நாட்டுத் தகைவிலான்

நாட்டுத் தகைவிலான்
Hirundo tahitica - Pak Thale.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Hirundinidae
பேரினம்: Hirundo
இனம்: H. tahitica
இருசொற் பெயரீடு
Hirundo tahitica
Gmelin, 1789
நாட்டுத் தகைவிலான்

ஆங்கிலத்தில் Pacific swallow என்றழைக்கப்படும் நாட்டுத் தகைவிலான் தெற்கு ஆசியாவிலும் தென் பசிபிக் தீவுகளிலும் காணப்படுகிறது.

பெயர்கள்தொகு

தமிழில் :நாட்டுத் தகைவிலான்

ஆங்கிலப்பெயர் :Pacific swallow

அறிவியல் பெயர் :Hirundo tahitica [2]

உடலமைப்புதொகு

13 செ.மீ. - நெற்றி செம்பழுப்பு உடலின் மேற்பகுதி பசுமை தோய்ந்த பளபளக்கும் கருப்பு, மேவாய், தொண்டை, மார்பின் மேற்பகுதி ஆகியன செம்பழுப்பு, எஞ்சிய வயிறு, வாலடி ஆகியன வெளிர் சாம்பல் நிறம்.

காணப்படும் பகுதிகள் ,உணவுதொகு

நீலகிரி சார்ந்த மலைப்பகுதிகளில் காபி, ஆதயிலைத் தோட்டங்களைச் சார்ந்து மக்களைப் பற்றிய அச்சமின்றி பறந்து திரிவது காடுகளில் ஐந்தாறு பறவைகள் நெருக்கமாக அமர்ந்திருக்கக் காணலாம்.இணையாகவோ சிறு குழுவாகவோ அலைந்து பறந்து, பறக்கும் வண்டுகளையும் சிறகுடைய பூச்சிகளையும் பிடித்துத் தின்னும். [3]

இனப்பெருக்கம்தொகு

மார்ச் முதல் மே முடிய உள்ள பருவத்தில் வீட்டுச் சுவர்கள், பாறைகள், மதகுப்பாலங்கள், சுரங்க வழிகள் ஆகியவற்றில் இறவாரம் போன்ற பாதுகாப்பான மேற்சரிவு உள்ள இடத்தில் சேற்று உருண்டைகளைக் கொண்டு கூடமைத்து 2 அல்லது 3 முட்டைகள் இடும். ஒரே இடத்தில் அருகருகே இரண்டு மூன்று கூடுகளையும் காணலாம்.

படங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Hirundo tahitica". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. "நாட்டுத் தகைவிலான்Pacific_swallow". பார்த்த நாள் 1 நவம்பர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:104
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டுத்_தகைவிலான்&oldid=2456766" இருந்து மீள்விக்கப்பட்டது