நூலக அறிவியலில் பெண்களின் காலவரிசை

இது உலகெங்கிலும் உள்ள நூலக அறிவியலில் பெண்களின் காலவரிசையின் (Timeline of women in library science) தொகுப்பாகும்.

1796: சிசிலியா கிளீவ் சுவீடனின் முதல் பெண் நூலகர் ஆனார்.[1]

1852: பாஸ்டன் பொது நூலகத்திற்கு முதல் பெண் எழுத்தர் பணியமர்த்தப்பட்டார்.[2]

1890: எலிசபெத் புட்னம் சோஹியர் மற்றும் அன்னா எலியட் டிக்னர் ஆகியோர் அமெரிக்காவின் மாநில நூலக நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்கள் ஆவார்கள்-குறிப்பாக, மாசச்சூசெட்ஸ் நூலக ஆணையர்கள் வாரியம்.

1911: தெரசா எல்மெண்டோர்ஃப் அமெரிக்க நூலக சங்கத்தின் முதல் பெண் தலைவரானார்.[3]

1912: லில்லியன் ஹெலினா ஸ்மித் கனடாவில் முதல் பயிற்சி பெற்ற குழந்தைகள் நூலகர்.[4]

1921: ஆலிஸ் டக்ட் கேரி, அட்லாண்டாவின் ஆப்பிரிக்க அமெரிக்க குடிமக்களுக்குப் பிரிவினையின் கீழ் சேவையாற்றிய முதல் கிளையான கார்னெகி நூலகத்தின் ஆபர்ன் கிளையின் முதல் தொழில்சார்ந்த நூலகர் மற்றும் கிளைத் தலைவர்.[5]

1921: நியூயார்க் பொது நூலக அமைப்பால் பணியமர்த்தப்பட்ட முதல் போர்ட்டோ ரிக்கன் நூலகர் புரா பெல்ப்ரே.[6]

1923: வர்ஜீனியா ப்ரோக்டர் பவல் புளோரன்சு நூலக அறிவியலில் (இளங்கலை நூலக அறிவியல்) பட்டம் பெற்ற அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண்.[7] (இது இப்போது பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக உள்ளது).[8][9][10]

1940: எலிசா அட்கின்ஸ் க்ளீசன் நூலக அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் கறுப்பின அமெரிக்கர். இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்தார்.[11]

1947: ஃப்ரெடா ஃபாரெல் வால்டன் என்பவர் கனடிய நூலக சங்கத்தின் முதல் தலைவர் ஆவார். இவரே இச்சங்கத்தின் முதல் பெண் தலைவர்.[12][13]

1963: சாந்தி மிசுரா முதல் நேபாள பெண் நூலகர். நூலக அறிவியலில் முதுகலைப் படிப்புடன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு, திரிபுவன் பல்கலைக்கழக மத்திய நூலகத்தில் முதன்மை நூலகராக நியமிக்கப்பட்டார்.[14][15]

1970: கிளாரா ஸ்டான்டன் ஜோன்ஸ், டெட்ராய்ட் பொது நூலகத்தின் இயக்குநராக, அமெரிக்காவின் முக்கிய நூலக அமைப்பின் இயக்குநராகப் பணியாற்றிய முதல் பெண் (மற்றும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர்) ஆனார்.[16][17]

1970: அமெரிக்க நூலகச் சங்கத்தின் சமூகப் பொறுப்புகள் வட்ட மேசை பெண்ணியப் பணிக்குழு நூலகங்கள் மற்றும் நூலகங்களில் பாலினப் பாகுபாட்டை தீர்க்க விரும்பும் பெண்களால் 1970-ல் நிறுவப்பட்டது.[18]

1971: எஃபி லீ மோரிஸ், பொது நூலக சங்கத்தின் தலைவராகப் பணியாற்றிய முதல் பெண் மற்றும் கறுப்பினத்தவர் ஆனார்.[11]

1972: உக்ரைனில் பிறந்த சோயா ஹார்ன், மனசாட்சியின்படி தகவல்களைப் பகிர மறுத்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்ட முதல் அமெரிக்க நூலகர் ஆவார் (மேலும், இவர் பெண் என்பதால், அமெரிக்காவின் முதல் பெண் நூலகர்).[19]

1973: லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக நூலகராக பேஜ் அக்கர்மேன் ஆனார். இதனால் இவர் பெரிய அமெரிக்கா நூலகத்தின் முதல் பெண் நூலகர் என்ற பெருமையினைப் பெறுகின்றார்.[20]

1976: சூலை 18-24, 1976-ல் சிகாகோவில் நடந்த அமெரிக்க நூலக சங்கத்தின்[21] நூற்றாண்டு மாநாட்டின் போது "இனவெறி மற்றும் பாலியல் விழிப்புணர்வு குறித்த தீர்மானம்" நிறைவேற்றப்பட்டது.

