நார்மன் ஏவொர்த்
சர் வால்டர் நார்மன் ஏவொர்த் (Sir Walter Norman Haworth) எஃப்ஆர்எஸ் [1] (19 மார்ச் 1883 - 19 மார்ச் 1950) ஒரு பிரித்தானிய வேதியியலாளர் ஆவார். இவர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது அஸ்கார்பிக் அமிலம் ( உயிர்ச்சத்து சி ) மீதான இவரது அற்புதமான பணிக்காக மிகவும் பிரபலமானவர். இவர் 1937 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை "கார்போவைதரேட்டு மற்றும் உயிர்ச்சத்து சி பற்றிய ஆய்வுகளுக்காக" பெற்றார். இதர உயிர்ச்சத்துகள் தொடர்பான ஆய்வுப் பணிகளுக்காக சுவிஸ் வேதியியலாளர் பவுல் கரீர் உடன் இந்த நோபல் பரிசு பகிர்ந்து கொள்ளப்பட்டது.[2]
சர் நார்மன் ஏவொர்த் | |
---|---|
நார்மன் ஏவொர்த் | |
பிறப்பு | ஒயிட் காப்பிசு, லங்காசைர், இங்கிலாந்து | 19 மார்ச்சு 1883
இறப்பு | 19 மார்ச்சு 1950 பார்ன்ட் கிரீன், வொர்செஸ்டெர்சைர், இங்கிலாந்து | (அகவை 67)
தேசியம் | பிரித்தானியர் |
துறை | கரிம வேதியியல் |
பணியிடங்கள் | புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம் டர்ஹாம் பல்கலைக்கழகம் பர்மிங்காம் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | மான்செஸ்டர் பல்கலைக்கழகம் காட்டிஞ்சென் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | இளைய வில்லியம் என்றி பெர்க்கின், ஓட்டோ வாலெக் |
அறியப்படுவது | கார்போவைதரேட்டுகள் மற்றும் உயிர்ச்சத்து சி தொடர்பான ஆய்வுப்பணிகள் |
விருதுகள் | டேவி பதக்கம் (1934) வேதியியலுக்கான நோபல் பரிசு (1937) இராயல் பதக்கம் (1942) |
ஏவொர்த் பல சர்க்கரைடுகளின் சரியான வடிமைப்பை யூகித்தறிந்து நிரூபணங்களையும் வழங்கினார். மேலும், முப்பரிமாண சர்க்கரை கட்டமைப்புகளை வசதியான இரு பரிமாண வரைகலை வடிவமாக மாற்றும் ஏவொர்த்தின் பணிக்காக கரிம வேதியியலாளர்களிடையே அறியப்பட்டவர்.
கல்வி வாழ்க்கை
தொகுதனது தந்தையால் நிர்வகிக்கப்படும் உள்ளூர் ரைலாண்டின் லினோலியம் தொழிற்சாலையில் பதினான்கு வயதிலிருந்து சிறிது காலம் பணிபுரிந்தார். பின்னர், வேதியியல் படிப்பதற்காக 1903 ஆம் ஆண்டில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பெற்றோரின் தீவிர ஊக்கங்கெடுப்பையும் மீறி இவர் இந்த முயற்சியை மேற்கொண்டார். 1906 ஆம் ஆண்டில் தனது மேதகைமை பட்டத்தை முதல் வகுப்புடன் பெற்றார். வில்லியம் ஹென்றி பெர்கின் இளையரின் கீழ் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, 1851 ஆம் ஆண்டு கண்காட்சிக்காக இராயல் கமிஷனிடமிருந்து ஆராய்ச்சி உதவித்தொகையைப் பெற்றார்.[3] மேலும், காட்டி ஓட்டோ வாலெக்கின் ஆய்வகத்தில் ஒரே ஒரு ஆண்டு படிப்பிற்குப் பிறகு தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். 1911 ஆம் ஆண்டில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஒரு அறிவியல் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார், அதன் பிறகு இம்பீரியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேதியியலில் மூத்த செயல்முறை விளக்குநராக சிறிது காலம் பணியாற்றினார்.
