நிர்மல் பாரத் அபியான்

நிர்மல் பாரத் அபியான் (இந்தி: निर्मल भारत अभियान) முழுமைத் துப்புரவு இந்தியா இயக்கம் என்பது 1999 முதல் 2012 வரை இந்திய அரசு மேற்கொண்ட முழுமைத் துப்புரவு பரப்புரை இயக்கம் ( Total Sanitation Campaign) or TSC) ஆகும். இது சமூகத் தலைமை முழுமைத் துப்புரவு (community-led total sanitation) (CLTS) நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் திட்டம் ஆகும். இந்த இயக்கத்தை இந்திய அரசு 1999 இல் தொடங்கி வைத்த்து. இது மக்கள் முயற்சி தேவை முடுக்கிய துப்புரவு இயக்கம் ஆகும்.[சான்று தேவை] இது குறைந்த அளவில் மட்டுமே மக்கள் பங்கேற்பு செய்து, ஓரளவு வெற்றிகண்ட நடுவண் ஊரகத் துப்புரவு திட்டத்தில் இருந்து உருவாகியது. இது முழுமைத் துப்புரவு நெறிமுறைகளைப் பின்பற்ரவில்லை.[சான்று தேவை] முழுமைத் துப்புரவு இயக்கத்தின் முதன்மை இலக்க 2017 அளவில் பொதுவிடக் கழிப்பு நடைமுறையை ஒழித்துகட்டுவது ஆகும்.சமூகத் தலைமை முழுமைத் துப்புரவு திட்டத்தில் கழிப்பறை கட்டும் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. பொதுவிடக் கழிப்பு நீக்கும் பண்பாட்டு வரன்முறைகள் மட்டும் திட்டமிடப்பட்டன.[சான்று தேவை] இந்த த் திட்டம் மகாராட்டிரத்தில் தொடங்கப்பட்டபோது 200 ஊராட்சி மன்றங்கள் பொதுவிடக் கழிப்பை நீக்கி இதை நடைமுறைப்படுத்தின.[சான்று தேவை] இதை நடைமுறைப்படுத்திய ஊராட்சிகளுக்கு விருதும் பணப் பரிசுகளும் நிர்மல் கிராம் புரசுகார் திட்ட்த்தின் கீழ் நாளிதழ்களில் வழியாக பொதுமக்களிடம் பரவலான விளம்பரமும் தரப்பட்டன.[1][2][3] நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் பரப்பல் தூதுவராக வித்யா பாலன் பொறுப்பேற்றார்.

நிர்மல் பாரத் அபியான்
நாடுIndia
Established1999
Disestablished2014
தற்போதைய நிலைதூய்மை இந்தியா இயக்கம் வழி தொடர்ச்சி

இத்திட்டமே 2014 அக்தோபர் 2 இல் காந்தி பிறந்த நாளில் தூய்மை இந்தியா இயக்கமாக (சுவாச் பாரத் அபியான்) மீளத் தொடங்கப்பட்டது.

பின்னணி

தொகு

இந்திய அரசு நடுவண் ஊரகத் துப்புரவு திட்டத்தை 1986 இல் தொடங்கியது. இதன் முதன்மையான நோக்கம் ஊரக மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தலும் மகளிருக்கு கழிப்பிடத் தனிமையையும் உரிய மதிப்பையும் உருவாக்குதலும் ஆகும்.[சான்று தேவை]

துப்புரவு சார்ந்த கண்ணோட்டத்தில் தனியரின் துப்புரவும் வீட்டின் துப்புரவும் நல்ல குடிநீரும் குப்பை அகற்றுதலும் மலமும் கழிவுநீரும் அகற்றுதலும் உள்ளடக்கி விரிவாக்கப்பட்டது. துப்புரவு சார்ந்த இந்த அகல்விரிவான நோக்குடன், இந்திய அரசு உருவாக்கிய சமூகத் த்லைமைதாங்கும் முழுமைத் துப்புரவு திட்டம் தேவை சார்ந்து விரைவுபடுத்தும் அணுகுமுறையை மேற்கொண்டது. இதற்கு முழுமைத் துப்புரவு பரப்புரை எனப் பெயரிட்டு 1999 முதல் நடைமுறைக்குக் கொணர்ந்தது. இப்புது அணுகுமுறை, தகவல், கல்வி, தொடர்பாடல், மனிதவள மேம்பாடு, திறமை உருவாக்க நடவடிக்கைகள் ஆகியவற்ரில் கவனம் செலுத்தி, ஊரக மக்களிடம் விழிப்புணர்வையும் துப்புரவு ஏந்துகளின் தேவையையும் வற்புறுத்தியது.இந்தப் பரப்புரை, பொருளியல் நிலையைப் பொறுத்து நிலவும் பல்வேறு மாற்று வழிமுறைகளில் உகந்த ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கும் திறமையை உருவாகியது. இத்திட்டம் சமூகத் த்லைமையின்கீழ் மக்களே முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. வறுமைக்கோட்டின் கீழுள்ளவருக்கு அவர்களது முயற்சியைப் பாராட்டி, தம் வீடுகளில் தனிக் கழிப்பறைகளைக் கட்டிக்கொள்ள நிதியுதவி தரப்பட்டது. மேலும் பள்ளிகளிலும் அங்கன்வாடிகளிலும் பொது ஊரகப் பகுதிகளிலும் கழிப்பறைகளைக் கட்டவும் நிதி நல்கப்பட்டது. இதோட திண்ம, நீர்மக் கழிவு மேலாண்மை அமைப்புகளும் உருவாக்கப்பட்டன.[சான்று தேவை]

