நாகா தாய்மார்கள் சங்கம்

நாகா தாய்மார்கள் சங்கம் (Naga Mothers' Association NMA) என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள நாகாலாந்து மாநிலத்தின் நாகா தாய்மார்களால் உருவாக்கப்பட்ட ஒரு முக்கிய சமூக அமைப்பாகும்.[1] சமூக மோதல்கள், சமூகங்களிடையே சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் போதைப்பொருள் பழக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த அமைப்பு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது வேறுபட்ட குரல்களை ஒன்றிணைக்கும் உரையாடலுக்கான தளத்தை உருவாக்குகிறது..[1] அதன் உருவாக்கம் முதல், 1980களில் மற்றும் 90களில், நாகா தாய்மார்கள் சங்கமானது சகோதரக் கொலைகள், நாகாலாந்து தேசிய சோசலிசவாத குழுக்களுக்களிடையே (National Socialist Council of Nagaland) வன்முறைகள் மற்றும் இந்தியப் பாதுகாப்புப் படையினரின் சிறப்பு அதிகாரங்களுக்கு எதிராக தொடர்ந்து தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகிறது.[2]

வரலாறு

தொகு

நாகாலாந்தில் இனக்கலவரம், பரவலான மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பிரச்சனைகளின் பின்னணியில் நாகா தாய்மார்கள் சங்கம் 1984ல் கோகிமாவில் நிறுவப்பட்டது. இது பல்வேறு நாகா இனக்குழுக்களான அங்கமிகள், ஏஓஎஸ் போன்ற பெண்களின் பிரிவுகளை ஒன்றிணைத்தது. நாகா தாய்மார்கள் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் நீடோனுவோ அங்காமியும் ஒருவர். அமைதியின் தாய் என்று பிரபலமாக அறியப்பட்ட அவர், 1984 முதல் 1994 வரை அதன் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். 1980களில் நாகாலாந்தில் போதைப் பழக்கம் ஒரு பரவலான பிரச்சனையாக இருந்தது. இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு இது பல்வேறு வாழ்க்கைப் பணிகளில் இருந்து பெண்களை ஒன்றிணைத்தது. 1990களில், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயைக் கையாள்வதில் இச்சங்கம் தன்னை அர்ப்பணித்து செயல்படுகிறது.[3]

செயல்பாடுகள்

தொகு

நாகா தாய்மார்கள் சங்கத்தின் அமைப்பு விதிகள், ஒவ்வொரு வயது வந்த நாகா பெண்ணையும், ஒரு ரூபாய் ஆண்டு உறுப்பினர் கட்டணமாக செலுத்தி தானாகவே உறுப்பினராக்க அனுமதிக்கிறது. வெவ்வேறு நாகா இனக்குழுக்களிலிருந்து உறுப்பினர்களை நாகா தாய்மார்கள் சங்கத்தின் தலைவர்களாக நியமிக்கின்றன.[4] இச்சங்கம் ஒரு மறுவாழ்வு மையத்தையும் தொடங்கியது. நாகாலாந்து முழுவதும் உள்ள பெண்களுக்கான பல்வேறு தொடர்புடைய பிரச்சனைகளில் பட்டறைகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. இச்சங்கம் நாகா பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் பணிபுரிகின்றது.[5]தலைமறைவாக இயங்கும் ஆயுதக் குழுக்குழுக்களில் குழந்தைகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு எதிராக முன்முயற்சியுடன் வாதிடுகிறது. வேலைகளுக்கான வயது வரம்பு தொடர்பாக நாகாலாந்து அரசுக்கும் நாகா மாணவர் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளை இச்சங்கம் வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்தது.[6] அக்டோபர் 1994ல், மாநிலத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் அரசியல் நிலைத்தன்மை நிலைமையைக் கட்டுப்படுத்த இச்சங்கம் ஒரு அமைதிக் குழுவை உருவாக்கியது.

போதைப்பொருள் மற்றும் மதுப்பழக்கத்திற்கு எதிராக

தொகு

1980களின் முற்பகுதியிலிருந்து, போதைப் பழக்கம் வடகிழக்கு இந்தியாவில் ஒரு பரவலான பிரச்சனையாக இருந்தது. இது மாநிலங்களின் இளைஞர்களை மோசமாக பாதித்தது. இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று, போதைப்பொருள் கடத்தப்படும் தங்க முக்கோணம் பகுதிகள், வடகிழக்கு இந்தியாவிற்கு அருகாமையில் இருந்தது. பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகள் மற்றும் ஒரு மெத்தனமான அரசு இயந்திரமும் பிரச்சனையை அதிகப்படுத்தியது.[7] The Naga Mother's Association runs a detoxification and counselling centre at Kohima in collaboration with the Kripa Foundation.[7] நாகா அன்னையர் சங்கம் கிருபா அறக்கட்டளையுடன் இணைந்து நச்சு நீக்கம் மற்றும் ஆலோசனை மையத்தை கோகிமாவில் நடத்துகிறது..[7] 2008ல் பத்ரா மற்றும் மன்னா ஆகியோர் நடத்திய ஆய்வின் முடிவின்படி, இந்த சமூகத் தீமைகளின் ஆபத்தை பெண்களிடம் உணர்த்தி, ஒரு நல்ல நாகா சமுதாயத்தை உருவாக்க அவர்களைத் தூண்ட முயன்றனர்.

