நாராயண வம்சம்

நாராயண வம்சம் (Narayan dynasty) வாரணாசியை ஆண்ட ஒரு அரச குடும்பமாகும். 18 ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேர்ரசு சிதைந்த பின்னர், குடும்பம் வாரணசி அயோத்தி நவாப் மற்றும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் துணைப் பகுதியாக ஆட்சி செய்யப்பட்டது. 1911 ஆம் ஆண்டில், வாரணாசி பிரித்தானிய இந்தியாவின் முழு அளவிலான சுதேச அரசாக மாறியது. மேலும் நாராயண வம்சம் 1948 இல் சுதந்திர இந்தியாவுடன் இணையும் வரை அதை பிரிட்டிசு குத்தகைதாரர்களால் ஆட்சி செய்யப்படு வந்தது. [1]

வாரணாசி அரச்குலத்தின் கொடி

இன்றும் வம்சத்தின் பெயரிடப்பட்ட ஆட்சியாளரான காசி நரேஷ் வாரணாசி மக்களால் மதிக்கப்படுகிறார். மதத் தலைவரான அவரை, வாரணாசி மக்கள் சிவனின் அவதாரம் என்று கருதுகின்றனர். அவர் தலைமை கலாச்சார புரவலராகவும், மற்றும் அனைத்து மத கொண்டாட்டங்களின் இன்றியமையாத பகுதியாகும் இருந்துள்ளார். [2]

வாரணாசி அரசர்களின் காலவரிசை
இடது: மகராஜாவின் கோட்டையின் (ராம்நகர் கோட்டை), முன்வாயில், 1869. வலது: கோட்டையின் நுழைவு வாயில், 1905.

ஜமீந்தார்கள்: 1770 முதல் ஆரம்பம் தொகு

 
பெனாரஸ் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா சேத் சிங்

குடும்பத்தின் பாரம்பரியம் 1000 மாவது ஆண்டிற்கு செல்கிறது. வாரணாசிக்கு அருகிலுள்ள உட்டாரியா என்ற கிராமத்தில் ஒரு சந்நியாசி இருந்தார். அவரது சந்ததியினரின் ஆதிக்கங்களுக்கு அடுத்ததாக இப்பகுதி ஒரு இந்து ராஜாவால் ஆளப்பட்டது.

முகலாயப் பேரரசின் வீழ்ச்சியுடன், அயோத்திற்கு தெற்கே, வாரணாசி, கோரக்பூர், தேவரியா, காசிப்பூர், பல்லியா மற்றும் பீகார் ஆகிய நாடுகளின் வளமான நதிப்படுகையின் அரிசி வளரும் பகுதிகளிலும், வங்காளத்தின் எல்லைகளிலும், 'இராணுவம்' தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தியது. இந்து இளவரசர்களின் வலுவான குல அமைப்பு அவர்களுக்கு வெற்றியை அளித்தது. வாரணாசி ராஜாக்களை ஆதரிக்கும் ஒரு லட்சம் குலத்தவர்களால் பிற்காலத்தில் வாரணாசி, கோரக்பூர் மற்றும் ஆசம்கர் மாவட்டங்களாக மாறின .

தோற்றம் தொகு

வாரணாசியின் அரச மாளிகை ஒரு பழங்கால கௌதம குலத்தைச் சேர்ந்தது. இது வாரணாசிக்கு அருகிலுள்ள கங்காபூரிலிருந்து தோன்றியது. 1000ஆம் ஆண்டைச் சேர்ந்தது.

மான்சா ராம் தொகு

17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அரசக் குடும்பத்தைச் சேர்ந்த மன்சா ராம், வாரணாசியின் சுபாதார் ருஸ்தம் அலிகானின் சேவையில் நுழைந்தார். அவர் மிகுந்த சக்திவாய்ந்தவராக வளர்ந்து, பல போர்களை நடத்தி, சுபாதார்களின் சேவையில் கஸ்வாரின் ஜமீந்தாராக உயர்ந்தார். முஸ்லீம் ஆட்சியாளர்களிடம் இழந்த தனது முன்னோர்களின் இராச்சியத்தை மீண்டும் கைப்பற்றினார்.

குறிப்புகள் தொகு

  1. Swati Mitra 2002, ப. 124-126.
  2. Swati Mitra 2002, ப. 216.

நூற்பட்டியல் தொகு

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண_வம்சம்&oldid=3165168" இலிருந்து மீள்விக்கப்பட்டது