நவாபாக்கு காந்தர்பல்

இந்தியாவின் காசுமீரில் உள்ள ஒரு பகுதி

நவாபாக்கு (Nawabagh Ganderbal) என்பது இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றான காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள ஓர் அறிவிக்கப்பட்ட பகுதியும் கிராமமும் ஆகும். இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள், செர்ரி, பீச், ஆப்ரிகாட், அக்ரூட் பருப்புகள் மற்றும் பேரிக்காய் ஆகியவற்றின் உற்பத்திக்கு நவாபாக்கு பிரபலமான இடமாகும். அமெரிக்க ஆப்பிள், சுவையான ஆப்பிள், கோல்டன் ஆப்பிள், குலு சுவை ஆப்பிள், அமுர், ரெட் கோல்டு, இரசாக்கு வாரி மற்றும் மகாராசி போன்ற பல ஆப்பிள் வகைகள் இப்பகுதியில் விளைகின்றன. இப்பகுதியின் அஞ்சல் குறியீடு 193501. [5]

நவாபாக்கு காந்தர்பல்
Nawabagh Ganderbal
நவாபாக்கு ஆப்பிள்கள்
நவாபாக்கு ஆப்பிள்கள்
நவாபாக்கு காந்தர்பல் Nawabagh Ganderbal is located in ஜம்மு காஷ்மீர்
நவாபாக்கு காந்தர்பல் Nawabagh Ganderbal
நவாபாக்கு காந்தர்பல்
Nawabagh Ganderbal
Location in சம்மு காசுமீர், இந்தியா
நவாபாக்கு காந்தர்பல் Nawabagh Ganderbal is located in இந்தியா
நவாபாக்கு காந்தர்பல் Nawabagh Ganderbal
நவாபாக்கு காந்தர்பல்
Nawabagh Ganderbal
நவாபாக்கு காந்தர்பல்
Nawabagh Ganderbal (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°13′06″N 74°41′16″E / 34.218202°N 74.6878748°E / 34.218202; 74.6878748
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிசம்மு காசுமீர்
மாவட்டம்காந்தர்பல்
குடியிருப்புபண்டைய காலம்
ஏற்றம்1,619 m (5,312 ft)
மொழிகள்
 • அலுவல்காசுமீரி, உருது, இந்தி, தோக்ரி, ஆங்கிலம்[1][2]
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்193501
தொலைபேசிக் குறியீடு0194
தில்லியிலிருந்து தொலைவு865 கிலோமீட்டர்கள் (537 mi)[3]
மும்பையிலிருந்து தொலைவு2,227 கிலோமீட்டர்கள் (1,384 mi)[4]

நிலவியல் தொகு

மும்பையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1619 மீ உயரத்தில் நவாபாக்கு அமைந்துள்ளது. [6] வகுரா, பட்வினா, இயசுனா, பாதாம்போரா, கான்புரா, மனசுபல், வசுகுரா, அகான், கர்பாக் மற்றும் கசூமா ஆகிய கிராமங்கள் நவாபாக்கு பகுதிக்கு அருகிலுள்ள கிராமங்களாகும்.

மக்கள்தொகையியல் தொகு

இக்கிராமத்தில் சுமார் 800 எண்னிக்கைக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 85 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் தாய் மொழி காசுமீரியாகும். மக்கள் இந்தி/உருது மற்றும் ஆங்கிலத்தையும் பயன்படுத்துகின்றனர்.

கல்வி தொகு

  • சேக்கு உல் ஆலம் பப்ளிக் பள்ளி (செயல்படாதது)
  • அரசு நடுநிலைப்பள்ளி, நவாபாக்கு
  • அரசு யுனானி மருத்துவக் கல்லூரி (இப்போது செயல்படும் - டாக்டர் சூனைத் நசீர் தாண்ட்ரூ உதவி பேராசிரியர் உடற்கூறியல் மூலம் திருத்தப்பட்டது)

மேலும் பார்க்க தொகு

  • கங்கன்

மேற்கோள்கள் தொகு

  1. "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
  2. "Parliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020. http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020. 
  3. "googlemaps". பார்க்கப்பட்ட நாள் 3 January 2015.
  4. "googlemaps". பார்க்கப்பட்ட நாள் 3 January 2015.
  5. "postal code of Nawabagh Ganderbal". பார்க்கப்பட்ட நாள் 3 January 2015.
  6. "elevation of plain land of Ganderbal district". Archived from the original on 23 April 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவாபாக்கு_காந்தர்பல்&oldid=3785083" இலிருந்து மீள்விக்கப்பட்டது