நிவேதனப் பொருட்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்துக்களின் வழிபாட்டின்போது படைக்கப்படும் நிவேதனப் பொருட்கள்:
- பாணாக்கம்: இது பால், நெய், தேன், சர்க்கரை, கற்கண்டு, வெல்லம், என்பவற்றுடன் பழவகைகளையும் சேர்த்து கலந்து தயாரிக்கப்படும்.
- துள்ளுமா: அம்மன் சடங்குகளில் படைக்கப்படும் நிவேதனப் பொருட்களில் ஒன்று. இது பச்சை அரிசியில் இடிக்கப்பட்ட வறுக்காத மாவுடன் சர்க்கரை, கற்கண்டு, வெல்லம், பனங்கட்டி, மாதுளம்பழம்,வெங்காயம் எனப்வற்றைக் கலந்து இடிப்பதால் தயாரிக்கப்படும்.
- பொங்கல்
- கடலை
- அவல்: ஊறவைத்து மசித்து இடிக்கப்பட்ட நெல்லில் ஆக்கப்படும் உணவாகும். இது இனிப்பு மற்றும் தேங்காய்ப் பூவுடன் பிசையப்பட்டு அவல் தயாரிக்கப்படுகின்றது.
- பிட்டு: திருவெம்பாவை காலங்களில் சைவ ஆலயங்களில் நடைபெறும் பூசை பிட்டுப் பூசை எனப்படும். சிவபெருமான் கங்கையாறு பெருக்கெடுத்தபோது பிட்டுக்கு மண்சுமந்து கூலியாளாக வந்து ஆட்கொண்ட திருவிளையாடலை குறித்து இது அனுட்டிக்கப்படுகின்றது.
- கொழுக்கட்டை: பச்சை மாவினால் செய்யப்படும். இதன் உள்ளீடாக தேங்காய்ப்பூ,வெல்லம், கற்கண்டு கொண்ட கலவை வைக்கப்படும். நீள் வடிவில் காணப்படும்.
- மோதகம்:பச்சை மாவினால் செய்யப்படும். இதன் உள்ளீடாக தேங்காய்ப்பூ,வெல்லம், கற்கண்டு கொண்ட கலவை வைக்கப்படும்.கோளவடிவில் காணப்படும்.