நெக்ரோஸ் ஒக்சிடென்டல்

நெக்ரோஸ் ஒக்சிடென்டல் (Negros Occidental) என்பது பிலிப்பீன்சின் விசயாசின், நெக்ரோஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள இரு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் பகோலொட் ஆகும். இம்மாகாணம் 1890 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ரோஜர் மெர்காடோ (Alfredo G. Marañon, Jr.) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 7,802.54 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக நெக்ரோஸ் ஒக்சிடென்டல் மாகாணத்தின் சனத்தொகை 2,497,261 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 8ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 8ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 601 கிராமங்களும், 19 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் பிலிப்பினோ, ஆங்கிலம் உள்ளடங்கலாக மூன்று பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணம் நெக்ரோஸ் தீவின் மேற்குப் பக்கத்தில் உள்ளது. மற்றையது நெக்ரோஸ் ஒரியென்டல் மாகாணம் ஆகும். இங்கு வசிக்கும் 85.71% ஆன மக்கள் ரோமன் கத்தோலிக்கர்கள் ஆவர்.

நெக்ரோஸ் ஒக்சிடென்டல்
பிலிப்பீன்சின் சீனிக்கிண்ணம்
மாகாணம்
மாகாணத் தலைமையகம்
மாகாணத் தலைமையகம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்நெக்ரோஸ்
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)

மேற்கோள்கள்தொகு

  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. 21 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Population of the provine". Archived from the original on 2011-07-09. 2017-01-05 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)

வெளி இணைப்புகள்தொகு

அதிகாரபூர்வ இணையத்தளம்