நான் பெத்த மகனே

நான் பெத்த மகனே 1995 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.

நான் பெத்த மகனே
இயக்கம்வி.சேகர்
தயாரிப்புஎஸ்.தமிழ்செல்வி சேகர்
கதைவி.சேகர்
இசைசந்திரபோஸ்
நடிப்புநிழல்கள் ரவி
ஊர்வசி
மனோரமா
ராதாபாய்
வி. கோபாலகிருஷ்ணன்
சி. கே. சரஸ்வதி
வடிவேலு
கோவை சரளா
ராதிகா
ராஜேஸ்வரி
சீதாலக்ஷ்மி
சண்முகசுந்தரி
ஒளிப்பதிவுஜி. ராஜேந்திரன்
படத்தொகுப்புஏ. பி. மணிவண்ணன்
வெளியீடுசனவரி 04, 1995
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகைதொகு

குடும்பப்படம்

கதைதொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ரவி (நிழல்கள் ரவி) ஆண்டாள் என்னும் பெண்மணியின் (மனோரமா) ஒரே மகன். ஆண்டாள் ரவியின் வாழ்க்கை மீது மிகவும் அக்கறை கொண்டு இருப்பவர். அவர் தனது மகனுக்குத் திருமணம் செய்விக்க நல்ல குணம், அம்சம் மற்றும் சாதுவான பெண்ணைத் தேடுகிறார். ஏனென்றால் ரவிக்கு வரப்போகும் மனைவி சாதுவாக இல்லாவிட்டால், அவள் அவனைக் கட்டுப்பாடு விதித்தோ, அச்சுறுத்தல் செய்தோ தன்னிடம் இருந்து பிரித்து விடுவாள் என்ற பயம் அவருக்கு இருக்கிறது. அவர் சாந்தமான வேலைக்காரி உமா மகேஸ்வரி (ஊர்வசி) என்ற பெண்ணைத் தேடிப்பிடித்து தனது மகன் ரவிக்குத் திருமணம் செய்கிறார். எப்பொழுதும் அவர்கள் வீட்டில் ஆண்டாள் அம்மாவின் அதிகாரமே ஆதிக்கம் செலுத்துகிறது. உமா தன் மனதை வெளிக்காட்டத் தொடங்கும் போது, ஆண்டாள் தனது கண்டிப்பைக் கட்டுகிறார். திடீர் என்று உமா தற்கொலை செய்கிறாள். அவளது தற்கொலைக்கு ஆண்டாள் தான் காரணம் என்று கைது செய்யபடுகிறார். ஆனால் உண்மையில் தான் எதுவும் உமாவைச் செய்யவில்லை என்று ஆண்டாள் கூறுவதை ரவி கூட நம்பவில்லை. உண்மையான காரணம் வெளிப்படுவதும், அவர் குற்றவாளியில்லையென இறுதியில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுவதும் எவ்வாறு என்று தாய் தனது மகன் மேல் கொண்ட அதீத பாசத்தைக் காட்டும் திரைச் சித்திரம் இது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_பெத்த_மகனே&oldid=2682735" இருந்து மீள்விக்கப்பட்டது