இத்திட்டத்துக்கு ஊக்கம் அளிக்க, இந்திய அரசு முழுமைத் துப்புரவை ஏற்படுத்தியவர்க்கு நிர்மல் கிராம் புரசுகார் திட்டம் தொடங்கி, அதன் வழியாக ஏற்பையும் விருதுகளையும் வழங்கியது. இவ்விருதுகள் மக்களுக்குப் பேரூக்கத்தை அளித்து இந்திய ஊரகப் பகுதிகளில் முழுமைத் துப்புரவை அடைய வழிவகுத்தன.[சான்று தேவை]

நிர்மல் கிராம் புரசுகார் விருதும் ஏற்பும் தந்த வெற்றியால் முழுமைத் துப்புரவு பரப்புரை இயக்கம் “தூய்மை இந்தியா இயக்கம் (Nirmal Bharat Abhiyan)” (NBA) என 2012 இல் பெயர் மாற்றப்பட்டது. இதன் நோக்கம், புதிய செயல்நெறிமுறைகளாலும் முழுநிறைவு அணுகுமுறையாலும் ஊரகப் பகுதிகளில் வாழும் ஊரகச் சமூகம் துப்புரவில் முழுத் தன்னிறைவை நோக்கி விரைவாகச் செல்ல வழிவகுப்பதேயாகும்.[சான்று தேவை]

நோக்கங்கள்

தொகு
  • ஊரக வாழ்வின் பொதுத் தரத்தை மேம்படுத்தல்.
  • ஊரகத் துப்புரவு நடவடிக்கைகலை முடுக்கி, 2022 கால அளவில் இந்திய ஊராட்சிகள் அனைத்தையும் முழுமையான துப்புரவு நிலைக்கு உயர்த்தல்.
  • நலவாழ்வுக் கல்வியும் விழிப்புணர்வும் தந்து, ஊரக சமுதாயங்களையும் ஊரக நிறுவனங்களையும் நீடிப்புதிற துப்புரவு நோக்கி வளர்த்தெடுத்தல்.
  • அனைத்துக் கல்வி இயக்கம் வழியாக விடுபட்ட ஊரகப் பகுதி பள்ளிகளிலும் அங்கன்வாடிகளிலும் முறையான துப்புரவு ஏந்துகளை ஏற்படுத்தி மாணவர்களிடையே துப்புரவுக் கல்வி வாயிலாக துப்புரவி பழக்க வழக்கங்கலை உருவாக்கல்.
  • சுற்றுசூழல் காப்புடைய நீடிப்புதிற துப்புரவை மலிவான உகந்த தொழில்நுட்பங்கள் வழியாக உருவாக்கல்.
  • ஊரகப் பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மையைப் பேண, சமூக மேலாண்மை சுற்றுபுற துப்புரவு அமைப்புகளை உருவாக்கிடல், குறிப்பாக, திண்ம, நீர்ம கழிவு மேலாண்மையை உருவாக்கல்.

நடவடிக்கைகள்

தொகு

இந்த இயக்கத்தின்கீழ் பின்வரும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படுகின்றன:[4]

  • வறுமைக்கோட்டின் கீழுள்ள வீடுகளுக்கு வீட்டுக்கொரு கழிப்பறை கட்டவும் வறுமைக்கோட்டுக்கு மேலுள்ள பட்டியல் சாதியினருக்கும் இனக்குழுவினருக்கும் வீட்டுக்கொரு கழிப்பறை கட்டவும் வீடுள்ள குறு, எளிய உழவர்களும் நிலமற்றத் தொழிலாளருக்கும் ஊனமுற்றவருக்கும் பெண் தலைமையுள்ள வீடுகளுக்கும் வீட்டுக்கொரு கழிப்பறை கட்டவும் உதவி அளித்தல்.
  • காந்தி அடிகள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிப்பாட்டுத் திட்டத்தோடு இணைந்து, அரசு கட்டிடங்களில் உள்ள பள்ளிகளிலும் அங்கன்வாடிகளிலும் துப்புறவு ஏந்துகலைக் கட்ட உதவி அளித்தல்.
  • துப்புரவு பொருள்களை செய்பவருக்கும் ஊரக துப்புரவு பொருள் அங்காடிகளுக்கும் சமூகத் துப்புரவு வளாகங்களைக் கட்டியமைக்கவும் நிதிநல்கை அளித்தல்.
  • நீடிப்புதிறத் துப்புரவு ஏந்துகளின் தேவைச் சிந்தனையை உருவாக்கும் தகவல், கல்வி, தொடர்பாடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • நீடிப்புதிறத் துப்புரவுக்காகச் செயல்படும் ஊராட்சிகள், ஊரக நீர், துப்புரவுக் குழுக்கள், களப்பணியாளர்கள் ஆகியவற்றுக்கு மேம்பட்ட திறமைகளை வழங்கும் முறைகளை வளர்த்தெடுத்தல்.

