நானோகைலா
நானோகைலா | |
---|---|
நானோகைலா பெர்பர்வா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நானோகைலா பொயர்கோவ், கோரின் & செர்சு, 2021
|
மாதிரி இனம் | |
மைக்ரோகைலா அனெக்டன்சு பெளலஞ்சர், 1900 | |
சிற்றினம் | |
9, உரையினை காண்க | |
வேறு பெயர்கள் | |
|
நானோகைலா (Nanohyla) என்பது கூர்வாய்த் தவளை (மைக்ரோகைலிடே) குடும்பத்தில் உள்ள தவளைகளின் பேரினமாகும். இந்தப்பேரினத்தின் சிற்றினங்கள் குள்ள-கூர்வாய்த் தவளைகள் என்று அழைக்கப்படுகின்றன. தென்கிழக்கு ஆசியா முழுவதும் வியட்நாம், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, புரூணை, இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்சு ஆகிய நாடுகளில் இந்த பேரினத்தின் சிற்றினங்கள் காணப்படுகின்றன.[1][2]
வகைப்பாட்டியல்
தொகுநானோகைலாவின் அனைத்து சிற்றினங்களும் முன்பு மைக்ரோகைலாவில் வைக்கப்பட்டன. இருப்பினும், 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மைக்ரோகைலா மற்றும் கிளைபோகுளோசசு ஆகியவற்றிலிருந்து நானோகைலா ஒரு தனி பரம்பரையைத் தோற்றுவிக்க உருவவியல் மற்றும் தொகுதிப் பிறப்பு ஆதாரங்களைப் பயன்படுத்தியது.[2]
சிற்றினங்கள்
தொகுநானோகைலாவில் தற்போது ஒன்பது சிற்றினங்கள் உள்ளன. அவை:[1][2]
- நானோகைலா அனாமென்சிசு (சுமித், 1923) (அன்னம் கோரஸ் தவளை)
- நானோகைலா அனெக்டென்சு (பெளலென்ஜர், 1900) (லாருட் மலை நெல் தவளை)
- நானோகைலா ஆர்போரிகோலா (பொயர்கோவ், வாசிலிஎவா, ஓரல்வோ, கேல்யோயான், திரான், லீ, கிரிடோவா & கெய்சுலெர், 2014)
- நானோகைலா கோன்ஜியாயோனென்சிசு (கோஆங், குயென், லூஆங், குயேன், ஓரலோவ், சென், வாங் & ஜியாங், 2020)[3]
- நானோகைலா மர்மோராட்டா (பேயின் & குயென், 2004)
- நானோகைலா நானோபோலெக்சா (பேயின் & குயென், 2004)
- நானோகைலா பெர்பர்வா (இன்ஜெர் & பிராக்நர், 1979)
- நானோகைலா பெட்ரிஜெனா (இன்ஜெர் & பிராக்நர், 1979)
- நானோகைலா புல்செல்லா (பொயர்கோவ், வாசிலிஎவா, ஓரல்வோ, கேல்யோயான், திரான், லீ, கிரிடோவா & கெய்சுலெர், 2014)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Frost, Darrel R. (2021). "Nanohyla Gorin, Scherz, Korost, and Poyarkov, 2021". Amphibian Species of the World: an Online Reference. Version 6.1. American Museum of Natural History. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5531/db.vz.0001. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
- ↑ 2.0 2.1 2.2 Gorin, Vladislav A.; Scherz, Mark D.; Korost, Dmitriy V.; Poyarkov, Nikolay A. (2021-12-01). "Consequences of parallel miniaturisation in Microhylinae (Anura, Microhylidae), with the description of a new genus of diminutive South East Asian frogs" (in en). Zoosystematics and Evolution 97 (1): 21–54. doi:10.3897/zse.97.57968. https://zse.pensoft.net/article/57968/.
- ↑ Hoang van, Chung & Anh, Luong & Nguyen, Truong & Orlov, Nikolai & Chen, Youhua & Wang, Bin & Jian-Ping, Jiang. (2020). A new species of Microhyla (Amphibia: Anura: Microhylidae) from Langbian Plateau, Central Vietnam. Asian Herpetological Research. 11. 161–182. http://10.16373/j.cnki.ahr.190060[தொடர்பிழந்த இணைப்பு].