நியோடிமியம் மாலிப்டேட்டு
நியோடிமியம் மாலிப்டேட்டு (Neodymium molybdate) என்பது Nd2(MoO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். நியோடிமியம் மாலிப்டேட்டு உயர் வெப்பநிலையில் சோடியம் மாலிப்டேட்டுடன் வினைபுரிந்து NaNd(MoO4)2 சேர்மத்தைக் கொடுக்கிறது.[2] தோராயமாக 350 பாகை செல்சியசு வெப்பநிலை முதல் 700 பாகை செல்சியசு வரையிலான வெப்பநிலையில் ஐதரசன் சல்பைடுடன் வினைபுரிந்து நியோடிமியம் சல்பைடையும் மாலிப்டினம் இருசல்பைடையும் கொடுக்கிறது.[3] 780 கெல்வின் முதல் 870 கெல்வின் வரையிலான வெப்பநிலையில் ஐதரசனால் ஒடுக்கப்பட்டு Nd2Mo3O9 சேர்மமாக மாறுகிறது.[4]
இனங்காட்டிகள் | |
---|---|
13477-90-2 | |
பண்புகள் | |
Nd2(MoO4)3 | |
தோற்றம் | நீலநிறத் திண்மம்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஉயர் வெப்பநிலையில் நியோடிமியம் ஆக்சைடும் மாலிப்டினம் மூவாக்சைடும் வினைபுரிவதன் மூலம் நியோடிமியம் மாலிப்டேட்டைத் தயாரிக்கலாம்.:[5]
- Nd2O3 + 3MoO3 → Nd2(MoO4)3
நியோடிமியம் நைட்ரேட்டும் அமோனியம் மாலிப்டேட்டு டெட்ரா ஐதரேட்டும் சேர்ந்து ((NH4)6Mo7O24) வினைபுரிந்து பெறப்பட்ட வீழ்படிவை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்துவதன் மூலமும் இது தயாரிக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Q Huang; J Xu; W Li (March 1989). "Preparation of tetragonal defect scheelite-type RE2(MoO4)3 (RE=La TO Ho) by precipitation method" (in en). Solid State Ionics 32-33: 244–249. doi:10.1016/0167-2738(89)90228-2. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0167273889902282. பார்த்த நாள்: 2022-07-02.
- ↑ Mokhosoev, M. V.; Get'man, E. I.; Kokot, I. F. Double sodium-neodymium molybdates. Izvestiya Akademii Nauk SSSR, Neorganicheskie Materialy, 1969. 5 (6): 1107-1112. பன்னாட்டுத் தர தொடர் எண் 0002-337X.
- ↑ Yampol'skaya, V. V.; Serebrennikov, V. V. Interaction of rare earth molybdates with hydrogen sulfide at elevated temperatures. Tr. Tomsk. Univ., 1973. 240: 86-89. CAN80: 140751.
- ↑ Gopalakrishnan, Jagannatha; Manthiram, Araumugam. Topochemically controlled hydrogen reduction of scheelite-related rare earth metal molybdates. Journal of the Chemical Society, Dalton Transactions: Inorganic Chemistry (1972-1999), 1981. 3: 668-672.
- ↑ Rode, E. Ya.; Lysanova, G. V.; Kuznetsov, V. G.; Gokhman, L. Z. Synthesis and physicochemical study of rare earth molybdates. Zhurnal Neorganicheskoi Khimii, 1968. 13 (5): 1295-1302. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-457X.