நா. இலட்சுமி நாராயணன்
நா. இலட்சுமி நாராயணன் (N. Lakshmi Narayanan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் மதுரை நகர்ப்பகுதியினைச் சேர்ந்தவர். மதுரை புனித மேரி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினையும், மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் தியாகராசர் கல்லூரியில் கல்லூரிக் கல்வியினைக் கற்றுள்ளார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பில் இளநிலை சட்டம் பட்டம் பெற்றுள்ளார். இவர் 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மதுரை மத்தி சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | நா. இலட்சுமி நாராயணன் | 29,399 | 39.9 | புதிது | |
காங்கிரசு | அ. இரத்தினம் | 16,420 | 22.28 | -21.54 | |
திமுக | எசு. பாண்டி | 14,676 | 19.92 | -28.99 | |
ஜனதா கட்சி | எசு. சுகுமாறன் | 12,780 | 17.34 | புதிது | |
பதிவான வாக்குகள் | 73,687 | 54.21 | -14.59 | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |