நிக்கோலா சுகைப்
நிக்கோலா சுகைப் (Nicola Scaife) ஆத்திரேலிய நாட்டின் சூடான காற்று பலூனிசிட் வீராங்கனை ஆவார். இவர் 1984 ஆம் ஆண்டு அல்லது 1985 ஆம் ஆண்டு பிறந்திருக்கலாம். [1] இவர் 2014 ஆம் ஆண்டு மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பெடரேசன் ஏரோனாட்டிக் இன்டர்நேசனல் நிறுவனத்தின் மகளிர் உலக சூடான காற்று பலூன் சாம்பியன்சிப்பை இரண்டு முறை வென்றுள்ளார்.[2]
லெசுனோவில் சுகைப், 2014 ஆம் ஆண்டு | ||||||||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 1984 அல்லது 1985 (வயது 38 - 39) [1] ஆல்பரி, நியூ சவுத் வேல்சு, ஆத்திரேலியா[2] | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
வாழ்க்கை
தொகுசுகைப் ஆத்திரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்சு பகுதியில் உள்ள ஆல்பரி என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்தார். [2] ஒரு பெண்மனியாக, சுகைப் மராத்தான் கயாக்கிங்கில் ஆத்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இருப்பினும் காயம் காரணமாக ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர் தனது தாயுடன் ஒரு சூடான காற்று பலூன் விமானத்தில் சென்று தொழிலில் ஆர்வம் காட்டினார். இவர் சூடான காற்று பலூன் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஆரம்பத்தில் நிர்வாகம் மற்றும் ஆதரவுப் பாத்திரங்களில் இருந்தார். பின்னர் 2006 ஆம் ஆண்டில் பறக்கத் தொடங்கினார்.[3] 2007 ஆம் ஆண்டில் இவர் தனது தனிப்பட்ட விமானியின் சான்றிதழைப் பெற்றார். பின்னர் வணிக விமானியாக மாறினார்.
இவரது முதல் போட்டி பலூனிங் நிகழ்வு 2013 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்சின் கனோவிந்த்ராவில் நடைபெற்றது. 2014 ஆம் ஆண்டு, போலந்து நாட்டின் லெசுனோவில் நடந்த முதல் மகளிர் உலக சாம்பியன்சிப் போட்டியில் சுகைப் வென்றார். இது அவரது நான்காவது போட்டி நிகழ்வாகும். [1] 2016 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் , லித்துவேனியாவின் பிர்சுடோனாசில் நடந்த 2 ஆவது பெடரேசன் ஏரோனாட்டிக் இன்டர்நேசனல் நிறுவனத்தின் மகளிர் உலக சூடான காற்று பலூன் சாம்பியன்சிப்பில் இவர் தனது பட்டத்தை வெற்றிகரமாக பாதுகாத்தார்.[2] 2018 ஆம் ஆண்டில், போலந்து நாட்டின் நால்க்சோ என்னும் இடத்தில் நடந்த 3வது பெடரேசன் ஏரோனாட்டிக் இன்டர்நேசனல் நிறுவனத்தின் மகளிர் உலக சூடான காற்று பலூன் சாம்பியன்சிப்பில் சுகைப் வெண்கலம் வென்றார்.
ஆத்திரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்சில் உள்ள கண்டர் பள்ளத்தாக்கில் சுகைப் மற்றும் அவரது கணவர் சூடான காற்று பலூனிங் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.[1]
இவரது வார்த்தைகள்
தொகுஉலக சாம்பியனான ஆக வேண்டும் என்ற இவரது கனவைக் கைவிடும்படி காயத்தால் கட்டாயப்படுத்திய உடனேயே இந்த நோய் பிடிபட்டதாகவும், மேலும் "உணவுக் கோளாறு முற்றிலும் பலவீனமடைகிறது, எதிர்காலம் இருப்பதாக நான் உணராத புள்ளிகள் இருந்தன" என்று அவர் கூறினார்.
மேலும் இவரது உலக சாம்பியன்சிப் போட்டி பங்கேற்பில் இவரது குழந்தை கியூகோ நிக்கோலா சுகைப் இவரது 14 மாத மகன் கியூகோவால் ஆதரிக்கப்பட்டார். மேலும் "ஒரு சாதாரண மனிதனாகவும், மற்றவர்களைப் போல சமூகத்தில் செயல்படுவதையும் என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை" என்றும் கூறியுள்ளார்.
"நான் இப்போது பகுதியளவு குணமடைந்துவிட்டதாக உணர்கிறேன். மேலும் முழுமையாக குணமடையவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் நான் இப்போது இருக்கும் நிலைக்கு வர இன்னும் ஆறு வருடங்கள் ஆகும். தற்போது நான் மிகவும் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன் என்றும் கூறியுள்ளார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "NSW mother wins ballooning world championship" (in en-AU). ABC News. 2014-09-18. http://www.abc.net.au/news/2014-09-18/nicola-scaife-wins-first-womens-ballooning-world-championship/5751094. "The 29-year-old"
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Hot Air Balloonist Nicola Scaife defends FAI World Title - ASAC Website" (in en-US). ASAC Website. 2016-07-11 இம் மூலத்தில் இருந்து 2016-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161226222437/http://www.asac.asn.au/2016/07/hot-air-balloonist-nicola-scaife-defends-fai-world-title/.
- ↑ "On top of the world: Australian Nicola Scaife wins World Women's Hot Air Balloon title". 2014-09-19. http://www.theaustralian.com.au/business/aviation/on-top-of-the-world-australian-nicola-scaife-wins-world-womens-hot-air-balloon-title/news-story/bc1d8138712555021bfbbc5b020e8f23.