நீராழி அரண்மனை

கேரள அரச குடும்பத்து அரண்மனை

நீராழி அரண்மனை (Neerazhi Palace) ( மலையாளம்: നീരാഴി കൊട്ടാരം ) என்பது தெக்கும்கூர் இராச்சியத்தின் அரச அரண்மனையாகும். இந்த அரண்மனை சங்கனாச்சேரியிலுள்ள புழவத்தில் அமைந்துள்ளது . [1] இது தெக்கும்கூர் இராச்சியத்தின் நிர்வாக தலைமையகமாகவும், அரச அரண்மனையாகவும் இருந்தது. இந்த அரண்மனை சங்கனாசேரியிலுள்ள ஆற்றின் முகப்பில் அமைந்துள்ளது.

நீராழி அரண்மனை
നീരാഴി കൊട്ടാരം
தெக்குகூர் அரசின் கொடி
நீராழி அரண்மனை is located in கேரளம்
நீராழி அரண்மனை
கேரளம் இல் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிஎட்டுக்கெட்டு
கேரளக் கட்டிடக்கலை
நகரம்புழவத்து, சங்கனாச்சேரி, கோட்டயம் மாவட்டம்
நாடுஇந்தியா
ஆள்கூற்று9°28′00″N 76°33′00″E / 9.466667°N 76.55°E / 9.466667; 76.55
கட்டுமான ஆரம்பம்15ஆம் நூற்றாண்டு
கட்டுவித்தவர்கோத வர்மன் மணிகண்டனால் 15ஆம் நூற்றாண்டின் கட்டப்பட்டது. (பொ.ச.1408 - 1440 )
தொழில்நுட்ப விபரங்கள்
அமைப்பு முறைசெந்நிறக் களிமண் கல், கற்சாந்து, தேக்கு, ரோஸ்வுட் மரம், ஆங்கில்கள் மரம்
அளவுOriginally 1.23 ஏக்கர்கள் (0.50 ha)

இந்த அரண்மனையை தெக்கும்கூர் வம்சத்தினர் பொ.ச.1750 வரை பயன்படுத்தினர். பின்னர் வடக்கு மலபாரிலிருந்து சங்கனாசேரியில் குடியேறிய பரப்பநாடு வம்சத்தினரும் பயன்படுத்தினர். [2] 1790ஆம் ஆண்டு திருவிதாங்கூரின் படையெடுப்பில் ( சங்கனாசேரி போர் ) தெக்கும்கூரின் கடைசி மன்னர் ஆதித்ய வர்மன் மணிகண்டன் கோட்டயம் நாட்டசேரிக்கு தப்பினார். [3] நீராழி அரண்மனை முன்பு 'நீராழிக்கெட்டுக் கொட்டாரம்' என்று அழைக்கப்பட்டது. [4]

தெக்கும்கூர் இராச்சியம் தொகு

 
1750இல் தெக்கும்கூர் இராச்சியம்

பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில், தெக்கும்கூர் வம்சம் அதன் தலைநகரை வென்னிமலையிலிருந்தும் மணிகண்டபுரத்திலிருந்தும் சங்கனாச்சேரிக்கு மாற்றியபோது, ​​புழவத்து நீராழிகெட்டு அரண்மனை அரச அரண்மனையாகப் பயன்படுத்தப்பட்டது. [5] தெக்கும்கூரின் கடைசி மன்னர் ஆதித்ய வர்மன் மணிகண்டன், புழவத்திலுள்ள நீராழி அரண்மனையில் வசித்து வந்தார். சம்பகாச்சேரி (புரக்காடு) மற்றும் ஓடநாடு (காயங்குளம்) மீதான திருவாங்கூரின் படையெடுப்பை தடுக்க உதவியாக தனது படைகளை தெக்கும்கூர் ம்ன்னர் வழங்கினார். இதை அறிந்த மன்னர் மார்த்தாண்ட வர்மா, சம்பகாசேரியின் (அம்பலப்புழா) வீழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து தெக்கும்கூரையும் தாக்க முடிவு செய்தார். [6] [7]

1750 செப்டம்பரில் திருவிதாங்கூர் இராணுவத்தால் சங்கனாசேரியில் நடந்த போரில் தெக்கும்கூர் கோட்டையும் நீராழி அரண்மனையும் தாக்கப்பட்டன. [8] தெக்கும்கூர் மன்னருக்கு வாழப்பள்ளி பட்டிலத்தில் பொட்டிமார் ([[வாழப்பள்ளி கோவில்|வாழப்பள்ளி மகா சிவன் கோவிலின் நிர்வாகி) உதவினார். மேலும், மன்னனை கோட்டயத்தில் உள்ள நட்டாசேரிக்கு மாற்றினார்.[9]

