நிர்மல் குமார் கங்குலி
நிர்மல் குமார் கங்குலி (Nirmal Kumar Ganguly) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நுண்ணுயிரியல் வல்லுநர் ஆவார்[2]. இவர் 1941 ஆம் ஆண்டு பிறந்தார்.
நிர்மல் குமார் கங்குலி | |
---|---|
பிறப்பு | 1941 |
தேசியம் | இந்தியன் |
குடியுரிமை | இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொல்கத்தா பல்கலைக்கழகம், முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் |
விருதுகள் | பத்ம பூசன்[1] |
வெப்பமண்டலம் மற்றும் துணைவெப்ப மண்டலப் பகுதி நோய்கள், இதய நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு நோய் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவத்தில் நிபுணத்துவம் மிக்கவராக இவர் இருந்தார்.
கல்வி
தொகுஅப்போது கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்ற, கொல்கத்தாவிலுள்ள ஆர். கி. கார் மருத்துவக் கல்லூரியில் நிர்மல் குமார் கங்குலி தன்னுடைய மருத்துவப்பட்டத்தைப் பெற்றார். மேலும் இவர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் நுண்ணுயிரியியலில் மருந்தியல் முனைவர் பட்டம் பெற்றார். இக்கல்லூரியில் இவர் இயங்கும் இயக்குநராகவும் பணிபுரிந்தார்.[3].
வாழ்க்கை
தொகுமருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுகலை பட்டமேற்படிப்பு நிறுவனத்தில் மாண்புடன் ஓய்வுபெற்ற பேராசிரியராகவும், புது தில்லியிலுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் தலைமை இயக்குநராகவும் (1998-2007) பணிபுரிந்தார். மருத்துவ அறிவியல் தேசிய அகாடமியில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நபராக பணியாற்றினார்[4]. தற்போது சவகர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக பதவிவகிக்கிறார்[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Padma Bhushan Awardees - 101 to 110 - Prof. Nirmal Kumar Ganguly". India.gov.in. 9 December 2012. Archived from the original on 14 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 7 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 "Nirmal Kumar Ganguly". இந்திய தேசிய அறிவியல் கழகம்.
- ↑ "Life Time Achievement by BioSpectrumIndia". Archived from the original on 2006-10-23. பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.
- ↑ "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2016.