நித்யா ராமராஜ்

நித்யா ராமராஜ் (Nithya Ramraj) (பிறப்பு: செப்டம்பர் 20,1998) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய தடகள வீராங்கனை ஆவார். இவர் 100 மீட்டர் தடை ஓட்டங்களில் போட்டியிடுகிறார். சீனாவின் காங்சூ நகரில் 2022 நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2] தரவரிசையில் சிறந்த தடகள வீரர் ஜோதி யர்ராஜிக்கு பின்னால் தடை ஓட்டத்தில் தரவரிசையில் இந்தியாவின் 2ம் இடத்தைப் பிடித்தார்.[3]

நித்யா ராமராஜ்
தனித் தகவல்
பிறப்புசெப்டம்பர் 20, 1998 (1998-09-20) (அகவை 26)
தமிழ்நாடு

இளமை வாழ்க்கை

தொகு

நித்யா, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை சரக்குந்து ஓட்டுநராக் இருக்கிறார். இவரது தாயார் மீனா வீட்டு வேளை செய்கிறார்.[4] மூன்று சகோதரிகளில் இவர் இளையவர்.[5] இவருடன் ஒட்டிப் பிறந்த வித்யாவும் ஒரு தடகள வீரர் ஆவார். இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் வளைதடிப் பந்தாட்டத்தை விளையாடத் தொடங்கினர். இவரது தாயார் 7 ஆம் வகுப்பிற்கு ஈரோடு பெண்கள் விளையாட்டு பள்ளியில் சேர்ந்தார். பின்னர் அங்கு இவர்கள் தடகளத்திற்கு மாறினர். நித்யா வருமான வரித்துறையில் பணிபுரிந்து வருகிறார்.[1]

தொழில் வாழ்க்கை

தொகு
  • சீனாவின் காங்சூவில் நடந்த 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீ தடை தாண்டி வெற்றிப் பெற்றார்.[3]
  • 2023: பேங்காக்கில்கில் நடைபெற்ற 25 வது ஆசிய தடகளப் போட்டிகளில் 2023 இல் ஸ்ப்ரிண்ட் தடைகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான்காவது இடத்தைப் பிடித்தார்.[6]
  • 2021: மார்ச் மாதத்தில், பட்டியாலாவில் உள்ள நேதாஜி சுபாஸ் தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 24 வது தேசிய கூட்டமைப்பு கோப்பை மூத்தோர் தடகளப் போட்டிகளில் 100 மீ தடைகளில் இவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[7]
  • 2019: அக்டோபரில், சார்க்கண்டின் ராஞ்சியில் நடந்த 59 வது தேசிய ஓபன் தடகளப் போட்டிகளில் 100 மீட்டர் தடைகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[7]
  • ஆகஸ்ட் மாதம், உத்தரப்பிரதேசத்தின் இலக்னோவில் நடைபெற்ற 9வது தேசிய மாநிலங்களுக்கு இடையேயான மூத்தோருக்கான தடகளப் போட்டிகளில் 100 மீட்டர் தடைகளில் இவர் நான்காவது இடத்தைப் பிடித்தார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 SportzConnect (2023-09-11). "Tamil Nadu Twins Vithya-Nithya aim for Asian Games medal". www.sportskeeda.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-29.
  2. "Vithya falls just short of Usha's 39-year-old 400m hurdles national mark". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-09-11. பார்க்கப்பட்ட நாள் 2023-09-29.
  3. 3.0 3.1 Rayan (2023-09-12). "Vithya Ramraj is living out a dream" (in en-IN). https://www.thehindu.com/sport/athletics/vithya-ramraj-is-living-out-a-dream/article67300102.ece. 
  4. "Twin Sisters Vithya and Nithya Ramraj Eye Asian Games Glory". News18 (in ஆங்கிலம்). 2023-09-10. பார்க்கப்பட்ட நாள் 2023-09-29.
  5. PTI (2023-09-11). "Twin sisters Vithya and Nithya Ramraj eye Asian Games glory". National Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-29.
  6. Rahul (2023-07-14). "Jyothi Yarraji triumphs in women's 100m hurdles to swell India's gold medal tally to three « Athletics Federation of India". Athletics Federation of India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-29.
  7. 7.0 7.1 7.2 "Athlete Details « Athletics Federation of India". Athletics Federation of India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-29.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்யா_ராமராஜ்&oldid=4110181" இலிருந்து மீள்விக்கப்பட்டது