நீரேற்றப்பட்ட சிலிக்கா
நீரேற்றப்பட்ட சிலிக்கா (Hydrated silica) என்பது சிலிக்கான் ஈராக்சைடின் ஒரு வடிவமாகும். இதன் மூலக்கூறு வாய்பாட்டில் மாறக்கூடிய அளவிலான தண்ணீர் உள்ளது. நீரேற்றப்பட்ட சிலிக்காவை தண்ணீரில் கரைந்தால் உருவாகும் கரைசல் சிலிசிக்கு அமிலம் என்று அழைக்கப்படுகிறது. இயற்கையில் ஓபல் என்ற படிகமாகக் காணப்படுகிறது.[2] பல நூற்றாண்டுகளாக இது இரத்தினமாக வெட்டப்பட்டு வருகிறது. இருகலப்பாசிகளின் செல் சுவர்களிலும் இது காணப்படுகிறது. பற்பசையில் பயன்படுத்துவதற்காகவும், சுத்தம் செய்வதில் ஓர் உராய்வுப் பொருளாகவும் செயற்கையாகத் தயாரிக்கப்படுகிறது. பல்வேறு வண்ணப்பூச்சுகள் மற்றும் மெருகேற்றிகள் மற்றும் பீர் மதுபானத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.[3]
பற்பசையில்
தொகுபுதைபடிவ பாசிமண் இயற்கையாகத் தோன்றும் மென்மையான, சிலிசியசு படிவுப் பாறை ஆகும். இயற்கையான நீரேற்றப்பட்ட சிலிக்காவான இது வெள்ளை நிறத்தில் காணப்படும் இதை தூளாக உடைக்கலாம். பல்பொடியாக வெட்டி எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. மென்மையான கால்சியம் கார்பனேட்டுடன் பெரும்பாலும் இணைந்து ஒரு சிறந்த அரைத்திண்ம உராய்வுப் பொருளாக காணப்பட்டது. பற்படலங்களை நீக்கப் பயன்பட்டது. சற்றே பெரிய அளவில் அரைக்கப்படும், நீரேற்றப்பட்ட சிலிக்கா மணிகள் பல் வெளுக்கும் கலவைகளில் பயன்படுத்தப்படுகின்றன.[4] நீரேற்றப்பட்ட சிலிக்கா பற்பசைகளில் ஒரு பயனுள்ள உராய்வுப் பொருளாகும், ஏனெனில் இது மற்ற செயலில் உள்ள பொருட்களுடன், குறிப்பாக சோடியம் புளோரைடுடன் வேதியியல் ரீதியாக தொடர்பு கொள்ளாது.[5]
இயற்கையில்
தொகுநீரேற்றப்பட்ட சிலிக்காக்கள் இயற்கையில் உயிரியல் செயல்முறைகள் மூலம் உருவாகும். இத்தோற்றம் முதன்மையாக பெருங்கடல்களில் கடலடி நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை உள்ளடக்கியதாகும்.[6] இருப்பினும், நீரேற்ற சிலிக்காக்களை உருவாக்கும் பல உயிரற்ற செயல்முறைகள் உள்ளன. கரைசலில் இருந்து வீழ்படிவாக வெளியேறுதல், ஒரு படிவுமாற்றப் பொருளாக உருவாதல் அல்லது வண்டல் பாறைகளில் ஏற்கனவே இருக்கும் தாதுக்களை மாற்றுதல் போன்றவை உயிரற்ற செயல்முறைகளுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும்.[6]
இதன் தூய வடிவம் பற்பசைக்காக தயாரிக்கப்பட்டது. இவ்வடிவம் மணமற்ற, சுவையற்ற, வெள்ளை, ஊன்பசைபோன்ற ஒரு பொருளாகும். இரசாயன ரீதியாக மந்தமானது. நீரேற்றப்பட்ட சிலிக்காவைப் பெறுவதற்கான முதன்மையான தொழில்துறை முறைகளில் ஒன்று சோல்-ஜெல் செயல்முறையாகும்.[7]
நீரேற்றப்பட்ட சிலிக்காவை படிகமாதல் திறனில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் மூன்று முக்கிய வகைகளாக வகைப்படுத்தலாம்.[6]
- நீரேற்றப்பட்ட சிலிக்கேட்டு கண்ணாடி (குறைந்த படிகமாதல் திறன்)
- அமுதக்கல்
- நுண்படிக குவார்ட்சு (அதிக படிகமாதல் திறன்)
ஆய்வகத்தில் நீரேற்றப்பட்ட சிலிக்காவைக் கண்டறிந்து அடையாளம் காண்பதற்கான பொதுவான வழிகளில் ஒன்று, அருகிலுள்ள அகச்சிவப்பு மற்றும் வெப்ப அகச்சிவப்பு நிறமாலை வழிமுறை ஆகும்.[6]
வேதி வினைகள்
தொகுபல்வேறு மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட நீரேற்று சிலிக்காக்களும் அவற்றின் வேதி வினைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீரேற்றப்பட்ட சிலிக்காவின் பொது வாய்பாடு SiO2 · nH2O என்று எழுதப்படுகிறது.
