நிக்கல் செலீனைடு

வேதிச் சேர்மம்

நிக்கல் செலீனைடு (Nickel selenide) என்பது NiSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பல உலோக சால்கோகெனைடு சேர்மங்களுடன் ஒப்பிடுகையில் நிக்கல் செலீனைடு சேர்மத்திற்கான முகவிளக்கப் வரைபடம் சிக்கலானது ஆகும். பைரைட்டு கட்டமைப்பில் அமைந்த NiSe2 மற்றும் Ni2Se3. போன்ற நிக்கலின் வேறு இரண்டு செலீனைடுகள் அறியப்பட்டுள்ளன. பொதுவாக, நிக்கல் செலீனைடு விகிதவியல்வீத அளவுகளில் உருவாவதில்லை. எனவே Ni1-xSe, என்ற வாய்ப்பாட்டால் குறிப்பிடப்படுகிறது. (0 < x <0.15) [1] நிக்கல் செலீனைடு நுண்துகளாகக் கிடைக்கும்போது கருப்பு நிறத்தில் திண்மக் குறைக்கடத்தியாகவும், பெருமளவில் படிகங்களாகக் கிடைக்கும்போது பளபளப்பாகவும் கிடைக்கிறது. எல்லா கரைப்பான்களிலும் நிக்கல் செலீனைடு கரைகிறது. ஆனால், ஆக்சிசனேற்றும் அமிலங்களால் இது வலிமையாக தரமிறக்கப்படுகிறது.

நிக்கல் செலீனைடு

விகிதவியல் NiSe:      Ni      Se
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நிக்கல் செலீனைடு
வேறு பெயர்கள்
நிக்கல் செலீனைடு
நிக்கல் (II) செலீனைடு
இனங்காட்டிகள்
1314-05-2
ChemSpider 56182
EC number 215-216-2
பப்கெம் 62394
பண்புகள்
NiSe
வாய்ப்பாட்டு எடை 137.65 கி/மோல்
தோற்றம் கருப்புத்தூள்
அடர்த்தி 7.2 கி/செ.மீ3
கரையாது
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் []
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

நிக்கல், செலீனைடு தனிமங்கள் உயர் வெப்பநிலை வினைகளில் இணைந்து கலப்புமுக விளைபொருட்களாக உருவாகின்றன. ஓர் அழுத்தக்கலனில் உள்ள திரவ அமோனியாவில் தனிமங்களை இட்டு மிதவெப்பமுறை வினையினாலும் இதனைத் தயாரிக்கலாம்[2].

கட்டமைப்பு

தொகு

தொடர்புடைய பிற பொருட்களைப் போல நிக்கல் செலீனைடும் நிக்கல் ஆர்சினைடு நோக்குருவை ஏற்றுள்ளது. இக்கட்டமைப்பில் நிக்கல் எண்முகத்துடனும் செலீனைடுகள் முக்கோணப்பட்டகத் தளமாகவும் உள்ளன[3].

மேற்கோள்கள்

தொகு
  1. Zhongbin Zhuang, Qing Peng Jing Zhuang, Xun Wang, Yadong Li "Controlled Hydrothermal Synthesis and Structural Characterization of a Nickel Selenide Series" Chemistry - A European Journal 2005, Volume 12, pages 211–217. எஆசு:10.1002/chem.200500724
  2. Geoff Henshaw , Ivan P. Parkin, Graham A. Shaw "Convenient, room-temperature liquid ammonia routes to metal chalcogenides" J. Chem. Soc., Dalton Trans., 1997, 231-236. எஆசு:10.1039/A605665B
  3. Wells, A.F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்_செலீனைடு&oldid=4157379" இலிருந்து மீள்விக்கப்பட்டது