நாச்சனாம்பட்டி
தருமபுரி மாவட்ட சிற்றூர்
நாச்சனாம்பட்டி (Nachanampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் தொட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643426.
நாச்சனாம்பட்டி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636903 |
அமைவிடம் தொகு
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°01'53.6"N 78°28'30.4"E[1] ஆகும்.
மக்கள் வகைபாடு தொகு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 199, மொத்த மக்கள் தொகைகள் 770 ஆகும். இதில் 376 ஆண்களும், 394 பெண்களும் அடங்குவர்.[2]