அமைதி மற்றும் மோதல் பற்றி

தொகு

பல்வேறு கிளர்ச்சியாளர்களை சமாதானப் பேச்சுக்களுக்குக் கொண்டுவரும் முயற்சியில் நாகா தாய்மார்கள் சங்கம் முக்கியப் பங்காற்றியுள்ளது.[8] 1994ம் ஆண்டில் இச்சங்கம் இனி இரத்தம் சிந்தாதீர்கள் என்ற பிரச்சாரத்தின் மூலம் அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சியைத் தொடங்கியது. மேலும் அது அவர்கள் மேற்கொண்ட அமைதி முயற்சிகளுக்கு வழிகாட்டும் சக்தியாக இருந்தது. இந்த பிரச்சாரம் மனித ஒருமைப்பாடு என்ற பொன்மொழியை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒவ்வொரு உயிரின் மதிப்பையும் புனிதமாகக் கருதுகிறது. பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாகா தாய்மார் சங்கமானது மோதல்களில் உரிமை கோரப்படாத இறந்தவர்களின் அனைத்து உடல்களையும் பாரம்பரிய சால்வைகளால் போர்த்தியது. அவை நாகர்கள் அல்லது இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.[9] ஆயுத மோதலில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இழந்தனர். அமைதி செயல்முறையை ஊக்குவிப்பதில் இந்த இயக்கம் முக்கிய பங்கு வகித்தது.[10]

2010 மாவோ நுழைவாயில் சம்பவம்

தொகு

2010ம் ஆண்டில், மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்திற்கு நாகாலாந்து தேசியவாத சோசலிசக் குழு தலைவர் துயிங்கலெங் முய்வா வருகை தந்தபோது எழுந்த மோதலின் போது மணிப்பூர் ஆயுதக் குழுவினரால் இரண்டு இளம் நாகர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாகா தாய்மார்கள் சங்க உறுப்பினர்கள் உரிமை கோரப்படாத இறந்த உடல்களை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.[3]

இன ஒற்றுமைக்காக

தொகு

இன ஒற்றுகை போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் உரையாடல் மற்றும் ஆலோசனையை தாய்மார்கள் சங்கம் நம்புகிறது. உள்ளூர் ரோங்மேய் சமூகம் தொடர்பாக எழுந்த மோதலின் போது, இச்சங்கம் இனத் தலைவர்களையும், நாகா கிராம சபையையும் (நாகா ஹோஹோ) "உள்ளேயும் வெளியேயும் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக ஒன்றுபடவும், நாகா மக்களின் எதிர்காலத்திற்காக அமைதி மற்றும் சிறந்த புரிதலுடன் ஒன்றிணைந்து செயல்படவும்" வலியுறுத்தியது. ". பத்ரா மற்றும் மன்னா (2008) நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 'நடுவராக பெண்களின் பங்கு மிகவும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.[11]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Hangal, Ninglun (28 August 2012). "Rough road to empowerment" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/features/metroplus/society/rough-road-to-empowerment/article3828335.ece. 
  2. "Making a Show: The Black Money Bill, Making a Show: The Black Money Bill, Making a Show: The Black Money Bill, Making a Show: The Black Money Bill, Making a Show: The Black Money Bill, 'Equality as Tradition' and Women's Reservation in Nagaland". Economic and Political Weekly 50, 50, 50, 50, 50, 52 (23, 23, 23, 23, 23, 45): 7, 7, 7, 7, 7–8, 8, 8, 8, 8. http://www.epw.in/journal/2017/52/perspectives/%E2%80%98equality-tradition%E2%80%99-and-womens-reservation-nagaland.html. 
  3. 3.0 3.1 "TOI Social Impact Awards: Lifetime contribution — Naga Mothers Association – Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/TOI-Social-Impact-Awards-Lifetime-contribution-Naga-Mothers-Association/articleshow/17963150.cms. 
  4. "Meet The Women Who Just Forced a Historic Change in Nagaland's Laws" (in en-IN). HuffPost India. 28 November 2016. https://www.huffingtonpost.in/2016/11/28/meet-the-women-who-just-forced-a-historic-change-in-nagaland_a_21614095/. 
  5. "March of the Naga women". The Dawnlit Post – Rise with the Post. https://thedawnlitpost.com/march-of-the-naga-women/. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. . http://www.mcrg.ac.in/PP51.pdf. 
  7. 7.0 7.1 7.2 "Naga Mother's Association a major weapon against drug menace" (in en). India Today. https://www.indiatoday.in/magazine/cover-story/story/19960115-sanu-vamuzo-naga-mothers-association-a-major-weapon-against-drug-menace-834803-1996-01-15. 
  8. "Nagaland: Women's groups backing quota stir sever ties with parent body" (in en). Hindustan Times. 25 February 2017 இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181023160543/https://www.hindustantimes.com/india-news/nagaland-women-s-groups-backing-quota-stir-sever-ties-with-parent-body/story-ztJpOjoXeEMrOIKltZ2guI.html. 
  9. NorthEast Relations – A Place of Relations. Cambridge University Press.
  10. காப்பகப்படுத்தப்பட்ட நகல். http://wiscomp.org/wp-content/uploads/2016/07/Women-and-Peacebuilding-Engendering-Policy-WISCOMP-Policy-Dialogue-III.pdf. பார்த்த நாள்: 2023-03-23. 
  11. "Making a Show: The Black Money Bill, Making a Show: The Black Money Bill, Making a Show: The Black Money Bill, Making a Show: The Black Money Bill, Making a Show: The Black Money Bill, 'Equality as Tradition' and Women's Reservation in Nagaland". Economic and Political Weekly 50, 50, 50, 50, 50, 52 (23, 23, 23, 23, 23, 45): 7, 7, 7, 7, 7–8, 8, 8, 8, 8. http://www.epw.in/journal/2017/52/perspectives/%E2%80%98equality-tradition%E2%80%99-and-womens-reservation-nagaland.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகா_தாய்மார்கள்_சங்கம்&oldid=4110173" இலிருந்து மீள்விக்கப்பட்டது