நெடுங்காடி வங்கி
நெடுங்காடி வங்கி என்பது ராவ் பகதூர் டி. எம். அப்பு நெடுங்காடியால் 1899ஆவது ஆண்டில் தொடங்கப்பட்ட வணிக வங்கியாகும்.இவ்வங்கியே தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதலாவது தனியார் துறை வங்கியாகும். இவ்வங்கி 1913ஆம் ஆண்டில் கூட்டுருவாக்கம் செய்யப்பட்டது. 1964இல் திருச்சூரில் இயங்கிய கொச்சி தேசிய வங்கியை தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதற்கு அடுத்த ஆண்டில், 1934 சனவரி 25 முதல் கோவையில் செயல்பட்டுவந்த கோயமுத்தூர் தேசிய வங்கியையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இவ்வாறு இணைத்துக் கொண்டபோது கொச்சி தேசிய வங்கிக்கு 3 அலுவலகங்களும், கோயமுத்தூர் தேசிய வங்கிக்கு ஒரேயொரு அலுவலகமும் செயற்பட்டு வந்தன.[1][2][3]
பின்னர், புது தில்லி, கல்கத்தா, சென்னை, மும்பை, அகமதாபாத், உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கிளைகளை தொடங்கிய இவ்வங்கி மொத்தமாக 174 கிளைகளுடன் இந்தியா முழுவதும் செயற்பட்டு வந்தது. 2002ஆம் ஆண்டில், இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவானது நெடுங்காடி வங்கியில் நடந்த வணிக நடவடிக்கைகளில் இருந்த சில முரண்பாடுகளை சுட்டிக்காட்டினர். எனவே 2003ஆம் ஆண்டில் இவ்வங்கியை 2003 பஞ்சாப் தேசிய வங்கி தன்னுடன் இணைத்துக் கொண்டது. இவ்விணைப்பு நடந்த நேரத்தில் நெடுங்காடி வங்கியின் பங்கு மதிப்பானது பூஜ்ய மதிப்பில் இருந்தது. இதன் காரணமாக நெடுங்காடி வங்கியின் பங்குதாரர்களுக்கு எந்தவித தொகையும் கிடைக்கவில்லை