- 1 SiO2 + 1 H2O → H2SiO3
- 1 SiO2 + 2 H2O → H4SiO4 [Si(OH)4 எனவும் கூறலாம்]
- 2 SiO2 + 1 H2O → H2Si2O5
- 2 SiO2 + 3 H2O → H6Si2O7
- 3 SiO2 + 2 H2O → H4Si3O8
- 3 SiO2 + 4 H2O → H8Si3O10
- 4 SiO2 + 1 H2O → H2Si4O9
நீரேற்றப்பட்ட சிலிக்காக்கள் சிலிக்கா மூலக்கூறின் படிகத்தன்மை அதிகரிக்கும் போது பிணைக்கப்பட்ட நீர் மூலக்கூறுகளை குறைக்கும் போக்கை வெளிப்படுத்துகின்றன. நுண் படிகக் குவார்ட்சில் பொதுவாக அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது.[6]
தீத்தடுப்பு
தொகுநீரேற்ற சிலிக்கா அலுமினேட்டு போன்ற நீரேற்றப்பட்ட சிலிக்கா சேர்மங்கள் மெக்னீசியம் ஐதராக்சைடு மற்றும் அலுமினியம் ஐதராக்சைடு போன்ற பாரம்பரிய தீத்தடுப்பு பொருள்களுடன் இணைந்து அவற்றின் செயல்திறனை அதிகரிக்கின்றன.[8] ஒரு நீரேற்றப்பட்ட சிலிக்கா சேர்மத்தின் செயல்திறன் அதனுடன் பிணைக்கப்பட்ட இரும்பு மற்றும் தைட்டானியம் போன்ற உலோகங்களின் இருப்பைச் சார்ந்து அமைகிறது.[9]
பாதுகாப்பு
தொகுஅமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நீரேற்றப்பட்ட சிலிக்காவை பொதுவாக பாதுகாப்பான வேதிப்பொருள் என அங்கீகரித்து பட்டியலிட்டுள்ளது.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Wiilknitz, P. (November 1997). "Cleaning Power and Abrasivity of European Toothpastes" (in en). Advances in Dental Research 11 (4): 576–579. doi:10.1177/08959374970110042701. பன்னாட்டுத் தர தொடர் எண்:0895-9374. பப்மெட்:9470519. http://journals.sagepub.com/doi/10.1177/08959374970110042701.
- ↑ "Amethyst Galleries: Opal".
- ↑ "Hydrated silica gel for stabilization treatment of beer".
- ↑ https://web.archive.org/web/20071126082443/http://www.tomsofmaine.com/toms/ifs/hydrated_silica.asp வார்ப்புரு:Bare URL inline
- ↑ Hara, Anderson T.; Turssi, Cecilia P. (2017-11-01). "Baking soda as an abrasive in toothpastes: Mechanism of action and safety and effectiveness considerations" (in English). The Journal of the American Dental Association 148 (11): S27–S33. doi:10.1016/j.adaj.2017.09.007. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-8177. பப்மெட்:29056187. https://jada.ada.org/article/S0002-8177(17)30812-7/fulltext.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 Smith, Matthew R.; Bandfield, Joshua L.; Cloutis, Edward A.; Rice, Melissa S. (2013-04-01). "Hydrated silica on Mars: Combined analysis with near-infrared and thermal-infrared spectroscopy" (in en). Icarus 223 (2): 633–648. doi:10.1016/j.icarus.2013.01.024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-1035. Bibcode: 2013Icar..223..633S. https://www.sciencedirect.com/science/article/pii/S0019103513000390.
- ↑ "Hydrated Silica - an overview | ScienceDirect Topics". www.sciencedirect.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.
- ↑ Zhang, Sheng; Tang, Wufei; Guo, Jia; Jin, Xiaodong; Li, Hongfei; Gu, Xiaoyu; Sun, Jun (2018-08-01). "Improvement of flame retardancy and thermal stability of polypropylene by P-type hydrated silica aluminate containing lanthanum" (in en). Polymer Degradation and Stability 154: 276–284. doi:10.1016/j.polymdegradstab.2018.06.014. பன்னாட்டுத் தர தொடர் எண்:0141-3910. https://www.sciencedirect.com/science/article/pii/S0141391018302064.
- ↑ Fire retardancy of polymeric materials. Arthur F. Grand, Charles A. Wilkie. New York: Marcel Dekker. 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-8879-6. இணையக் கணினி நூலக மைய எண் 43569399.
{{cite book}}
: CS1 maint: others (link) - ↑ https://web.archive.org/web/20071126082443/http://www.tomsofmaine.com/toms/ifs/hydrated_silica.asp வார்ப்புரு:Bare URL inline