நவாப் சிங் சவுகான்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
நவாப் சிங் சவுகான் (Nawab Singh Chauhan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1909 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] அலிகார் தொகுதியில் இருந்து 6ஆவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்ரினார்.[2][3] "கஞ்ச்" என்ற புனைப்பெயரை பயன்படுத்தி கவிதைகள் எழுதினார்.
நவாப் சிங் சவுகான் Nawab Singh Chauhan | |
---|---|
ஆறாவது மக்களவை உறுப்பினர் | |
தொகுதி | அலிகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இயவான் விச்சித்துபூர், அலிகார் மாவட்டம், உத்தரப் பிரதேசம் | 16 திசம்பர் 1909
இறப்பு | 4 ஏப்ரல் 1981 அலிகர் | (அகவை 71)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிள்ளைகள் | இராச்சு குமார் சிங் சவுகான் சுரேந்திர சிங் சவுகான் யோகேந்திர சிங் சவுகான் |
வாழிடம் | அலிகர் |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுசவுகான் இயவான் வச்சித்பூர் கிராமத்தில் பிறந்தார். அலிகார் மாவட்டம் இயவான் சிக்கந்தர்பூரில் வசித்து வந்தார். தாக்கூர் புல்வந்த் சிங் தந்தை என்றும் அரிபியாரி தேவி மனைவியென்றும் அறியப்படுகிறார். சவுகான் இடைநிலை கல்வி வரை படித்தார். 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் காலமானார்.[4]
பதவிகள்
தொகுசவுகான் வகித்த குறிப்பிடத்தக்க பதவிகள்:
- தலைவர், சில்லா பரிசத்து, அலிகார்
- தலைவர், அகில இந்திய, இரயில்வே அஞ்சல் சேவை
- உறுப்பினர், அகில இந்திய விவசாயிகள் குழு (பாரத் கிரிசக்கு சமாச்சு)
- உறுப்பினர், உத்தரப் பிரதேச சட்டமன்றம் (மூன்று ஆண்டுகள்)
- மாநிலங்களவை உறுப்பினர் (11 ஆண்டுகள்)
நினைவகம்
தொகுஅலிகார் மாவட்டத்தில் உள்ள காசிம்பூர் பவர் ஔசு காலனியில் உள்ள நவாப் சிங் சவுகான் கிராமோதயா கல்லூரி இவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Members Bioprofile". 164.100.47.132. Archived from the original on 16 April 2014. பார்க்கப்பட்ட நாள் 27 October 2011.
- ↑ "Archived copy". Archived from the original on 7 February 2006. பார்க்கப்பட்ட நாள் 11 June 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Brass, Paul R. (1985). Caste, Faction, and Party in Indian Politics: Election studies. Chanakya Publications. p. 182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7001-010-4.
- ↑ Lok Sabha debates. Lok Sabha Secretariat. 1981. p. 10.