நீலலோகிததாசன் நாடார்
ஏ. நீலலோகிததாசன் நாடார் (Neelalohithadasan Nadar) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். மேலும் தனது வாழ்நாள் முழுவதும் பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார்.
ஏ. நீலலோகிததாசன் நாடார் | |
---|---|
பிறப்பு | 28 ஆகஸ்ட் 1947 |
தேசியம் | இந்தியா |
பணி | அரசியல்வாதி |
வாழ்க்கைத் துணை | ஜமீலா பிரகாசம் |
1980 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தார். மேலும், இவர் 3 முறை கேரள அரசில் அமைச்சராக பணியாற்றினார். சி.எச் முகமது கோயா அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வீட்டுவசதி அமைச்சராகவும் பின்னர், 1987 முதல் 1991 வரை எ. கி. நாயனார் அமைச்சகத்திலும் விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சராக பணியாற்றினார்.[1] பின்னர், எ. கி. நாயனாரின் 3 வது அமைச்சகத்தில் 1999 முதல் 2000 வரை வன மற்றும் போக்குவரத்து அமைச்சராகவும் இருந்தார்.[2] இப்போது இவர் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் கேரள பிரிவின் மாநிலத் தலைவராக உள்ளார்.
வழக்குகள்
தொகுபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் நாடார் மீது குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டில் இவர் வன அதிகாரி பிரகிருதி இவர் வன அதிகாரி பிரகிருதி ஸ்ரீவஸ்தவா மீது தாக்குதல் நடத்தினார். 2000 ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் மற்றும் கேரள தலைமைத் தேர்தல் அதிகாரியுமான நளினி நெட்டோ மீது தாக்குதல் நடத்தினார்.[3] இவ்வழக்கில் 2004 இல் கோழிக்கோடு நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.[4] ஆனால் பின்னர் 2008 இல் மற்றொரு விரைவு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.[5]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகே. பி. அப்பி நாடார் மற்றும் அவரது மனைவி அ. குஞ்ஞுலட்சுமி ஆகியோரின் மகனாக நீலலோகிததாசன் நாடார் 1947 ஆகஸ்ட் 28 அன்று பிறந்தார். சட்டப் பட்டதாரியான இவர் இந்தியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
நாடார், ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், 2011 தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து கேரள சட்டமன்ற உறுப்பினருமான ஜமீலா பிரகாசம் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் தீப்தி தலைமைச் செயலகத்தில் பணிபுரிகிறார். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணிபுரிந்த இளம் விஞ்ஞானியான இவரது இளைய மகள் திவ்யா 2010 ஆகஸ்ட் 29 அன்று தற்கொலை செய்து கொண்டார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Council of Ministers". Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 14 June 2013.
- ↑ "Ministries Since 1957 (After the formation of Kerala State)". Archived from the original on 28 August 2014. பார்க்கப்பட்ட நாள் 14 June 2013.
- ↑ Shastri, Paromita (1 November 2004). "Battle of the Atoms". Outlook India. பார்க்கப்பட்ட நாள் 14 June 2013.
- ↑ John Mary (24 September 2004). "Molestation jail term for ex-minister". The Telegraph (India) இம் மூலத்தில் இருந்து 30 September 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040930054438/http://www.telegraphindia.com/1040924/asp/nation/story_3797291.asp. பார்த்த நாள்: 14 June 2013.
- ↑ "Neelalohithadasan Nadar acquitted". தி இந்து. 23 July 2008 இம் மூலத்தில் இருந்து 4 August 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080804122955/http://www.hindu.com/2008/07/23/stories/2008072356180600.htm. பார்த்த நாள்: 14 June 2013.
- ↑ "Profile: Smt. Jameela Prakasam". Government of Kerala. Archived from the original on 3 April 2013. பார்க்கப்பட்ட நாள் 14 June 2013.