நீலகண்ட கிருஷ்ணன்

வைஸ் அட்மிரல் நீலகண்ட கிருஷ்ணன் PVSM, DSC (8 ஜூன் 1919 - 30 ஜனவரி 1982) இந்தியக் கடற்படையில் வைஸ் அட்மிரலாக பணியாற்றி வந்தார். 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் நடெபெறும் நேரத்தில் இவர் கிழக்கத்திய கடற்படை கமாண்டின் தளபதியாக இருந்தார். வங்காள விரிகுடாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் என்னும் இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலை இயக்கி வந்த அவர் பாகிஸ்தானின் பிஎன்எஸ் காசி என்ற நீர்மூழ்கிக்கப்பலை விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வரவைத்து தாக்கி அழித்ததில் முக்கிய பங்கு வகித்தார்.[4]


நீலகண்ட கிருஷ்ணன்

பிறப்பு(1919-06-08)8 சூன் 1919 [1]
இறப்பு30 சனவரி 1982(1982-01-30) (அகவை 62)[2]
ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா[2]
சார்பு இந்தியா
 இந்தியா
சேவை/கிளை இராயல் இந்திய கடற்படை
 இந்தியக் கடற்படை
சேவைக்காலம்1938-1947, 1947-1976
தரம் Vice Admiral
கட்டளைEastern Naval Command
INS Vikrant
INS Delhi
விருதுகள்பத்ம பூசண்[3]
பரம் விசிட்ட சேவா பதக்கம்
Distinguished Service Cross

வாழ்க்கை வரலாறு தொகு

1919 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தார். அவரது தந்தை ராவ் பகதூர் மகாதேவ நீலகண்ட ஐயர்.

கடற்படையில் பணியாற்றிய விவரங்கள் தொகு

கிருஷ்ணன் 1940 செப்டம்பர் 1ஆம் தேதி அரச இந்திய கடற்படையில் சப் லெப்டினன்ட் ஆக நியமனம் செய்யப்பட்டார்.

கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு தொகு

நீலகண்ட கிருஷ்ணனின் சுயசரிதம், ஒரு மாலுமியின் கதை (A Sailors Story)அவரது மகன் அர்ஜுன் கிருஷ்ணன் தொகுத்து வெளியிட்டார். 1982 ஜனவரி 30ஆம் தேதி அவர் ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Admiral Krishnan Takes Over as FOC-in-C Eastern Naval Command" (PDF). Press Information Bureau of India - Archive. 28 February 1971. பார்க்கப்பட்ட நாள் 3 February 2020.
  2. 2.0 2.1 "Obituary" (PDF). Press Information Bureau of India - Archive. 30 January 1982. பார்க்கப்பட்ட நாள் 9 February 2020.
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  4. "படை வீரர்களை கெளரவிப்பது அவசியம்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகண்ட_கிருஷ்ணன்&oldid=3817276" இலிருந்து மீள்விக்கப்பட்டது