நிம்மி அரசகமா
நிம்மி அரசகமா ( Nimmi Harasgama ) (சிங்களம்: නිම්මි හරස්ගම) ஓர் நடிகையும், எழுத்தாளரும் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். இங்கிலாந்தின் ஐடிவி என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் தி குட் கர்மா ஹாஸ்பிடல் என்ற தொடரில் செவிலியர் மாரியாக நடித்ததற்காக பிரித்தானிய தேசிய தொலைக்காட்சி விருதுகள் நிகழ்ச்சியில் இவரை சிறந்த நாடக நடிப்பிற்காக பரிந்துரைத்தது.[1] 1997 இல் மதர் தெரசா என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் மூலம் துணைக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இலங்கைத் திரையுலகில் ஈரா மதியாமா (2003) என்ற சிங்களத் திரைப்படத்தில் கதாநாயகியாக முதலில் அறிமுகமானர்.[2] இந்தப் படத்திற்காக பல சர்வதேச மற்றும் தேசிய விருது விழாக்களில் சிறந்த நடிப்பு/சிறந்த நடிகை விருதுகளை வென்றார் - 2004 இன் லாஸ் பால்மாஸின் சர்வதேசத் திரைப்பட விழா மற்றும் 2006 சிக்னிஸ் சல்யூடேஷன் விருது வழங்கும் விழா ஆகியவையும் இதில் அடங்கும்.
நிம்மி அரசகமா | |
---|---|
பிறப்பு | இலங்கை |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1997–தற்போது வரை |
விருதுகள் |
|
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுநிம்மி அரசகமா இலங்கையின் கொழும்புவில் சிங்களத் தந்தைக்கும் தமிழ் தாய்க்கும் பிறந்தார்.[3] இவரது தந்தையின் முதல் திருமணத்திலிருந்து இவருக்கு கலைஞர் நெலுன் அரசகமா மற்றும் பிரித்தி அரசகமா என்ற இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர். இவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது, இவருடைய குடும்பம் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. அங்கு இவர் வெஸ்ட்வுட் ஹவுஸ் மகளிர் பள்ளி மற்றும் இங்கிலாந்து தேவாலயப் பள்ளி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[3] நிம்மி இலண்டன் பல்கலைக்கழகத்தின் கோல்ட்ஸ்மித்ஸ் கல்லூரியில் பயின்றார். அங்கு இவர் நாடகம் மற்றும் நாடக கலைகளில் இளங்கலை பட்டம் பெற்றார்.[4][5] 2001 ஆம் ஆண்டில் நியூயார்க் திரைப்பட அகாதமியின் திரைப்படப் பட்டறையில் நடிப்பதற்கான உதவித்தொகையைப் பெற்றார்.[6][7]
தொழில் வாழ்க்கை
தொகு1997 ஆண்டில் மதர் தெரசா: இன் த நேம் ஆஃப் காட்`ஸ் புவர் என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் துணை வேடத்தில் தோன்றினார். பிறகு, 2003 ஆம் ஆண்டில் பிரசன்னா வித்தனகேயின் ஈரா மதியாமா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இலங்கைத் திரையுலகில் கால் பதித்தார்.[8] இந்தப் படத்திற்காக எசுப்பானியாவில் நடந்த 2004 சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகை விருது உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றது.[7][9] மடியாமாவைத் தொடர்ந்து, அன்னை தெரசாவின் வாழ்க்கையைப் பற்றிய மற்றொரு படத்தில் தோன்றினார். மதர் தெரசா ஆஃப் கல்கத்தா (2003) என்ற படம் இலங்கை மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டது.[8]
2012 ஆண்டில் இவர் தனது முதல் தமிழ் பேசும் பாத்திரத்தில் தோன்றினார். எனக்கும் ஒரு பேர் சுப சிவகுமாரன் எழுதி இயக்கிய என்ற அந்த குறும்படம், ஜெர்மனியில் நடந்த பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான தங்க கரடி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[7] 2011 ஆம் ஆண்டில் தான் உருவாக்கிய ஒரு கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட புட் எ சாட் வித் ஆன்ட் நெட்டா என்ற அரட்டை நிகழ்ச்சியில் நடிக்க இலங்கை தொலைக்காட்சி நிலையமான ஈ. டி. வி உடன் கூட்டு சேர்ந்தார்.
2020 ஆம் ஆண்டில் ஷியாம் செல்வதுரை எழுதிய அதே பெயரில் உள்ள புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தீபா மேத்தா இயக்கத்தில் ஃபன்னி பாய் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Alahakoon, Ajith (30 July 2005). "Presidential Film Awards Festival 2004". தி ஐலண்டு. பார்க்கப்பட்ட நாள் 21 January 2017.
- ↑ "Nimmi Harasgma". National Film Corporation Of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 21 January 2017.
- ↑ 3.0 3.1 Amarasingham, Kumudu (24 April 2005). "Between the lines". The Sunday Leader. பார்க்கப்பட்ட நாள் 21 January 2017.
- ↑ Jayawardhane, Ruwini (7 December 2015). "Nimmi's numerous moments!". Daily News (Sri Lanka). பார்க்கப்பட்ட நாள் 21 January 2017.
- ↑ "Cast:Nimmi Harashama". akasakusum.com. பார்க்கப்பட்ட நாள் 21 January 2017.
- ↑ "Cast:Nimmi Harashama". akasakusum.com. பார்க்கப்பட்ட நாள் 21 January 2017.
- ↑ 7.0 7.1 7.2 Jayawardhane, Ruwini (7 December 2015). "Nimmi's numerous moments!". Daily News (Sri Lanka). பார்க்கப்பட்ட நாள் 21 January 2017.
- ↑ 8.0 8.1 "Passionate about art". The Sunday Times (Sri Lanka). 23 May 2004. பார்க்கப்பட்ட நாள் 21 January 2017.
- ↑ "Nimmi Creates 'Auntie Netta'on ETV". The Sunday Times (Sri Lanka). 10 April 2011. பார்க்கப்பட்ட நாள் 21 January 2017.
- ↑ Shedde, Meenakshi. "Such a long journey". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-20.