ஜோதி யர்ராஜி
ஜோதி யாராஜி (Jyothi Yarraji) (பிறப்பு: ஆகஸ்ட் 28,1999) ஆந்திரப் பிரதேசத்தின் சேர்ந்த ஒரு இந்திய தடகள வீராங்கனை ஆவார்..[2] இஇவர் 100 மீட்டர் தடை ஓட்டங்களில் போட்டியிடும் இவர் இந்திய தேசிய சாதனையை வைத்திருக்கிறார். அனுராதா பிசுவாலின் நீண்டகால சாதனையை 10 மே 2022 அன்று 13.23 விநாடி என்ற நேரத்தில் கடந்து முறியடித்தார்.[1][3][4] அதன்பிறகு இவர் பல முறை சாதனையை முறியடித்துள்ளார். [5][6][7]
தனிநபர் தகவல் | |
---|---|
முழு பெயர் | ஜோதி யர்ராஜி |
தேசியம் | இந்தியா |
பிறப்பு | 28 ஆகத்து 1999 விசாகப்பட்டினம்,[1] ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | ஓட்டம் |
நிகழ்வு(கள்) | 100 மீ தடையோட்டம் |
பதக்கத் தகவல்கள் |
இளமை வாழ்க்கை
தொகுஜோதி, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்.[8] இவரது தந்தை சூரியநாராயணன் ஒரு பாதுகாப்புக் காவலராகவும், இவரது தாயார் வீட்டு உதவியாளராகவும் பணிபுரிகிறார். விசாகப்பட்டினம் பழைய நகரத்தில் உள்ள போர்ட் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரியில் தனது கல்வியை முடித்தார்.[8] பின்னர், ஐதராபாத்திலுள்ள இந்திய விளையாட்டு ஆணைய விடுதியில் சேர்ந்து அங்கு பயிற்சியாளர் ஒலிம்பிக் வீரரும் துரோணச்சார்யா விருதைப் பெற்றவருமான என் .ரமேஷின் கீழ் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.[8] பின்னர், மேம்பட்டப் பயிற்சிக்காக குண்டூர் சென்றார். 2019 முதல், புவனேசுவரத்திலுள்ள உள்ள ரிலையன்ஸ் தடகள உயர் செயல்திறன் மையத்தில் பிரித்தனிய பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹில்லியரின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார்.[8]
தொழில் வாழ்க்கை
தொகுசீனாவின் காங்சூ நகரில் நடந்த 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் தடை தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று அனைவரின் கவனத்தைப் பெற்றார். [9] ஆரம்பத்தில் இவர் ஒரு சீன தடகள வீரருடன் தவறான தொடக்கத்திற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் பின்னர் ஓட்டத்தைத் தொடங்க அனுமதிக்கப்பட்டார். இறுதியில், ஒரு மதிப்பாய்வுக்குப் பிறகு, சீன தடகள வீரர் வு யான்னி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இவர் வெள்ளிப் பதக்கத்திற்கு உயர்த்தப்பட்டார்.[9][10] 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கசக்கஸ்தானின் நூர் சுல்தான் நகரில் நடந்த 2023 ஆசிய உள்ள்ரங்க தடகளப்போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றதைத் தவிர, உள்ளரங்க 60 மீட்டர் தடைகளுக்கான தேசிய சாதனையை ஐந்து முறை முறியடித்தார்.[11]
2019 கோவிட் பெருந்தொற்று மற்றும் இவரது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்கவில்லை. ஆனால் 2022 ஆம் ஆண்டில் வலுவாக திரும்பி வந்தார். 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் தடைகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் இறுதிப் போட்டியில் 5 வது இடத்தைப் பிடித்த இந்திய மகளிர் 4 X 100 மீட்டர் ரிலே அணியின் ஒரு பகுதியாக இருந்தார். இந்தியாவின் தேசிய விளையாட்டுப் போட்டிகளின் 2022 பதிப்பில், 100 மீட்டர் மற்றும் 100 மீட்டர் தடை தாண்டுதல் ஆகிய இரண்டிலும் இவர் தங்கம் வென்றார்.[12] அக்டோபர் 17,2022 அன்று, 13 விநாடிகளுக்குள் தடைகளை தாண்டிய முதல் இந்திய பெண் ஆனார். அந்த ஆண்டில் 100 மீட்டர் பெண்கள் தடைகளில் இரண்டாவது சிறந்த ஆசியர் எனவும் 11 வது சிறந்த ஆசியர் எனவும் ஆனார்.[13] 2022 இந்திய தேசியப் போட்டிகளில் , பெண்கள் பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[14]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Nag, Utathya. "Jyothi Yarraji: India's rising star who overcame the hurdle of luck". Olympics. Archived from the original on 7 August 2022. பார்க்கப்பட்ட நாள் 23 June 2022.
