நாமக்கல் தொடருந்து நிலையம்

நாமக்கல் தொடருந்து நிலையம் (Namakkal railway station, நிலையக் குறியீடு:NMKL) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, நாமக்கல் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் புதிதாக உருவாக்கப்பட்ட சேலம் - கரூர் பாதையில் இருக்கும் ஒரு நிலையமாகும். இது மே 2013 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது.[2] இந்த நிலையம் இந்திய இரயில்வேயின், தெற்கு இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படும், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது. இது கரூர் - சேலம் வழிதடத்தில் உள்ள ஒரு முக்கியமான நிலையம். பெங்களூரு, மைசூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு தினசரி தொடருந்துகளும், ராமேஸ்வரம் மற்றும் நாகர்கோயில் ஆகிய பகுதியில் இருந்து வாராந்திர தொடருந்துகளும் இயக்கப்படுகிறது.

நாமக்கல்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சேந்தமங்கலம் சாலை, பாரதியார் நகர், நாமக்கல், தமிழ்நாடு -637001
இந்தியா
ஆள்கூறுகள்11°08′N 78°06′E / 11.14°N 78.10°E / 11.14; 78.10
ஏற்றம்186 மீட்டர்கள் (610 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்சேலம் - கரூர் வழித்தடம்
நடைமேடை3
இணைப்புக்கள்ஆட்டோ ரிக்சா, வாடகையுந்து நிலையம், பேருந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுNMKL
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம் தொடருந்து கோட்டம்
வரலாறு
திறக்கப்பட்டதுமே 2013; 11 ஆண்டுகளுக்கு முன்னர் (2013-05)
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
நாமக்கல் is located in தமிழ் நாடு
நாமக்கல்
நாமக்கல்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
நாமக்கல் is located in இந்தியா
நாமக்கல்
நாமக்கல்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

தொகு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6][7]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, நாமக்கல் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 13.28 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[8][9][10][11][12][13][14][15]


போக்குவரத்து

தொகு

இந்த நிலையம் வழியாக செல்லும் அனைத்து தொடருந்துகளும் நிறுத்தப்படுகிறது.

இயக்கப்படும் தொடருந்துகள்

தொகு

தினசரி தொடருந்துகள்

தொகு

கரூரை நோக்கி செல்லும் தொடருந்துகள்

  • 76855 - சேலம் - கரூர் பயணிகள் தொடருந்து (காலை)
  • 76801 - சேலம் - கரூர் பயணிகள் தொடருந்து (மதியம்)
  • 76857 - சேலம் - கரூர் பயணிகள் தொடருந்து (மாலை)
  • 22651 - சென்னை சென்ட்ரல் - பாலக்காடு அதிவிரைவுத் தொடருந்து
  • 17235 - பெங்களூர் - நாகர்கோயில் விரைவுத் தொடருந்து
  • 16353 - காச்சிக்குடா - நாகர்கோயில் வாராந்திர விரைவுத் தொடருந்து
  • 12689 - சென்னை சென்ட்ரல் - நாகர்கோயில் வாராந்திர விரைவுத் தொடருந்து
  • 16734 - ஒக்கா - இராமேஸ்வரம் வாராந்திர விரைவுத் தொடருந்து
  • 22497 - ஸ்ரீ கங்காநகர் - திருச்சிராப்பள்ளி
  • 16339 - மும்பை - நாகர்கோயில் விரைவுத் தொடருந்து
  • 11021 - தாதர் - திருநெல்வேலி சாளுக்யா விரைவுத் தொடருந்து

சேலம் நோக்கி செல்லும் தொடருந்துகள்

  • 76856- கரூர் - சேலம் பயணிகள் தொடருந்து (காலை)
  • 76802 - கரூர் - சேலம் பயணிகள் தொடருந்து (மதியம்)
  • 76858 - கரூர் - சேலம் பயணிகள் தொடருந்து (மாலை)
  • 22652 - பாலக்காடு - சென்னை சென்ட்ரல் அதிவிரைவுத் தொடருந்து
  • 17236 - நாகர்கோயில் -பெங்களூர் விரைவுத் தொடருந்து
  • 16354 - நாகர்கோயில் - காச்சிக்குடா வாராந்திர விரைவுத் தொடருந்து
  • 12690 - நாகர்கோயில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர விரைவுத் தொடருந்து
  • 16733 - இராமேஸ்வரம் - ஒக்க வாராந்திர விரைவுத் தொடருந்து
  • 22498 - திருச்சிராப்பள்ளி - ஸ்ரீ கங்காநகர்
  • 16340 - நாகர்கோயில் - மும்பை விரைவுத் தொடருந்து
  • 11022 - திருநெல்வேலி - தாதர் சாளுக்யா விரைவுத் தொடருந்து

சிறப்பு தொடருந்துகள்

தொகு

கரூரை நோக்கி செல்லும் தொடருந்துகள்

  • 01704 - ஜபல்பூர் - திருநெல்வேலி அதிவிரைவுத் தொடருந்து

சேலம் நோக்கி செல்லும் தொடருந்துகள்

  • 01703 - திருநெல்வேலி - ஜபல்பூர் அதிவிரைவுத் தொடருந்து

மேற்கோள்கள்

தொகு
  1. "நாமக்கல் வழியாக 4 கூடுதல் ரயில்கள் விரைவில் இயக்கம்: தெற்கு ரயில்வே ஆலோசனை". தினமணி (28 நவம்பர், 2019)
  2. "New passenger train chugs into grand reception at Karur junction". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 10 June 2014.
  3. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  4. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  5. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
  6. https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
  7. https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
  8. https://news.railanalysis.com/southern-railway-identifies-90-railway-stations-sanctions-rs-934-crore-for-redevelopment-of-stations-under-amrit-bharat-station-scheme/
  9. https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
  10. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/Feb/22/15-railway-stations-in-salem-division-to-be-upgraded-2549648.html
  11. https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=16014&id=0,4,268
  12. https://www.pressreader.com/india/the-hindu-erode-9WW6/20240603/281578065800613
  13. https://www.thehindu.com/news/cities/Coimbatore/foundation-laid-for-redevelopment-of-eight-stations-in-salem-railway-division-under-amrit-bharat-station-scheme/article67887945.ece
  14. https://www.youtube.com/watch?v=_9JwQKh7iM0
  15. https://tamil.news18.com/namakkal/renovated-work-started-at-namakkal-railway-station-at-a-cost-of-value-rs-13-28-crore-ptb-pdp-1361282.html

வெளி இணைப்புகள்

தொகு