நீர்த்தூண்
நீர்த்தூண் (water column) என்பது நீரின் மேற்பரப்பிலிருந்து தரை வரை கணக்கிடப்படும் ஒரு கருத்துத் (கற்பனை) தூண் ஆகும்[1]. இந்தக் கருத்துத் தூண்கள், முக்கியமாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நீரின் பண்புகளை அடுக்கு வாரியாக பகுப்பாய்வு செய்து பின்பு அதனை விளக்கப் பயன்படுகிறது. ஆய்வாளர்கள் காரகாடித்தன்மைச் சுட்டெண், கலங்கல் தன்மை, வெப்பநிலை, உவர்ப்புத் தன்மை, கரைந்துள்ள தனிமங்கள், பல்வேறு உயிர்கொல்லி மருந்துகள், நோய்க்காரணிகள், வேதிப் பொருட்கள் மற்றும் உயிரிகள் போன்றவற்றைப் பகுப்பாய்வு செய்ய இந்த நீர்த்தூண்கள் உதவுகின்றன.
கடலடி உயிரினங்களின் வளர்சிதை மாற்றங்கள் பற்றிப் படிக்கும் போது, நீரை அடுக்குவாரியாகப் பிரித்து அதிலுள்ள தாதுப்பொருள்களைப் பற்றி விளக்குவது எளிதாகவும் புரிந்துகொள்ளும் விதமாகவும் இருக்கும்.
நீரின் அழுத்தம் ஒவ்வொரு ஆழத்திலும் வேறுபடுகிறது. எனவே, பாய்ம நிலையியலையும் இந்த நீர்த்துண்கள் மூலம் விளக்க முடியும்.