1912 ஆம் ஆண்டில், ஏவொர்த் ஸ்காட்லாந்தில் உள்ள புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகத்தின் யுனைடெட் கல்லூரியில் விரிவுரையாளரானார். கார்போவைதரேட்டு வேதியியலில் ஆர்வம் காட்டினார். இது செயின்ட் ஆண்ட்ரூஸில் தாமஸ் பர்டி (1843-1916) மற்றும் ஜேம்ஸ் இர்வின் (1877-1952) ஆகியோரால் ஆராயப்பட்டது. ஏவொர்த் 1915 ஆம் ஆண்டில் எளிய சர்க்கரைகள் பற்றிய தனது பணியைத் தொடங்கினார். மெத்தில் பைசல்பேட்டு மற்றும் ஆல்கலி (தற்போது ஹாவர்த் மெத்திலேஷன் என்று அழைக்கப்படுகிறது) ஆகியவற்றைப் பயன்படுத்தி சர்க்கரைகளின் மீத்தைல் ஈதர்களை தயாரிப்பதற்கான ஒரு புதிய முறையை உருவாக்கினார். பின்னர் இவர் இரட்டைச்சாக்கரைடுகளின் கட்டமைப்பு அம்சங்களைப் பற்றிய ஆய்வுகளைத் தொடங்கினார். முதலாம் உலகப் போரின் போது (1914-1918) பிரித்தானிய அரசாங்கத்திற்காக வேதிப்பொருள்கள் மற்றும் மருந்துகளை தயாரிப்பதற்காக புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகத்தில் ஆய்வகங்களை ஏவொர்த் ஏற்பாடு செய்தார்.
இவர் 1920 ஆம் ஆண்டில் டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆம்ஸ்ட்ராங் கல்லூரியில் (டைன் ஆற்றங்கரை நியூகாசில்) கரிம வேதியியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு ஏவொர்த் கல்லூரியில் வேதியியல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் இங்கிலாந்தின் வடகிழக்கில் இருந்த காலத்தில் தான் இவர் வயலட் சில்டன் டோபியை மணந்தார்.
1925 ஆம் ஆண்டில் இவர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக மேசன் நியமிக்கப்பட்டார் (அவர் 1948 வரை பதவி வகித்தார்). அறிவியலுக்கான இவரது நீடித்த பங்களிப்புகளில் ஒன்று ஒளியியல் சுழற்சித்தன்மை உள்ள சர்க்கரைகளின் பல கட்டமைப்புகளை உறுதிப்படுத்தியது: 1928 வாக்கில், இவர் மால்டோஸ், செலோபயோஸ், லாக்டோஸ், ஜெண்டியோபயோஸ், மெலிபயோஸ், ஜெண்டியோபயோஸ், ராஃபினோஸ் போன்றவற்றின் கட்டமைப்புகளைக் கண்டறிந்து உறுதிப்படுத்தினார். ஆல்டோசு சர்க்கரைகளின் குளுக்கோசைடு வளையம் டாட்டோமெரிக் அமைப்பாக இருப்பதை இவர் உறுதிப்படுத்தினார். இவர் 1929 ஆம் ஆண்டில் "சர்க்கரைகளின் கட்டமைப்பு" என்ற உன்னதமான தலைப்பிலான கட்டுரையை வெளியிட்டார்.
1933 ஆம் ஆண்டில், அப்போதைய உதவி இயக்குநர் (பின்னர் சர்) எட்மண்ட் ஹிர்ஸ்ட் மற்றும் முதுகலை மாணவர் மாரிஸ் ஸ்டேசி தலைமையிலான குழுவுடன் இணைந்து பணிபுரிந்தார். (அவர் 1956 இல் அதே மேசன் இருக்கைக்கு உயர்ந்தார்), உயிர்ச்சத்து-சி யின் சரியான கட்டமைப்பு மற்றும் ஒளியியல்-மாற்றியத்தன்மை ஆகியவற்றைக் கண்டறிந்தார். உயிர்ச்சத்து 'சி' யின் தொகுப்புமுறை தயாரிப்பின் அறிக்கையைத் தந்தார்.[4] ஹங்கேரிய உடலியல் நிபுணர் ஆல்பர்ட் சென்ட்-கியோர்கி, "நீரில் கரையக்கூடிய உயிர்ச்சத்து சி" அல்லது "ஹெக்சுரோனிக் அமிலம்" (இயற்கை பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சேர்மத்தின் முந்தைய பெயர்) ஏவொர்த் தனது ஆரம்ப குறிப்பு மாதிரியை வழங்கினார். சார்லஸ் கிளென் கிங், ஹங்கேரிய பாப்ரிகாவிலிருந்து மொத்தமாக பிரித்தெடுக்க முடியும் என்று சமீபத்தில் கண்டுபிடித்தார். சேர்மத்தின் ஆன்டிஸ்கார்ப்யூடிக் பண்புகளை கௌரவிக்கும் வகையில், ஏவொர்த் மற்றும் ஸ்சென்ட்-கியோர்கி இப்போது மூலக்கூறுக்கு "ஏ-ஸ்கார்பிக் அமிலம்" என்ற புதிய பெயரை முன்மொழிந்தனர், எல்-அஸ்கார்பிக் அமிலம் அதன் முறையான வேதியியல் பெயராக உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது, இவர் பிரித்தானிய அணுகுண்டு திட்டம் பற்றிய ஆராய்ச்சியை மேற்பார்வையிட்ட MAUD குழுவின் உறுப்பினராக இருந்தார்.