- ↑ "Jyothi YARRAJI". Birmingham2022.com. Birmingham Organising Committee for the 2022 Commonwealth Games Limited. Archived from the original on 5 August 2022. பார்க்கப்பட்ட நாள் 5 August 2022.
- ↑ "Jyothi Yarraji smashes own-held national record in 100m hurdles after 11 days". The Bridge. Archived from the original on 23 May 2022. பார்க்கப்பட்ட நாள் 23 May 2022.
- ↑ "Jyothi Yarraji breaks 100m hurdles national record in Cyprus meet". Press Trust of India. 2022-05-11. Archived from the original on 13 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-05-29.
- ↑ "Meet Jyothi Yarraji – India's multiple record-breaking 100m hurdler". ESPN.IN. 27 May 2022. Archived from the original on 28 May 2022. பார்க்கப்பட்ட நாள் 29 May 2022.
- ↑ "Racing across Europe, breaking records: How hurdler Jyothi Yarraji rewrote NR thrice in 16 days". ESPN.IN. 29 May 2022. Archived from the original on 30 May 2022. பார்க்கப்பட்ட நாள் 29 May 2022.
- ↑ "Record Breakers of 2022 (Athletics): the complete list". ESPN.IN. 11 May 2022. Archived from the original on 3 June 2022. பார்க்கப்பட்ட நாள் 29 May 2022.
- ↑ 8.0 8.1 8.2 8.3 Nag, Utathya (2023-10-15). "Jyothi Yarraji: India's rising star who overcame the hurdle of luck". www.olympics.com. Archived from the original on 7 August 2022. பார்க்கப்பட்ட நாள் 2024-01-12.
- ↑ 9.0 9.1 "Asian Games 2023: Disqualified Jyothi Yarraji wins silver in women's 100m hurdles after incredible drama". India Today (in ஆங்கிலம்). Archived from the original on 12 January 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-01-12.
- ↑ "Jyothi Yarraji on silver medal upgrade at Asian Games: This medal has taught me a lot" இம் மூலத்தில் இருந்து 12 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240112121650/https://timesofindia.indiatimes.com/sports/off-the-field/jyothi-yarraji-on-silver-medal-upgrade-at-asian-games-this-medal-has-taught-me-a-lot/articleshow/104551083.cms.
- ↑ "No hurdle too high for Jyothi Yarraji". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-02-15. Archived from the original on 3 May 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.
- ↑ Sarangi, Y. B. (2022-10-04). "National Games: Jyothi Yarraji, Ram Baboo hog limelight as athletics events conclude". sportstar.thehindu.com (in ஆங்கிலம்). Archived from the original on 13 October 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-10-13.
- ↑ "Yarraji creates new record, first Indian woman to run sub-13s hurdles". ESPN (in ஆங்கிலம்). 2022-10-17. Archived from the original on 18 October 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-10-18.
- ↑ Singh, Navneet. "Tajinderpal Singh Toor and Jyothi Yarraji are the best athletes of the National Open Athletics Championships". www.sportskeeda.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 21 October 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-10-21.