கட்டிடக்கலை தொகு

நீராழி அரண்மனை வளாகம் 1.23 ஏக்கர். பரப்பளவில் அமைந்துள்ளது. அரண்மனை பொ.ச.1400க்குப் பிறகு புனரமைக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில், திருவிதாங்கூர் மன்னர்களால் இது மீண்டும் கட்டப்பட்டது. மார்த்தாண்ட வர்மர் 1750 ஆம் ஆண்டில் தெக்கும்கூர் (ஆதித்ய வர்மா மணிகண்டன்) மன்னரை பதவி நீக்கம் செய்தபோதும், 1766இல் ஐதர் அலியின் பிரபலமற்ற சிறு தாக்குதலின் போதும், தப்பி ஓடிய பரப்பநாடு இளவரசர்களையும், மலபார் அரச குடும்பத்தின் இளவரசர்களையும் இந்த அரண்மனை தங்க வைத்து பாதுகாப்பளித்தது. [10] [11]

பரப்பநாடு அரச குடும்பம் தொகு

 
இராஜா இராஜவர்மா வல்லிய கோயி தம்புரான் தனது மகன் சுவாதித் திருநாளுடன்

1788ஆம் ஆண்டில், மைசூர் மன்னர் திப்பு சுல்தான் மலபார் மீது படையெடுத்து நகரங்களையும் கோயில்களையும் அழித்து இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்தபோது, பரப்பநாட்டின் அரச குடும்பம் திருவிதாங்கூருக்கு தப்பி ஓடியது. பரப்பநாட்டைச் சேர்ந்த அரச குடும்பங்களில் ஒருவர் 18ஆம் நூற்றாண்டில் நீராழி அரண்மனையில் குடியேறினார். [12]

திருவிதாங்கூர் மன்னர் சுவாதித் திருநாள் ராம வர்மனின் தந்தை இராஜா இராஜவர்மா வல்லிய கோயி தம்புரான் சங்கனாச்சேரியில் உள்ள நீராழி அரண்மனையில் பிறந்தார். இவர், முந்தைய பரப்பநாடு (பரப்பனங்காடி, பேப்பூர் ), மலபார் அரச குடும்பத்தின் உறுப்பினராக இருந்தார்.[13] 1811ஆம் ஆண்டில், இவரது மனைவி மகாராணி கௌரி லட்சுமி பாய், தனது கணவரின் குடும்பத்திற்காக சங்கனாச்சேரியில் ஒரு புதிய அரண்மனையைக் கட்டினார். இது பின்னர் இலட்சுமிபுரம் அரண்மனை என்று அழைக்கப்பட்டது. அதுவரை அரச குடும்பம் புழவத்தில் இருந்த நீராழி அரண்மனையில் வசித்து வந்தது. [14] [15]

மேற்கோள்கள் தொகு

  1. P. Shungoonny Menon - A HISTORY OF TRAVANCORE - First edition: 1878, New edition: 1983, Page 130, 131 - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170200406
  2. History of Travancore from the Earliest Times - P. Shungoonny Menon - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120601696 - Published By: Asian Educational Services
  3. The Travancore State Manual Vol 1 to 4; Publisher : Kerala Council for Historical Research; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185499268; Edition : 1996; Pages: 2500; Author:T.K. Velu Pillai; Editor:S.Raimon; Category:Manuals; Year of Publishing:1940
  4. Encyclopedia of Tourism Resources in India; Author: Dr. Manohar Sajnani, Published in 2001, Published by: Kalpaz Publications; Address: C-30, Satyawati Nagar, Phase-III, Ashok Vihar, Delhi-110052, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7835-014-9 (set), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7835-018-1 (Vol II)
  5. https://www.vaikhari.org/vennimala.html
  6. A. Sreedhara Menon (1987). Political History of Modern Kerala. DC Books. pp. 140–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-264-2156-5. Retrieved 10 August 2012.
  7. N.E Kesavan Namboothiri, Thekkumkoor Charithravum Puravrithavum (Kottayam: National Book Stall, 2014), 8-9.
  8. Thekkumkoor Charithravum Puravrithavum, Author: Prof N E Kesavan Nampoothiri, Publisher : NBS (National Book Stall, Kottayam: 2014), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789385725647
  9. Menon, P Shungoonny (1878). History of Travancore from the Earliest Times by P Shungoonny Menon (Dewan Peishcar of Travancore). 105, Mount road, Madras: Higginbotham and Company. பக். 152, 153. 
  10. Logan, William (2006). Malabar Manual, Mathrubhumi Books, Calicut. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8264-046-7
  11. Title Tipu Sultan: Villain Or Hero? : an Anthology Author: Sita Ram Goel; Publisher: Voice of India, 1993; Original from the University of Michigan; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185990088 Length: 85 pages
  12. Menon, P Shungoonny (1878). History of Travancore from the Earliest Times by P Shungoonny Menon (Dewan Peishcar of Travancore). 105, Mount Road, Madras: Higginbotham and Company. pp. 152, 153.
  13. Visakham Thirunal - Editor: Lennox Raphael Eyvindr - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786139120642
  14. History of Travancore from the Earliest Times - P. Shungoonny Menon - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120601696 - Published By: Asian Educational Services
  15. Visakham Thirunal. 2012. பக். 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-6139120642. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராழி_அரண்மனை&oldid=3182230" இலிருந்து மீள்விக்கப்பட்டது