நாதஸ்வரம் (தொலைக்காட்சித் தொடர்)

நாதஸ்வரம் சன் தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற மெகா தொடர் ஆகும். இந்தத் தொடரை திரு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, திருமுருகன் எழுதி மற்றும் இயக்கியுள்ளார். த. ச. ப. கே. மௌலி, பூவிலங்கு மோகன், திருமுருகன், ஸ்ருதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

நாதஸ்வரம்
வகைநாடகம்
எழுத்துதிருமுருகன்
முகப்பு இசைசஞ்சீவ் ரதன்
பிண்ணனி இசைகிரண்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்1,356
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்திரு பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடட்
ஒளிப்பதிவுசரத் கே. சந்தர்
ஓட்டம்ஏறத்தாழ 20-23 நிமிடங்கள் (ஒருநாள் ஒளிபரப்பு)
தயாரிப்பு நிறுவனங்கள்திரு பிக்சர்ஸ்
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்19 ஏப்ரல் 2010 (2010-04-19) –
9 மே 2015 (2015-05-09)

இந்தத் தொடர் குடும்பக் கதையை மையமாக வைத்து காரைக்குடி நகரிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் சன் குடும்பம் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கதை சுருக்கம் தொகு

அண்ணன் தம்பி பாசம், மாமியார் மருமகள் பிரச்சினை, தங்கைகளின் பாரத்தை தாங்கும் அண்ணன் என குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இந்த தொடர்.

நடிகர்கள் தொகு

  • த. ச. ப. கே. மௌலி -சொக்கலிங்கம்.
  • திருமுருகன் -கோபி
  • பூவிலங்கு மோகன் -மயில்வாகனன்.
  • ஸ்ருதிகா -மலர்
  • ஜெயந்தி நாராயணன் -மீனாட்சி
  • தேனீ சத்யபாமா -தெய்வானை

விருதுகள் மற்றும் பரிந்துரைகள் தொகு

ஆண்டு விருது பிரிவு பெற்றவர் முடிவு
2012 சன் குடும்பம் விருதுகள் சிறந்த கதாநாயகன் திருமுருகன் வெற்றி
சிறந்த மாமனார் மகாநதி சங்கர் வெற்றி
சிறந்த மருமகள் ஸ்ரிதிகா வெற்றி
சிறந்த தந்தை மவுலி வெற்றி
சிறந்த நகைச்சுவை நடிகர் முனீஸ்ராஜ் வெற்றி
தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருது - சிறந்த வசனகர்த்தா வாசு பாரதி வெற்றி
தயாரிப்பாளர்களுக்கான விருது - சிறந்த தயாரிப்பு நிறுவனம் திரு பிக்சர்ஸ் வெற்றி

இவற்றை பார்க்க தொகு

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி நாதஸ்வரம்
(19 ஏப்ரல் 2010 – 9 மே 2015)
அடுத்த நிகழ்ச்சி
இதயம்
(10 ஆகஸ்ட் 2009 – 16 ஏப்ரல் 2010)
குலதெய்வம்
(11 மே 2015 – 13 ஏப்ரல் 2018)