நவ்நீத் கௌர்

(நவ்னீட் கௌர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நவநீத் கௌர் (3 ஜனவரி 1986) என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களில் அதிகம் பணியாற்றியுள்ளார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றார்.[2][3]

நவநீத் கௌர்
பிறப்பு3 சனவரி 1986 (1986-01-03) (அகவை 38)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா[1]
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்நவநீதா,
பணிநடிகர், மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2002-2010
வாழ்க்கைத்
துணை
ரவி ராணா

நவனேட் மும்பை மகாராஷ்டிராவில் பிறந்தவர்.[1] இவருடைய பெற்றோர்கள் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். கார்த்திகா மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு முடித்தார். 12 ஆம் வகுப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு, மாடல் அழகி ஆனார்.

கன்னடத் திரைப்படமான தர்சன் என்பதில் முதன்முதலாக நடித்தார்.

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2004 தர்சன் நந்தினி கன்னடம்
2004 சீனு வசந்தி லட்சுமி லட்சுமி தெலுங்கு
2004 சத்ருவு தெலுங்கு
2005 சேத்னா: தி எக்சேமன்ட் ஆஸ்தா இந்தி
2005 ஜெகபதி தெலுங்குன
2005 குட் பாய் கிருஷ்ண வேணி தெலுங்கு
2006 ரூம்மெட்ஸ் பல்லவி தெலுங்கு
2007 மகாரதி தெலுங்கு
2007 யமதொங்கா ரம்பா தெலுங்கு
2007 பங்காரு கொண்டா அகல்யா தெலுங்கு
2008 பூமா தெலுங்கு
2008 ஜபிலம்மா ஜபிலம்மா தெலுங்கு
2008 டெரர் தெலுங்கு
2008 அரசாங்கம் ஆர்த்தி தமிழ்
2008 லவ் இன் சிங்கப்பூர் டயானா பெர்ரீரா மலையாளம்
2009 பிளாஸ் நியூஸ் நக்சத்ரா தெலுங்கு
2009 எழுகுண்டவானா வெங்கடராமனா அந்தரு பாகுண்டலி தெலுங்கு
2010 லாட் காயா பெச்சா லவ்லி பஞ்சாபி
2010 நிர்னயம் தெலுங்கு
2010 காலசக்கரம் தெலுங்கு
2010 அம்பாசமுத்திரம் அம்பானி நந்தினி தமிழ்
2010 சேவன் தர்யா (தி சிக்ஸ்த் ரிவர்) ரீட் பஞ்சாபி

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ்நீத்_கௌர்&oldid=4175117" இலிருந்து மீள்விக்கப்பட்டது