டு 1711 – 1743 | தமாட்சி ராய்சிங்ஜி | 1743 | |
செப்டம்பர் 1743 - 2 நவம்பர் 1767 | லக்காஜி தமாட்சி | 1743 | 1767 |
2 நவம்பர் 1767 – 6 ஆகஸ்டு 1814 | ஜாசாஜி லக்காஜி | 1814 | |
6 ஆகஸ்டு 1814 – 24 பிப்ரவரி 1820 | இரண்டாம் சாதாஜி லக்காஜி | 1820 | |
24 பிப்ரவரி 1820 – 22 பிப்ரவரி 1852 | இரண்டாம் ரன்மால்ஜி சாதாஜி | 1852 | |
22 பிப்ரவரி 1852 – 28 ஏப்ரல் 1895 | இரண்டாம் விபாஜி ரன்மல்ஜி | 1827 | 1895 |
28 ஏப்ரல் 1895 – 14 ஆகஸ்டு1906 | இரண்டாம் ஜஸ்வந்த் சிங்ஜி விபாஜி | 1882 | 1906 |
12 மார்ச் 1907 – 2 ஏப்ரல் 1933 | இரண்டாம் கே. எஸ். ரஞ்சித்சிங்ஜி | 1872 | 1933 |
2 ஏப்ரல் 1933 – 15 ஆகஸ்டு 1947 | திக்விஜய் சிங் | 1895 | 1966 |
3 பிப்ரவரி 1966 – 28 டிசம்பர் 1971 | சத்ருசல்யா சிங் | 1939 | living |
நகையணிகள் சேகரிப்பாளர்கள்
தொகுநவநகர் மகாராஜா ஜாம்சாகிப் மற்றும் கே. எஸ். ரஞ்சித்சிங்ஜி நவரத்தின நகைகள் சேகரிக்கும் பழக்கம் கொண்டவரகள் என்பதால், வைர நகைகள் பற்றிய அறிவு அனுபவ பூர்வமாக கொண்டவர்கள். [2][3] 1934-இல் மகாராஜா திக்விஜய் சிங் தலைப்பாகையில் 61.5 காரட் (12.3 கிராம்) விஸ்கி நிற வைர நகை அணிந்திருந்தார்.[4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Nawanagar State". The Imperial Gazetteer of India, v. 18. Oxford Clarendon Press, London. 1909. p. 419.
- ↑ "Emerald Necklaces of the Maharajah of Nawanagar – Internetstones.COM".
- ↑ Nadelhoffer, Hans (2007). Cartier. Chronicle Books. p. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8118-6099-4.
- ↑ Eye of the Tiger Diamond, Maharaja Aigrette l'oeil du tigre diamond