அங்கீகாரம்
தொகுபர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பள்ளியின் பெரும்பகுதியைக் கொண்ட கட்டிடத்திற்கு ஏவொர்த் பெயர் சூட்டப்பட்டு நினைவுகூரப்பட்டது. 2007 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டில் [5] ஓய்வு பெறும் வரை பேராசிரியர் நைஜெல் சிம்ப்கின்ஸ் மற்றும் 2021 ஆம் ஆண்டு முதல் பேராசிரியர் நீல் சாம்ப்னஸ் பரணிடப்பட்டது 2021-06-30 at the வந்தவழி இயந்திரம் ஆகியோரால் நடத்தப்பட்ட ஏவொர்த் வேதியியல் துறையை இந்தப் பள்ளி கொண்டுள்ளது.
1977 ஆம் ஆண்டில் இராயல் மெயில் ஒரு தபால் தலையை வெளியிட்டது (நான்கு தொடர்களில் ஒன்று) வைட்டமின் சி-யின் தொகுப்பு முறை தயாரிப்பு மற்றும் இவர் பெற்ற நோபல் பரிசைப் பெற்ற சாதனையினை விளக்கும் வகையில் அஞ்சல் தலை இருந்தது.[6]
சர்க்கரைகளின் முப்பரிமாண அமைப்பை காகிதத்தில் குறிப்பிடும் எளிய முறையையும் இவர் உருவாக்கினார். முன்னோக்கைப் பயன்படுத்தி, இப்போது ஏவொர்த் முன்நீட்சி என அழைக்கப்படும் இந்த முறை, உயிர் வேதியியலில் இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.[7]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு1922 ஆம் ஆண்டில் இவர் சர் ஜேம்ஸ் ஜான்ஸ்டன் டோபியின் மகள் வயலட் சில்டன் டோபியை மணந்தார். இத்தம்பதியினருக்கு ஜேம்ஸ் மற்றும் டேவிட் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.
இவர் 1947 ஆம் ஆண்டில் நைட் பட்டம் பெற்றார்.
இவர் தனது 67வது பிறந்தநாளான 1950 மார்ச் 19 அன்று திடீரென மாரடைப்பால் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hirst, E. L. (1951). "Walter Norman Haworth. 1883–1950". Obituary Notices of Fellows of the Royal Society 7 (20): 372–404. doi:10.1098/rsbm.1951.0008. பப்மெட்:14894345.
- ↑ Hirst, E. L. (1950). "Sir Norman Haworth". Nature 165 (4198): 587. doi:10.1038/165587a0. பப்மெட்:15416703. Bibcode: 1950Natur.165..587H.
- ↑ 1851 Royal Commission Archives
- ↑ Davies, Michael B.; Austin, John; Partridge, David A. (1991), Vitamin C: Its Chemistry and Biochemistry, The Royal Society of Chemistry, p. 48, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85186-333-7
- ↑ www.chem.bham.ac.uk/staff/Simpkins.shtml. Retrieved 2 October 2010
- ↑ Mayo Clin Proc. (2002)77:108[தொடர்பிழந்த இணைப்பு] Stamp Vignette on Medical Science
- ↑ Garrett, R.; Grisham, C. M. (2005), Biochemistry (3rd ed.), Belmont, CA: Thomson Brooks/Cole, p. 207, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780534410209
புற இணைப்புகள்
தொகு- நார்மன் ஏவொர்த் on Nobelprize.org including the Nobel Lecture on December 11, 1937 The Structure of Carbohydrates and of Vitamin C