சிக்கல்கள்

தொகு

இயக்கங்களுக்கான ஆய்வின் போதாமை

தொகு

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு ஊராட்சிகளில் இந்த இயக்கத்தின் செயல்திறமையை மதிப்பிடவும் திறந்தவெளிக் கழிப்புக் குறைந்தமையால் சிறுவரின் உடல்நல மேம்பாட்டை அறியவும் ஓராய்வு தான்தோன்றிபோக்கில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கழிப்பரைகல் கூடியமை தெரியவந்தாலும் திறந்தவெளிக் கழிப்பு குறைந்த்தாகவோ சிறுவர் உடல்நலம் மேம்பட்டதாகவோ உறுதிபடுத்த முடியவில்லை. என்றாலும் ஆய்வாளர்கள் இந்த ஆய்வு சிற்றளவு பதக்கூறுகளையே எடுத்துக்கொண்டதையும் ஆய்வில் இயக்க குறுக்கீடுகளையும் தரவுகள் மக்கள் சொந்தமாக்க் கூறிய தகவல்களைச் சார்ந்ததையும் ஒப்புக்கொண்டாலும் இந்த ஆய்வு முழுமை ஊரகத் துப்புரவு மேம்பாட்டில் நிலவும் அறைகூவல்களைச் சுட்டுவதாகக் கூறுகின்றனர்."[5] என்றாலும் இந்த திட்ட விருதுகளால் மக்கள் ஊக்குவிக்கப்பட்டு இந்நிலைமை பெரிதும் மாற வாய்ப்புள்ளதை ஒப்புக்கொள்கின்றனர்.[6]

நிதி உதவி

தொகு

இந்திய அரசு நவீன கழிப்பிடம் கட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம், மாநில அரசுகள் மூலம் மானியமாக வழங்குகிறது.[7].[8]

விழிப்புணர்வு இயக்கம்

தொகு

கழிப்பறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்திய மாவட்ட நிர்வாகங்கள், ”நிர்மல் அபியான்” எனும் பெயரில், ஒவ்வொரு மாவட்டத்திலும், இந்தியாவில் நூறு விழுக்காடு கழிப்பறைகள் கட்டும் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படுகிறது. சுகாதாரமான கழிவறையின் முக்கியத்துவத்தை விளக்க ஆண்டுதோறும் நவம்பர், 19அம் நாள் உலகக் கழிவறை நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.[9] [10]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. IRC பரணிடப்பட்டது 2014-04-08 at the வந்தவழி இயந்திரம்:India: Unrealistic approach hampers rural sanitation programme பரணிடப்பட்டது 2008-10-05 at the வந்தவழி இயந்திரம், 1 June 2007
  2. Institute of Development Studies:Community-led total sanitation:India பரணிடப்பட்டது 2017-06-19 at the வந்தவழி இயந்திரம்
  3. Benny George:Nirmal Gram Puraskar: A Unique Experiment in Incentivising Sanitation Coverage in Rural India பரணிடப்பட்டது 2020-12-01 at the வந்தவழி இயந்திரம், International Journal of Rural Studies (IJRS), Vol. 16, No. 1, April 2009
  4. "Salient Features of Nirmal Bharat Abhiyan". Biharprabha News. பார்க்கப்பட்ட நாள் 17 December 2013.
  5. Patil, Sumeet; Arnold, Benjamin; Salvatore, Alicia; Briceno, Bertha; Ganguly, Sandipan; Colford Jr., John; Gertler, Paul (August 26, 2014). "The Effect of India's Total Sanitation Campaign on Defecation Behaviors and Child Health in Rural Madhya Pradesh: A Cluster Randomized Controlled Trial". PLOS Medicine 11: e1001709. doi:10.1371/journal.pmed.1001709. பப்மெட்:25157929. 
  6. "An Open Letter in response to the World Development Report 2015". Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. http://www.dinamalar.com/news_detail.asp?id=1023880
  8. http://www.thehindubusinessline.com/features/weekend-life/talking-dirty-picture/article3985081.ece The Hindu Newspaper Article
  9. http://www.dinamani.com/edition_madurai/madurai/2014/07/26/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/article2349534.ece
  10. http://www.dinamalar.com/news_detail.asp?id=1023880

வெளி இணைப்புகள்

தொகு

தனிநபர் கழிவறை அமைக்கும் பிரசாரம்: 600 பேர் பயன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மல்_பாரத்_அபியான்&oldid=3637757" இலிருந்து மீள்விக்கப்பட்டது