நீரா ராடியா ஒலிக்கோப்புகள் சர்ச்சை

நீரா ராடியா ஒலிக்கோப்புகள் சர்ச்சை என்று நீரா ராடியா என்ற தொழில்முறை அரசியல் தரகருக்கும்[1] அரசியல்வாதிகள், தனியார் வணிகக் குழுமங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இதழாளர்களிடையே [2] 2008-2009 ஆண்டில் நடைபெற்ற உரையாடல்களை கண்காணித்த இந்திய வருமானவரித் துறையினரின் ஒலிநாடாக்களின் பொதுவெளிக் கசிவிற்குப் பிந்தைய சர்ச்சைகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு முன்னரே திட்டமிடப்பட்டதாகவும் மற்றும் பிற அரசியல் சட்டத்திற்கு புறம்பான முறைகேடுகள் நிகழ்ந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நீரா ராடியா வைஷ்ணவி கார்பொரேட் கம்யூனிகேசன்ஸ்[3] என்ற பொதுத்தொடர்பு நிறுவனத்தையும் அதன் துணைநிறுவனங்களான நியுகொம் [4], நோசிஸ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் சர்விசஸ் [5] மற்றும் விட்காம் கன்சல்டிங்[6],[7] களையும் நடத்தி வருகிறார்.இவற்றின் பயனர்களாக ரத்தன் டாடாவின் டாடா குழுமம் [8], முகேசு அம்பானியின் ரிலையன்சு இன்டஸ்ட்ரீஸ் மற்றும் பிரனாய் ராயின் என்டிடிவி.[9] உள்ளனர்.

ராடியா ஒலிநாடாக்கள் தொகு

இந்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன் இந்திய வருமானவரித் துறை 2008-2009ஆம் ஆண்டுகளில் நிதிக்குற்றங்கள், வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடான நிதிமாற்றல்களை கண்காணிக்கும் பொருட்டு நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை 300 நாட்கள் கண்காணித்து வந்தது.[10]

இந்த உரையாடல்களை மே 2010 அன்று இந்தி இணைய இதழ் (படாஸ்4மீடியா) ஒன்றில் முதல் செய்தி வெளியானது.[11] மேலும் தகவல்களுக்கு தகவல் பெறும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தது.[12]

2010 நவம்பரில், ஓப்பன் மாகசின்[13] மூத்த இதழாளர்கள்,அரசியல்வாதிகள், வணிக குழுமங்கள் ஆகியோருடன் நீரா ராடிய நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்களை செய்திக் கட்டுரையாக வெளியிட்டது.இதனை தொடர்புடைய அனைவருமே மறுத்தனர்.[14] மத்தியப் புலனாய்வுத் துறை இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை விற்பனை குறித்த 8000 தொலைபேசி உரையாடல் பதிவுகளை கைக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.[15]

மேற்கோள்கள் தொகு

  1. "The spotlight is on the media now : The Niira Radia episode raises questions about the boundary between legitimate news gathering, lobbying and influence peddling.". தி இந்து. November 24, 2010. http://www.thehindu.com/opinion/lead/article907823.ece. 
  2. "Radia tapes featuring senior scribes create stir". இந்தியன் எக்சுபிரசு. Express Buzz. 20 Nov 2010. பார்க்கப்பட்ட நாள் 23 November 2010. {{cite web}}: |first= missing |last= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. [1]
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-02-08. பார்க்கப்பட்ட நாள் 2010-12-15.
  5. [2]
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-02-02. பார்க்கப்பட்ட நாள் 2010-12-15.
  7. November 23, 2010. "Indian media's mighty stand exposed on wrong side of 2G spectrum scam". International Business Times.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  8. "2G: 'Lobbyist' Niira Radia under ED scanner". Zee News. November 24, 2010.
  9. "Queen of connections : First a quiz. What connects Ratan Tata, Mukesh Ambani and Sunil Mittal? Niira Radia". E Jayakrishnan, India Syndicate,. MSN India. 22 November 2010. Archived from the original on 23 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 15 டிசம்பர் 2010. {{cite web}}: Check date values in: |access-date= (help)CS1 maint: extra punctuation (link)
  10. "'Radia lobbied to get Raja telecom ministry'". Headlines Today. இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 23 November 2010. {{cite web}}: |first= missing |last= (help)
  11. http://bhadas4media.com/tv/5036-barkha-vir.html பரணிடப்பட்டது 2010-12-21 at the வந்தவழி இயந்திரம் Barkha and Vir are answerable
  12. http://bhadas4media.com/vividh/5092-barkha-vir.html பரணிடப்பட்டது 2010-11-23 at the வந்தவழி இயந்திரம் RTI in Nira Radia case
  13. "Some Telephone Conversations: Inside the networks of lobbyists and power brokers that dictate how this country is run". OPEN Magazine. 20 November 2010. பார்க்கப்பட்ட நாள் 23 November 2010.
  14. "Barkha, Sanghvi in damage control mode after Open allegations". Tehelka. November 19, 2010 இம் மூலத்தில் இருந்து 22 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101122013336/http://www.tehelka.com/story_main47.asp?filename=Ws1911102G_FALLOUT.asp. பார்த்த நாள்: 23 November 2010. 
  15. "Leaked tapes: CBI says it has 5,851 recordings". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். http://www.dnaindia.com/india/report_leaked-tapes-cbi-says-it-has-5851-recordings_1470650.