நீலிமா குப்தே

நீலிமா எம். குப்தே (Neelima M. Gupte) ஓர் இந்திய இயற்பியலாளர் ஆவார்.[1] 1976 இல் பம்பாய் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டமும் 1978 இல் ஐஐடி மும்பையில் முதுநிலை அறிவியல் பட்டமும் 1983 இல் இசுடோனி புரூக்கில் உள்ள SUNY இல் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர்ஐதராபாத்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார், மேலும் 1985 முதல் 1993 வரை புனே பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்தார். தற்போது இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் இயற்பியல் துறையில் பேராசிரியராக உள்ளார். நேரியல் அல்லாத இயக்கவியல் மற்றும் ஒழுங்கின்மை கோட்பாடு ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்வது இவரது விருப்பமாகும்.

இவரும் இவரது பங்களிப்பாளர்களின் ஆராய்ச்சி முடிவுகளில் மல்டிஃப்ராக்டல்களின் வெப்ப இயக்கவியலின் கட்ட மாறுதல் ஒப்புமைகள், உந்துவிசை ஒத்திசைவு முறை மற்றும் சுமை தாங்கும் மற்றும் தொடர்பு வலையமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். தூய மற்றும் பயன்பாட்டு இயற்பியலின் சர்வதேச ஒன்றியத்தின் 'இயற்பியலில் பெண்கள்' குழுவின் செயல்பாடுகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Dr. N. Gupte Faculty information". Archived from the original on 24 March 2014. பார்க்கப்பட்ட நாள் 24 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலிமா_குப்தே&oldid=3882468" இலிருந்து மீள்விக்கப்பட்டது