நானாஸ் தீவு
நானாஸ் தீவு அல்லது அன்னாசி தீவு (மலாய்: Pulau Nanas Johor; ஆங்கிலம்:Johor Pineapple Island; சீனம்: 柔佛菠萝岛) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், தென் சீனக் கடலின் ஜொகூர் நீரிணையில் உள்ள ஒரு தீவாகும். ஜொகூர் பாருவிற்கும் அன்னாசி தீவிற்கும் இடையிலான தூரம் 25 கி.மீ.[1]
புவியியல் | |
---|---|
அமைவிடம் | ஜொகூர் நீரிணை தென் சீனக் கடல் |
ஆள்கூறுகள் | |
தீவுக்கூட்டம் | தீபகற்ப மலேசியா; மலேசியா |
மொத்தத் தீவுகள் | 1 |
பரப்பளவு | 0.3 km2 (0.12 sq mi) |
நிர்வாகம் | |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் |
ஜொகூர் மாநிலத்தின் கடற்கரை நகரங்களான பாசிர் கூடாங்; மற்றும் தஞ்சோங் லங்சாட் நகரங்களுக்கு இடையில் ஜொகூர் நீரிணையில் அமைந்துள்ளது.
அத்துடன் சிங்கப்பூர், புலாவ் உபின் தீவுக்கும் அருகில் உள்ளது. மலேசியாவில் உள்ள தமிழர்கள் இந்தத் தீவை புலாவ் நானாஸ் என்று அழைக்கிறார்கள்.
பொது
தொகுசுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் தீவில் மேற்கொள்ளப்பட்ட பாறை உடைப்பு நடவடிக்கைகளினால் தீவின் பெரும் பகுதி அழிந்து விட்டது. கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டன.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பொதுமக்களின் தொடர் அழுத்தங்களினால், கல் உடைக்கும் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் நிறுத்தப்பட்டன.
இருப்பினும் பாறை உடைப்பு நடவடிக்கைகளினால் தீவில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் தீவின் நடுவில் ஒரு பெரிய ஏரியும் உருவாகி உள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The distance between Johor Bahru and Pineapple Island is 25 km". பார்க்கப்பட்ட நாள் 17 March 2024.
- ↑ "Cabaran Malaysia di Pulau Merambong & Pulau Nanas". Archived from the original on 2017-08-14. பார்க்கப்பட்ட நாள் 2024-03-17.