1976: அமெரிக்க நூலக சங்கத்தின்[22][23] பெண்களின் நிலை குறித்த குழு 1976-ல் நிறுவப்பட்டது.

1985: சூசன் லுவானோ-மோலினா மெக்சிக்கோ செய்தி நிறுவன முதல் பெண் தலைவரானார்.[24]

1993: ஜெனிபர் டான்ஃபீல்ட் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை முதல் பெண் நூலகர் ஆவார்.[25]

1999: எலிசபெத் நிக்மேன் ஜெர்மன் தேசிய நூலகத்தின் முதல் பெண் தலைமை இயக்குநரானார்.[26]

2000: பிரித்தானிய நூலகத்தின் முதல் பெண் தலைமை நிர்வாகியாக லின் பிரிண்ட்லி நியமிக்கப்பட்டார். [27]

2002: இலண்டன் நூலக வரலாற்றில் முதல் பெண் நூலகராக இனெஸ் லின் நியமிக்கப்பட்டார்.[28]

2004: அஞ்சனா சட்டோபாத்யாய் இந்தியாவில் தேசிய மருத்துவ நூலகத்தின் முதல் இயக்குநரானார்.

2009: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் 650 ஆண்டுக்கால வரலாற்றில் ஆன் ஜார்விஸ் முதல் பெண் நூலகர் ஆவார்.[29]

2012: சோனியா எல்’கீயூரெக்சு கனடாவின் முதல் பெண் நாடாளுமன்ற நூலகர் ஆவார்.[30]

2016: லாரன்ஸ் ஏங்கல் பிரெஞ்சு தேசிய நூலகத்தின் முதல் பெண் தலைவரானார்.

2016: கார்லா ஹைடன் காங்கிரசின் முதல் பெண் நூலகர் ஆவார்.[31]

2019: லெஸ்லி வீர் கனடாவின் முதல் பெண் நூலகர் மற்றும் காப்பாளர் ஆவார்.[32]

