நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1894
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 1894 இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், தனியார் வசமுள்ள நிலத்தை, அரசு பொது நோக்கத்திற்காகக் கையகப்படுத்தத் துணை செய்ய ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் ஆகும். 'நிலம் கையகப்படுத்துதல்' என்பது தனி நபருக்குச் சொந்தமான நிலத்தை, ஏதேனும் பொது நோக்கத்திற்கு, அரசு அல்லது அரசு தொடர்புடைய நிறுவனங்கள், சட்டப்படி, அரசு நிர்ணயிக்கும் இழப்பீட்டை உரித்தானோருக்கு வழங்கி அந்நிலத்தைக் கையகப்படுத்துவதாகும்.
நாடாளுமன்றத்தில் இச்சட்டத்திற்குப் பதிலாக நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம், 2013 இயற்றப்பட்டுள்ளது.
நோக்கம்
தொகுஇச்சட்டம் தனி நபருக்குச் சொந்தமான நிலங்களைப் பொது நோக்கத்திற்கு, பொது காரியங்களுக்குப் பயன்படுத்தும்பொருட்டு, அவற்றை அரசு கையகப்படுத்தத் துணை செய்ய இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் கூறப்படும் 'பொது நோக்கம்' என்பது கல்வி நிறுவனங்கள் அமைத்தல், பொதுக் குடியிருப்புத் திட்டங்கள், பொதுச் சுகாதாரத் திட்டங்கள், குடிசைமாற்றுத் திட்டங்கள் மற்றும் கிராமப்புறத் திட்டங்கள் போன்றவற்றைக் குறிப்பதாகும்.
தொடர்புடைய ஆணையங்களும் நிறுவனங்களும்
தொகு- ஒன்றிய அரசு
- மாநில அரசு
- நொய்டா, டிடிஏ, சிட்கோ போன்ற நகர நிர்வாக ஆணையங்கள்
- ரிலையன்ஸ், டாடா போன்ற தனியார் நிறுவனங்கள்
வெளியிணைப்புகள்
தொகு- Full text of the act பரணிடப்பட்டது 2013-09-13 at the வந்தவழி இயந்திரம்
- Highlights and key issues of the Bill
- Standing Committee Report of the Bill பரணிடப்பட்டது 2011-07-27 at the வந்தவழி இயந்திரம்
- Summary of the Standing Committee Report பரணிடப்பட்டது 2011-07-27 at the வந்தவழி இயந்திரம்
- The Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013, a Boon for Land Speculators பரணிடப்பட்டது 2015-04-02 at the வந்தவழி இயந்திரம்