நீபா
நீபா | |
---|---|
நீபா சினேரியா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கெமிப்பிடிரா
|
குடும்பம்: | நெபிடே
|
பேரினம்: | நீபா |
வேறு பெயர்கள் | |
|
நீபா (Nepa) என்பது தண்ணீரில் காணப்படும் தேள் போன்ற பூச்சிகளாகும். இவை நெபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும். வடக்கு அரைக்கோளத்தில் உள்ள நன்னீர் வாழ்விடங்களில் ஆறு சிற்றினங்கள் காணப்படுகின்றன.[2][3]
உடலமைப்பு
தொகுஇவை முட்டை வடிவ உடல் கொண்டவை. நீர் வாழ் பூச்சிகளான இவை இறை கவ்வும் முன்கால்களைக் கொண்டுள்ளன. நெபிடேயின் மற்ற உறுப்பினர்களைப் போலவே, இவை வயிற்று முனையப் பகுதியில் ஒரு இணை இழுக்க முடியாத மலவாய் கொம்புகள் போன்ற சுவாசக் குழாய்களைக் கொண்டுள்ளன. இது இவற்றை பெலோசுடோமாடிடேவிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இவற்றின் முதன்மையான உணவுகள் மற்ற பூச்சிகள் மற்றும் சிறிய நீர் வாழ் முதுகெலும்பிகள் ஆகும். இவற்றைக் கையாளும் போது இவை வலிமிகுந்த கடியை ஏற்படுத்தலாம்.[4]
சொற்பிறப்பியல்
தொகு'நீபா' என்பது 'தேள்' அல்லது 'நண்டு' என்பதற்கான பண்டைய இலத்தீன் வார்த்தையாகும்.[5]
சிற்றினங்கள்
தொகுபின்வரும் சிற்றினங்கள் நீபாவில் சேர்க்கப்பட்டுள்ளன. அவை:[2][3][6][7]
- நீபா அனோப்தல்மா தீகு மற்றும் பலர் 1994 (பார்க்க மொவிலி குகை )
- நீபா அபிகுலட்டா உக்லர், 1862
- நீபா சினெரியா லின்னேயஸ், 1758 - மாதிரி இனம்
- நீபா டால்பூசி எசாகி, 1928
- நீபா கிராண்டிஸ் லின்னேயஸ், 1758
- நீபா ஹாஃப்மன்னி எசாகி, 1925
- நீபா மான்டீல்சென்சிசு நீல், 1988
- நீபா பிளானா சுல்சர், 1776
- நீபா ரெமி பாய்சன் , 1961
- நீபா ருப்ரா லின்னேயஸ், 1758
- நீபா ரஸ்டிகா பேப்ரிசியசு, 1775
- நீபா சார்டினென்சிசு கங்கர்போர்ட், 1928
- நீபா செயூராட்டி பெர்கெவின் , 1926
இவற்றில், கிழக்கு வட அமெரிக்காவின் (கனடா மற்றும் அமெரிக்கா) நீபா அபிகுலேடா மற்றும் ஐரோப்பா, வட ஆபிரிக்கா மற்றும் வடக்கு ஆசியாவின் நீபா சினிரியா ஆகியவை பரவலாகக் காணப்படுகின்றன.[2] ஏனையவை கோர்சிகா, சார்டினியா, உருமேனியா, மொராக்கோ மற்றும் வடகிழக்கு ஆசியாவில் குறிப்பிட்ட எல்லைகளைக் கொண்டுள்ளன.[2][3] இவற்றில் ஒன்றான நீபா அனோப்தால்மா மூவில் குகையில் காணப்படும். நெபிடே குடும்பத்தில் உள்ள ஒரே குகை வாழ் சிற்றினம் இதுவாகும்.[3]
லின்னேயஸ் பேரினத்தின் விளக்கத்தில் பல கூடுதல் சிற்றினங்களைப் பட்டியலிட்டுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை ஒத்ததாகக் கருதப்படுகின்றன அல்லது பிற பேரினங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Carl von Linné (1757). Systema naturae (10 ed.). p. 440.
- ↑ 2.0 2.1 2.2 2.3 S.L. Keffer; J.T. Polhemus; J.E. McPherson (1990). "What Is Nepa hoffmanni (Heteroptera: Nepidae)? Male Genitalia Hold the Answer, and Delimit Species Groups". Journal of the New York Entomological Society 98 (2): 154-162.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Vasile Decu; Magdalena Gruia; S. L. Keffer; Serban Mircea Sarbu (1994). "Stygobiotic Waterscorpion, Nepa anophthalma, n. sp. (Heteroptera: Nepidae), from a Sulfurous Cave in Romania". Annals of the Entomological Society of America 87 (6): 755–761. doi:10.1093/aesa/87.6.755.
- ↑ Donald Borror; Richard White (1970). A field guide to the insects of America north of Mexico. Houghton Mifflin. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-395-07436-7.
- ↑ 'Nepa' on latin-dictionary.net
- ↑ 'Nepa' on ITIS.gov
- ↑ GBIF: Nepa Linnaeus, 1758
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Nepa தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Data related to Nepa at Wikispecies
- Nepa on bugguide.net