மேற்கோள்கள்

தொகு
  1. Du Rietz, Anita, Kvinnors entreprenörskap: under 400 år, 1. uppl., Dialogos, Stockholm, 2013
  2. Garrison, Dee (1972–1973). "The Tender Technicians: The Feminization of Public Librarianship, 1876-1905". Journal of Social History 6 (2): 131–159. doi:10.1353/jsh/6.2.131. 
  3. Thomison, Dennis (1993). "Elmendorf, Theresa West". In Robert Wedgeworth (ed.). World Encyclopedia of Library and Information Services (3rd ed.). Chicago: ALA Editions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8389-0609-5., p. 280, The death of her husband had forced Theresa Elmendorf to end her unpaid status, and for the next 20 years she held the position of vice-librarian at the Buffalo Public Library. Her new role also meant an increased participation in the American Library Association; in 1911–12 she served as its President, the first woman to hold that position.
  4. "Famous Canadian Women's Famous Firsts - Academics and Librarians". Famouscanadianwomen.com. Archived from the original on 2019-03-27. பார்க்கப்பட்ட நாள் 2016-08-10.
  5. Nosakhere, Akilah S.; Robinson, Sharon E. (July 15, 1998). "Library Service for African Americans in Georgia: A Legacy of Learning and Leadership in Atlanta". Georgia Library Quarterly 35 (2): 9-12. http://www.libsci.sc.edu/histories/georgia/statehistory/Service_For_African_Americans.pdf. பார்த்த நாள்: March 16, 2022. 
  6. Rivas, Librarian Vianela (2016). "How NYC's First Puerto Rican Librarian Brought Spanish To The Shelves". NPR.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
  7. 175 Years of Black Pitt People and Notable Milestones. (2004). Blue Black and Gold 2004: Chancellor Mark A. Norenberg Reports on the Pitt African American Experience, 44. Retrieved on 2009-05-22.
  8. "Claiming Their Citizenship: African American Women From 1624–2009". Nwhm.org. Archived from the original on 2012-02-27. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  9. Celeste Kimbrough (2004-03-18). "University of Pittsburgh to Honor First African American Librarian In Plaque Dedication Ceremony April 2 | University of Pittsburgh News". News.pitt.edu. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  10. "05-3180-Oberlin-Issue No.32" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-08-10.
  11. 11.0 11.1 Smith, Katisha (2020-05-08). "13 Pioneering Black American Librarians You Oughta Know". BOOK RIOT (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
  12. "Waldon, Freda Farrell | HPL". Hpl.ca. பார்க்கப்பட்ட நாள் 2016-08-10.
  13. "CLA AT WORK". cla.ca. பார்க்கப்பட்ட நாள் 2016-08-10.
  14. "Tribhuvan University Central Library and Shanti Mishra". People's Review (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-08. பார்க்கப்பட்ட நாள் 2022-03-29.
  15. "एक 'पुस्तकालय'को अवसान". Himal Khabar (in நேபாளி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-29.
  16. "Clara Stanton Jones interviewed by Marva DeLoach," in Women of Color in Librarianship, pp.29- 57. ed. by Kathleen McCook, Chicago: American Library Association Editions, 1998.
  17. Information, Sheryl James | University of Michigan School of. "Trailblazing librarian, U-M alumna Clara Stanton Jones elected to Michigan Women's Hall of Fame | Diversity, Equity & Inclusion | University of Michigan".{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  18. "The Feminist Task Force". Archived from the original on 2017-03-20. பார்க்கப்பட்ட நாள் 2022-08-30.
  19. Egelko, Bob (2014-07-15). "Zoia Horn, librarian jailed for not testifying against protesters". SFGate. பார்க்கப்பட்ட நாள் 2016-08-04.
  20. Setzer, Dawn (2006-03-09). "Obituary: Page Ackerman, Former UCLA University Librarian". UCLA News. பார்க்கப்பட்ட நாள் 2006-12-13.
  21. "American Library Association Institutional Repository, News Release: American Library Association, Public Information Office, American Library Association, 50 East Huron Street, Chicago, Illinois 60611, 12 944-6780, From: Peggy Barber, Director, Public Infonnation Office, FOR IMMEDIATE RELEASE, Resolution on. Racism and Sexism Awareness" (PDF).
  22. "American Library Association, Committee on the Status of Women in Librarianship".
  23. Kathleen de la Peña McCook and Katharine Phenix, On Account of Sex: An Annotated Bibliography on the History of Women in Librarianship, 1977–1981 (Chicago: ALA, 1984) Katharine Phenix and Kathleen de la Peña McCook (1982–1986) (Chicago: ALA, 1989); later years by Lori A Goetsch; Sarah Watstein (1987–1992) (Metuchen: Scarecrow Press, 1993) Betsy Kruger; Catherine A Larson; Allison A Cowgill (1993–1997) Metuchen: Scarecrow Press, 2000).
  24. REFORMA (Association). National Conference. The Power of Language: Selected Papers from the Second REFORMA National Conference. pp. 44, 45–.
  25. Department of the Official Report (Hansard), House of Commons, Westminster. "House of Commons Hansard Debates for 21 Jul 1999 (pt 21)". Publications.parliament.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-08-12.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  26. "History". Deutsche National Bibliothek. Archived from the original on 6 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 14 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  27. "Woman to head British Library". https://www.theguardian.com/uk/2000/feb/09/3. 
  28. yesterday. "History of The London Library". Londonlibrary.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-08-10.
  29. Healy, Alison (2009). "Cambridge library's first female librarian". The Irish Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-24.
  30. "Meet Canada’s first female Parliamentary librarian: Sonia L’Heureux". The Hill Times, July 9, 2012.
  31. "Carla Hayden is officially sworn in as the first woman and African-American librarian of Congress". Vox. 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-14.
  32. "Leslie Weir appointed as Librarian and Archivist of Canada". Librarianship.ca. 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.