நாகாலாந்தின் இனப்போராட்டம்
நாகாலாந்தின் இனப் போராட்டம், 1993ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் வடகிழக்கில் குக்கி இனத்தினருக்கும் நாகர் இனத்தினருக்கும் இடையே இருந்துவரும் ஓர் போராட்டமாகும்.முதலில் மணிப்பூரின் உக்ருல் மாவட்டதில் தங்குல் இனத்தவர்கள் தங்கள் பகுதியிலிருந்து குக்கி இனத்தவரை வெளியேற்ற இப்போராட்டம் துவங்கியது. இப்போதைய நிலையில் பல புரட்சிக்குழாம்கள் போராடி வருகின்றன. நாகாலாந்து தேசிய சோசலிச மன்றம் (ஐசக்-முய்வா) குழுவினர் மாவோவின் கொள்கைகளைப் பின்பற்றும் கிறித்துவ மாநிலம் கோரியும் நாகாலாந்து தேசிய சோசலிச மன்றம் (காப்லாங்) குழுவினர் சுதந்திர "பெரும் நாகாலாந்து" கோரியும் போராடிவருகின்றன.
1950களில் ஏற்பட்ட வன்முறை படிப்படியாகக் குறைந்து 1980களில் முற்றிலும் கட்டுப்பாட்டில் இருந்தது. 1993ஆம் ஆண்டு நாகர்களுக்கும் குக்கிகளுக்கும் வன்முறை வெடித்தது.
நாகாலாந்து புரட்சியாளர்கள்
தொகுநாகாலாந்தில் இயங்கும் பல்வேறு புரட்சி இயக்கங்கள்:
- நாகா தேசிய மன்றம் - 1940கள் மற்றும் 1950களில் செயல்பட்ட அரசியல் இயக்கம் அங்காமி சாப்பு ஃபிசோ தலைமையில் பிரிவினை இயக்கமாக மாறியது.
- 'நாகாலாந்து தேசிய சோசலிச மன்றம் (ஐசக் முய்வா)': சனவரி 31, 1980 அன்று ஐசக் சிஷி சுவு,துய்ங்கலெங் முய்வா மற்றும் எசு.எசு.காப்லாங் ஆகியோரால் நிறவப்பட்டது. இவர்களது நோக்கு "பெரும் நாகாலாந்து" ('நாகாலிம்' அல்லது நாகாலாந்து மக்கள் குடியாட்சி) ஏற்படுத்துவதும் மாசே துங் கோட்பாடுகளைப் பின்பற்றுவதுமாகும்.
- நாகாலாந்து தேசிய சோசலிச மன்றம் (காப்லாங்)' : நாகர் இனத்தவர்களிடையே உருவான வேற்றுமையால் ஏப்ரல் 30, 1988 அன்று உருவானது. இவர்களது நோக்கம் இந்திய ஆட்சிப்பகுதியில் உள்ள நாகர்கள் வாழுமிடங்களையும் அடுத்துள்ள மியான்மரில் உள்ள நாகர்கள் வாழுமிடங்களையும் உள்ளடக்கிய "பெரும் நாகாலாந்து" அமைப்பதாகும்.
- நாகா தேசிய மன்றம் (அடினோ) – NNC (Adino): மிகப் பழமையான நாகா அரசியலமைப்பு, தற்போது புரட்சியாளர் ஃபிசோவின் மகள் தலைமையில் போராடி வருகிறது.
- நாகா கூட்டமைப்பு அரசு: 1970களில் இயங்கிய பிரிவினை இயக்கம். இதன் தலைவர் சிறைபட்டு தலைமையகம் அழிக்கப்பட்டபின்னர் இவ்வியக்கம் வலிமையிழந்துள்ளது.[1]
- நாகா கூட்டமைப்புப் படை:சீனாவில் பயிற்றிவிக்கப்பட்ட பல உறுப்பினர்களைக் கொண்ட பிரிவினை இயக்கம். 1970களில் தீவிரமாக இயங்கியது.[1]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Baptist Agenda for Peace in Nagalim, India பரணிடப்பட்டது 2010-03-12 at the வந்தவழி இயந்திரம்
- A remote land of jungle, Jesus - and religious war, Daily Herald, May 5, 2003
- Peace talks an insult to Nagas, The Week, Feb 9, 2003.
- Religious Fervor May Dominate Emerging Indian State of Nagalim பரணிடப்பட்டது 2008-10-21 at the வந்தவழி இயந்திரம், The Washington Diplomat, Oct, 2003
- 06.
- [https://web.archive.org/web/20170908041729/http://www7.in/ பரணிடப்பட்டது 2017-09-08 at the வந்தவழி இயந்திரம் The most Baptist state in the world—Nagaland—is vying to become a powerhouse for cross-cultural missions] Christianity Today, February 20.christiantoday.com/news/nat_422.htm We want penetrate China, Cambodia, Burma, Vietnam and Laos and Nepal with the Gospel, Christian Today (India), Aug 29, 2003.
- Nagas want solution, not election பரணிடப்பட்டது 2010-03-12 at the வந்தவழி இயந்திரம் Baptist Peace Fellowship of North America
- Church Backs Terrorism in the North-East பரணிடப்பட்டது 2008-12-01 at the வந்தவழி இயந்திரம்
- Role of the Church – Charity or...? பரணிடப்பட்டது 2008-12-01 at the வந்தவழி இயந்திரம் Vanvasi Kalyan Parishad
- http://www.onwar.com/aced/data/november/nagaland1954.htm பரணிடப்பட்டது 2010-01-03 at the வந்தவழி இயந்திரம்